ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்
ஆழ்வாரும் ஆழ்வானும்
அதிமானுஷ்ஸ்தவத்தில் மூன்றாம் ச்லோகமும் ஆழ்வானுக்கு ஆழ்வாரிடமுள்ள பக்தியைக் காட்டுகிறது:
ஸ்ரீமத்-பராங்குச-முநீந்த்ர-மநோவிலாஸாத் தஜ்ஜாநுராகரஸமஜ்ஜநம் அஞ்ஜஸாப்ய I
அத்யாப்யநாரதததுத்தித-ராகயோகம் ஸ்ரீரங்கராஜசரணாம்புஜம் உந்நயாம: I I
இந்த ச்லோகத்தின் உயிர்நாடியான பகுதி “ஸ்ரீரங்கராஜசரணாம்புஜம் உந்நயாம:” என்பது ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளைக் குறிக்கிறது. ஸாதாரண லௌகிகக் கவிகள் திருவடித் தாமரைகள் சிவந்ததன் காரணம் அவற்றின் மென்மை என்பர், அல்லது மென்மை காரணமாக நடை முதலிய வினைப்பாடுகள் என்பர்.
ஆனால் ஸ்ரீவைஷ்ணவர்களின் சிரோமணியான ஆழ்வார் அப்படிச் சொல்லவல்லாரல்லரே. திருவடிகள் சிவந்ததற்கு அவர் ஓர் அழகிய காரணம் காட்டுகிறார்.
ஆழ்வாரின் இதயத்தை அடைந்த எம்பெருமான் திருவடிகள் அங்கே பக்தியில் நனைந்து அன்பின் நிறமான சிவப்பை எய்தி அவ்வண்ணமே இருக்கின்றன என்பதாம்.
எம்பெருமான் மீது ஆழ்வார் கொண்ட காதலைவிடப் பத்து மடங்கு போலும் ஆழ்வார் மீது ஆழ்வான் கொண்ட காதல். அதிமானுஷஸ்தவத்தின் இரண்டாம் பாதி க்ருஷ்ணாவதார அநுபவமாய் இருப்பது முழுமையாக ஆழ்வாரின் திவ்ய ஸ்ரீ ஸூக்திகளாலேயே அமைந்தது.
ஸுந்தர பாஹு ஸ்தவத்தில் பன்னிரண்டாவது ச்லோகம்:
வகுளதரசரஸ்வதிவிசக்த-ஸ்வரஸபாவ-யுதாஸு கின்னரீஷு I
த்ரவதி த்ருஷதபி ப்ரசக்தகானாஸ்விஹ வனசைலததீஷு ஸுந்தரஸ்ய ||
இங்கு ஆழ்வான் கின்னரப் பெண்கள் திருமாலிருஞ்சோலை ஸுந்தரத் தோளுடையானைத் தொழ வந்து தம் இனிய குரலில் ஆழ்வார் பாசுரங்களை அப்பாசுரங்களின் தகுதிக்கேற்ப மிகச் சிறப்பாகப் பாடவும், அப்பாட்டின் இனிமையில் கற்களும் உருகிப் பெருகி ஓட அதுவே நூபுர கங்கை ஆயிற்று என்கிறார்.
ஆழ்வான் “மரங்களும் இரங்கும் வகை மணிவண்ணா என்று கூவுமால்” என்பதை நினைவு கூறுகிறார். ஆழ்வாரின் தெய்வீகக் காதலில் பிறந்த பாட்டுகள் கல்லையும் கரையச் செய்யும். எனில் சாதாரண மானிடர்களைப் பற்றி என் சொல்ல? அவை எல்லா மானிடர்களையும் கரையேற்ற வல்லவை.
ஆழ்வான் ஆழ்வார் பாட்டுகளை இம்மண்ணுலகர் மட்டுமன்றி எவ்வுலகத்தாரும் எம்பெருமானைத் தொழும்போது பாடுவதாகக் கூறுகிறார். இவ்வாறு ஆழ்வான் ஆழ்வார் பாசுரங்களைத் தம் ஒப்பற்ற பாணியில் புகழ்கிறார்.
வரதராஜ ஸ்தவத்தில் (59) ஆழ்வான் எம்பெருமான் திருவடிகள் எங்கெல்லாம் சென்று ஆனந்தமாய் இளைப்பாறுகின்றன என்று பட்டியலிடுகிறார். இப்பட்டியலில் “யஸ்ச மூர்தா சடாரே” என்று சேர்க்கிறார். எம்பெருமானுக்கு இன்பமாய் இளைப்பாறும் இடமாக ஆழ்வார் திருமுடி காட்டப் படுகிறது.
அநேகமாக எல்லா ஸ்தவங்களுமே ஆழ்வார் பாசுரங்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஆகிலும் சில எடுத்துக் காட்டுகள் ஸ்ரீ காஞ்சீ ஸ்வாமியின் அழகிய உரைகளில் கண்டுகொள்ளக் கூடியவை காட்டப் படுகின்றன.
இவற்றிலிருந்து எவ்வாறு ஆழ்வார் திருவாக்கு ஆழ்வான் ஸ்தவங்களில் வந்துள்ளன என விளங்கும்.
ஆழ்வான் நூல் | ஆழ்வான் திருவாக்கு | ஆழ்வார் திருவாக்கு | ஒப்பீடு |
ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் (7) | ஊர்த்வ பும்ஸாம் மூர்த்னி சகாஸ்தி | (1) திருமாலிருஞ்சோலைமலையே என் தலையே
(2) என் உச்சியுளானே |
ஆழ்வார் எம்பெருமான் மற்ற திவ்ய தேசங்களில் நிற்பதுபோல் தம் தலைமேல் நிற்பதாகக் கூறுகிறார். ஆழ்வான் எம்பெருமான் ஆழ்வார் போன்ற மஹாத்மாக்களின் சிரஸ்ஸில் இருப்பதாகக் கூறுகிறார். ஆழ்வார் திவ்யதேசங்களிற்போல் தம் சிரஸ்ஸிலும் இருப்பதாகச் சொல்கிறார். |
ஸ்ரீவைகுண்ட ஸ்தவம் (10) | ப்ரேமாக்ர விஹ்வலித கிரா:புருஷ:புராணா:தவம் துஷ்டுவு:மதுரிபோ! மதுரைர்வசோபி: | (1) உள்ளெலாம் உருகி குரல் தழுத்து ஒழிந்தேன்
(2) வேவாரா வேட்கை நோய் மெல்லாவி உள் உலர்த்த (3) ஆராவமுதே அடியேனுடலம் நின் பாலன்பாயே நீராயலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே |
ஆழ்வார் எம்பெருமானின் காதல் அனுபவத்தால் தம் குரல் மேன்மையாகித் தழுதழுத்துப் போனதைச் சொன்னார்.
ஆழ்வான் இதையே, மஹாத்மாக்கள் எம்பெருமானிடம் பக்தியால் நைந்து குரல் மெலிந்துபோனதைச் சொல்லியருள்கிறார்.. |
ஸ்ரீவைகுண்ட ஸ்தவம் (10) | ப்ரேமாக்ர விஹ்வலித கிரா:புருஷ:புராணா:தவம் துஷ்டுவு:மதுரிபோ! மதுரைர்வசோபி: | (1) கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே
(2)தொண்டர்க்கமுதுண்ண, சொல் மாலைகள் சொன்னேன் |
ஆழ்வார் தம் சொற்கள் எம்பெருமானுக்கும் நித்யசூரி களுக்கும் தொண்டர்களுக்கும் இனிப்பாயும் உகப்பாயும் உள்ளன என்கிறார். ஆழ்வான், ஆழ்வார் போலும் மஹான்களின் சொற்கள் இனியன என்கிறார் |
ஸுந்தரபாஹு ஸ்தவம்(4) | உததிகமண்டரார்த்தி-மாந்தன-லப்த-பயோமதுர-ரசேந்திரா ஹ்வாசுதா சுந்தரதோ: | ஆண்டாள் மந்தரம் நாட்டியன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட |
நேர் மொழியாக்கம் (இந்த ச்லோகம் க்ஷீராப்தி கடைவது பற்றிப் பேசுகிறது) |
ஸுந்தரபாஹுஸ் தவம் (5) | சசதரரிந்கணாத்யசிகாம் | மதிதவழ் குடுமி மாலிருஞ்சோலை | நேர் மொழியாக்கம் |
ஸுந்தரபாஹுஸ் தவம் (5) | பிதுரித -சப்தலோக-ஸு விஸ்ருங்கள-ரவம் | அதிர்குரல் சங்கத்து அழகர்தம் கோயில் | நேர் மொழியாக்கம் |
ஸுந்தரபாஹு ஸ்தவம் (8) | முழு ச்லோகம் | பெரியாழ்வார்
கருவாரணம் தன்பிடி தண் திருமாலிருஞ்சோலையே |
நேர் மொழியாக்கம் |
ஸுந்தரபாஹு ஸ்தவம் (16,17) | ப்ராரூட-ச்ரியம் -ஆரூட-ஸ்ரீ: | ஆண்டாள்
ஏறு திருவுடையான் |
நேர் மொழியாக்கம் |
ஸுந்தரபாஹு ஸ்தவம் (40) | முழு ச்லோகம் | கொள்கின்ற கோளிருளை சுகிர்ந்திட்ட மாயன் குழல் | நேர் மொழியாக்கம் |
ஸுந்தரபாஹு ஸ்தவம் (49) | முழு ச்லோகம் | ஆண்டாள்
களி வண்டெங்கும் கலந்தாற்போல் மிளிர நின்று விளையாட திருமங்கை ஆழ்வார் மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின்தாழ மகரம்சேர் குழை இருபாடிலங்கியாட |
ஆழ்வானின் ஸ்லோகம் ஆண்டாள் மற்றும் திருமங்கை ஆழ்வாரின் அனுபவத்தை உள்வாங்கியது |
ஸுந்தரபாஹு ஸ்தவம் (55) | முழு ச்லோகம் | ஆண்டாள்
செங்கமல நாண்மலர்மேல் தேனுகருமன்னம்போல் |
நேர் மொழியாக்கம் |
ஸுந்தரபாஹு ஸ்தவம் (62 & 63) | முழுச்லோகம் | தண்டாமரை சுமக்கும் பாதப் பெருமானை | ஆழ்வார் பாசுரத்தில் “சுமக்கும்” எனும் சொல்லின் ரஸத்தை ஆழ்வான் அநுபவிக்கிறார் . |
ஸுந்தரபாஹு ஸ்தவம் (92) | முழுச்லோகம் | திருமங்கை ஆழ்வார்
நிலையிடமெங்குமின்றி |
நேர் மொழியாக்கம்
ஆழ்வான் ஆழ்வாரின் சந்தத்திலேயே பாடியுள்ளார் |
அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்
ஆதாரம்: https://granthams.koyil.org/2018/02/24/dramidopanishat-prabhava-sarvasvam-26-english/
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org