ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்
ஸ்ரீபட்டநாத முகாப்ஜ மித்ரர் :
ஸ்வாமியின் க்ரந்தங்களில் அருளிச்செயலின் ப்ராவண்யத்தை அநுபவிக்க நாம் பகவத் கீதையில் மேலும் சில இடங்களைப் பார்ப்போம். ஸ்வாமியின் விளக்கங்கள் தனித்தன்மை வாய்ந்ததாய் இருக்கக் காரணம் அருளிச்செயல்களின் பிரபாவமே எனக் காட்டுவதே நம் நோக்கம்.
[பெருமாள் கோயில் ஆழ்வார் ஆசார்யர்கள்]
“சதுர்விதா பஜந்தே மாம்” (https://githa.koyil.org/index.php/7-16/)எனும் ச்லோகத்தில் நான்கு நல்லோர்கள் காட்டப்படுகிறார்கள் – (1) ஆர்த்தா: (2) ஜிஜ்ஞாஸு: (3) அர்த்தார்த்தி (4) ஞாநி. இந்நான்கு வகைப்பட்ட நல்லோர்களையும் பற்றிய வ்யாக்யாதாக்களின் விவரணங்களில் வேறுபாடுகள் உள்ளன.
ஏழாம் அத்யாயத்தில் எம்பெருமான், தன்னைச் சரண் அடைவதன் மூலம் மட்டுமே (யே மாமேவ ப்ரபத்யந்தே) சேதனர்கள் மாயையிலிருந்து விடுபடமுடியும் (தே மமா மாயாம் தரந்தி) எனத் தன் மிகப்பெரிய மாஹாத்ம்யத்தை (தைவீ மாயா) உபதேசிக்கிறான்.
(எம்பெருமான் திருவடித்தாமரைகளில் ஆழ்வாரின் தீர்க்க சரணாகதி)
இந்த ச்லோகத்தில் எம்பெருமான் தன்னிடம் சரணம் புகுவோர் நான்குவகைப் பட்ட அடியார்கள் என்கிறான். சரணம் புகுந்தோர் “ப்ரபத்யந்தே” என்றவன், இப்போது “பஜந்தே” என்கிறான். பஜந்தே என்பதை ஸ்ரீ சங்கரர், “சேவந்தே” = பணிபுரிவோர் என்று விளக்கினார். பக்தி, சரணம் புகுவது இரண்டின் உள்நோக்கம் பணிபுரிவது. இந்நான்கு வகை நல்லோர்களுமே கிருஷ்ணனின் அடியார்களே.
இதற்கு விளக்கம் தருகையில், ஸ்ரீ சங்கரர், “ஆர்த்தா: = தஸ்கர வ்யாக்ர ரோகாதினா அபிபூதா: ஆபன்ன: ; ஜிஞ்ஞாசு = பகவத் தத்த்வம் ஞாதுமிச்சதி ய: ; அர்த்தார்த்தி = தனகாம: ; ஞானி = விஷ்ணோ ஸ்தத்வவித்“ என்றெழுதினார்.
இந்நான்கு அடியார்களும் தங்களுக்கு வேண்டியதைக் கோருவதில் வேறுபடுகிறார்கள். முதல் வகையினர் திருடர், புலிபோலும் விலங்குகள், வ்யாதிகளினின்றும் பாதிப்பில் தப்பப் பிரார்த்திக்கிறார்கள். இரண்டாமவர் பகவத் தத்வம், கிருஷ்ண தத்வம் அறியும் ஆவலில் இருக்கிறார்கள். மூன்றாமவர்கள் பொருட்செல்வம் விரும்புகிறார்கள். நான்காமவர் விஷ்ணு தத்வம் உணர்ந்து “ஞானி”கள் ஆகிறார்கள்.
(திருமலையில் இராமாநுசர்)
ஸ்வாமி இவ்வாறு பக்தர்கள் நால்வகைப் படுவதன் காரணம் வேதாந்தத்தில் மூன்று தத்வங்கள் சித், அசித், ஈச்வரன் என்றிருப்பதே என நிறுவுகிறார்.
ஆத்மா, தாமே ஈச்வர ஸ்வரூபமான அசித்தை விரும்பித் தேடுகிறது, இதிலேயே ஈச்வரனடியார்களின் வேறுபாடு தொடங்குகிறது. ஐச்வர்யத்தை தேடுவதில் இருவகைகளுண்டு – ஒன்று முன்பு இருந்து தற்போது இழக்கப்பட்டுள்ளது (ப்ரஷ்டைச்வர்யம்), மற்றது முற்றிலும் புதிய ஐச்வர்யம் (அபூர்வைச்வர்யம்). இப்பகுப்பு தனக்கும், ஈச்வரனுக்கும் பொருந்தாது. ஏனெனில் கைவல்ய ப்ராப்தியோ பகவத்ப்ராப்தி மோக்ஷமோ நிரந்தரமானது, அதை மீண்டும் பெறவோ இழக்கவோ முடியாது. அதைப் புதிதாகக் கேட்டுபெறலாம். ஆகவே இந்நான்கு பகவத் அடியார்களும் ப்ரஷ்டைச்வர்ய காமர், அபூர்வைச்வர்யகாமர், கைவல்யகாமர், பகவத்காமர் என்றாகிறார்கள்.
ஸ்வாமிக்கு இந்தத் தனிப்பெரும் விளக்கம் எங்ஙனம் பெற முடிந்தது?
திருப்பல்லாண்டில் பெரியாழ்வார் பக்தர்களை நால்வகையாகப் பகுத்ததிலிருந்து ஸ்வாமிக்கு இச்செம்பொருள் கிட்டியது. முதல் இரு பாசுரங்களுக்குப்பின் மும்மூன்று பாசுரங்களில் இப்பொருள் வெளிப்படுகிறது. ஒவ்வொரு மூன்று பாசுரமும் ஒருவகை பக்தரை விவரிக்கிறது.
(ஸ்ரீ பட்டநாத முகாப்ஜ மித்ரர்)
எடுத்துக்காட்டாக, “வாழாட்பட்டு” என்னும் பாசுரம் பகவத்காமரையும், “ஏடுநிலம்” கைவல்யகாமரையும், ”அண்டக்குலத்து” அபூர்வைச்வர்யகாமரையும் ப்ரஷ்டைச்வர்யகாமரையும் விளிக்கிறது. இதை விரிவாக அறியப் பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யானத்தைப் பார்க்கலாம் (https://divyaprabandham.koyil.org/index.php/2015/06/thiruppallandu/). திருப்பல்லாண்டில் பெரியாழ்வார் மங்களாசாசன ரூபமாகக் கைங்கர்யம் செய்ய அடியார்களைப் பிரார்த்திக்கிறார்.
இராமாநுசர் பகவத்கீதையில் உள்ள பக்தர் பகுப்பை விளக்க, திருப்பல்லாண்டிலுள்ள இதேபோன்ற பகுப்பை இரு ஸ்ரீசூக்திகளையும் மேலும் பொலிவேறும்படி எடுத்தாள்கிறார். ஆனதுபற்றியே ஸ்ரீமத் மணவாளமாமுநிகளும் ஸ்வாமியை பெரியாழ்வாரின் திருமுகத்தாமரையை உகப்பித்து மலர்த்தும் சூர்யன் “ஸ்ரீ பட்டநாத முகாப்ஜ மித்ரர்” (https://divyaprabandham.koyil.org/index.php/2015/10/yathiraja-vimsathi-tamil-slokam-2/) என்று கருதுகிறார்.
அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்
ஆதாரம்: https://granthams.koyil.org/2018/02/12/dramidopanishat-prabhava-sarvasvam-15/
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org