வரதன் வந்த கதை 14-1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வரதன் வந்த கதை

<< பகுதி 13

உன்னுடைய வடகரையில் நான் நித்தியமாக வாஸம் செய்யப் போகிறேன் என்று வேகாஸேதுப் பெருமான் சொன்னதை கவனமுடன் கேட்டான் பிரமன் !

மேலும் உனக்கான பரிசு விரைவில் என்று அவன் திருவாய் மலர்ந்தருளியதும் அவன் ( பிரமன் ) நெஞ்சில் நிழலாடின !

தேவர்களுக்கும் ரிஷி முனிவர்களுக்கும் ஏற்பட்ட (யாக பச ) பிரச்சினையும், தான் சாபம் பெற்றதும், ஸரஸ்வதி கோபித்துச் சென்றதும் , பூமியில் வேள்விக்குத் தகுந்த இடம் தேடி அலைந்ததும் , அசரீரி வாக்கும், அதனைத் தொடர்ந்து தான் காஞ்சிக்கு வந்ததும் , ஸரஸ்வதியினாலும் அஸுரர்களாலும் பல தடைகள் தனக்கும் யாகத்திற்கும் ஏற்பட்டதும் , ஓரோர் முறையும் எம்பெருமான் ரக்ஷித்ததும் !! பிரமன் சிந்தித்துக் கொண்டிருந்தான் !

அப்பப்பா !!!! குறைவான சமயத்தில் நிறைவாக எத்தனை நிகழ்ச்சிகள் நடந்தேறி விட்டன !

எண்ணிலாப் பெரு மாயனே ! உன்னை மறவாமையே யான் வேண்டிடும் மாடு (செல்வம்). எனக்குற்ற செல்வம் நீயேயன்றோ !

நின் பெருமையைச் சிந்தித்திருப்பதே நமக்குச் சேமமாகும் (நன்மையாகும்) !

பரிசாக உனைப் பெறும் நாளை நான் ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளேன் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் !

ஸரஸ்வதியை தன்னுடன் சேர்த்துக் கொண்டு வேள்வியை குறையறச் செய்து வரலானான் !

ஒரு நன்னாளில் , உத்தர வேதி (அக்னி ஸ்தாபனம் செய்து யாகம் செய்யுமிடம்) நடுவில், ஆயிரம் கோடி ஸூர்யர்கள் ஒரு சேர உதித்தாற் போல் , ஒரு மஹா தேஜஸ்ஸு தோன்றிற்று !!

வந்தான் வரதன் !!!! வந்தான் வரதன் !!!! என்று அனைவரும் ஆனந்தக் கூத்தாடினர் !!

தேவர்களும் , நித்ய முக்தர்களும் “காளங்கள் வலம்புரி கலந்தெங்குமிசைத்து” தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் !!

வரதனுடைய தாமரைக் கண்களோடும், செங்கனி வாயொன்றினோடும், செல்கின்ற தம் நெஞ்சங்களைத் தொலைந்து போகாது காத்திடப் பாடுபட்டுக் கொண்டிருந்தனர் அனைவரும் !!

அத்யாச்சர்யமான ப்ராதஸ் ஸவந காலத்தில் வரதன் அவதாரம் !!

அது என்ன ப்ராதஸ் ஸவந காலம் ?!

அறியக் காத்திருப்போம் !!

“வாஜிமேதே வபா ஹோமே தாதுருத்தர வேதித:
உதிதாய ஹுதாதக்னேருதாராங்காய மங்களம் ”

ஸ்ரீ தேவராஜ மங்களம் – மணவாள மாமுனிகள் !!

******************************************************************************

( இன்று ) வரதன் வந்து விட்டான் !!

மேலும் குணானுபவங்களுக்கு (அவனுடைய பெருமைகளை அனுபவிப்பது) அடுத்த பகுதிகளுக்குக் காத்திருக்கவும் !!

அடியேன் – அக்காரக்கனி தி.அ.ஸ்ரீநிதி தாஸன் !

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

1 thought on “வரதன் வந்த கதை 14-1”

Leave a Comment