அந்திமோபாய நிஷ்டை – 18 – முடிவுரை – ஆசார்ய நிஷ்டையின் பெருமைகள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

அந்திமோபாய நிஷ்டை

<< பகுதி 17

இப்படி “ஸ்தாவராண்யபி முச்யந்தே” என்றும், “பஶுர்மநுஷ்ய: பஷீ வா” என்றும் இத்யாதிகளிலே சொல்லுகிறபடியே ஸகலாத்மாக்களும் உஜ்ஜீவிக்க வேணுமென்ற திருவுள்ளத்தையுமுடையராய், பரமதயாவான்களாயிருந்துள்ள நம் ஆசார்யர்களுடைய அபிமாநமாகிற அந்திமோபாயத்திலே ஒதுங்கித் தாங்கள், ஸர்வஜ்ஞராகையாலே ஸாராஸாரவிவேகரில் தலைவராய், செய்த வேள்வியர் என்கிறபடியே க்ருதக்ருத்யராய், எப்போதும் மங்களாஶாஸநபரராய், “நானும் பிறந்தமை பொய்யன்றே” , “தங்கள் தேவரை வல்லபரிசு வருவிப்பரேல் அதுகாண்டும்” என்று சொல்லுகிறபடியே பழுதாகாத வழியை அறிந்து வேறாக ஏத்தியிருக்குமவனைப்பற்றித் தெளிவுற்று வீவின்றி, எல்லாம் வகுத்தவிடமென்று விஶ்வஸித்து மார்பிலே கைவைத்துக் கோடையிலே குளிர்காற்றடிக்க மிகவும் ஸுகோத்தரராய், “சிற்றவேண்டா” என்கிறபடியே ஒரு பரபரப்பற்று (குருபரம்பரையைப் பற்றுகை) “தேவுமற்றறியேன்” என்றிருக்கும் ஶ்ரீமாந்களான அதிகாரிகள்: ஆழ்வார் திருமகளாராண்டாள், நம்மாழ்வார் திருவடிகளிலே ஶ்ரீமதுரகவியாழ்வார், நாதமுனி திருவடிகளிலே குருகைக்காவலப்பன், ஆளவந்தார் திருவடிகளிலே தெய்வவாரியாண்டான், எம்பெருமானார் திருவடிகளிலே வடுகநம்பி, நம்பிள்ளை திருவடிகளிலே பின்பழகிய பெருமாள் ஜீயர், வடக்குத் திருவீதிப் பிள்ளை, பிள்ளை லோகாசார்யர் திருவடிகளிலே கூரகுலோத்தமதாஸ நாயன், மணல்பாக்கத்து நம்பியார், திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளிலே நம்முடைய ஜீயர். இப்படியிருக்கும் உத்தமாதிகாரிகள் இவ்வாசார்யர்களிடத்திலே இன்னமும் உண்டாயிருக்கும் கண்டுகொள்வது.

ஆழ்வார் திருமகளாராண்டாள்
நம்மாழ்வார் திருவடிகளிலே ஶ்ரீமதுரகவியாழ்வார்
நாதமுனி திருவடிகளிலே குருகைக்காவலப்பன்
ஆளவந்தார் திருவடிகளிலே தெய்வவாரியாண்டான்

எம்பெருமானார் திருவடிகளிலே வடுகநம்பி

நம்பிள்ளை திருவடிகளிலே பின்பழகிய பெருமாள் ஜீயர்

வடக்குத் திருவீதிப் பிள்ளை, பிள்ளை லோகாசார்யர் திருவடிகளிலே கூரகுலோத்தமதாஸ நாயன், மணல்பாக்கத்து நம்பியார்

திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளிலே நம்முடைய ஜீயர்

நம்முடைய ஜீயர் திருவடிகளிலே இந்நிஷ்டைக்கு அதிகாரிகளாயிருக்கும் முதலிகள் பலருமுண்டு. மற்றும் இக்காலத்தில் ஸச்சிஷ்ய – ஸதாசார்ய – லக்ஷணம் உண்டாயிருக்கும் ஜ்ஞாநாதிகரிடத்திலும் காணலாம். இனிமேலும் ராமாநுஜ ஸித்தாந்தம் நடக்கும் காலத்தளவும் “கலியுங்கெடும் கண்டு கொண்மின்” என்கிறபடியே ஏவம்பூதரான அதிகாரிகளும் ஸுசிதர். “வேதஶாஸ்த்ரரதாரூடா: ஜ்ஞாநகட்கதராத்விஜா:| க்ரீடார்த்தம பியத்ப்ரூயுஸ்ஸதர்ம: பரமோ மத:” என்றும், “அதிகந்தவ்யாஸ்ஸந்தோயத்யபி குர்வந்தி நைகமுபதேஶம்| யாஸ்தேஷாம் ஸ்வைரகதாஸ்தா ஏவ பவந்தி ஶாஸ்த்ரார்த்தா:” என்றும், ‘அல்லிமலர்ப்பாவைக்கன்பரடிக்கன்பர் சொல்லுமவிடு சுருதியாம்” என்றும், “ததுக்திமாத்ரம் மந்த்ராக்ர்யம்” என்றும் சொல்லுகிறபடியே ஜ்ஞாநாதிகரானவர்கள் “நாவகாரியம் சொல்லிலாதவ”ர்களாகையாலே விநோதமாக ஒரு வார்த்தை அருளிச் செய்ததும் நல்வார்த்தையாயிருக்குமதொழிய மறந்தும் அபார்த்தமாக ஒரு வார்த்தையும் அருளிச்செய்யார்களாகையாலே அவர்களுடைய திவ்யஸுக்திகளெல்லாம்  ஸகலவேதாந்த ஸாரமான திருமந்த்ரமாயிருக்கும். ‘ருசோயஜும்ஷி ஸாமாநி ததைவாதர்வணாநி ச| ஸர்வமஷ்டாக்‌ஷராந்தஸ்தம் யச்சாந்யதபி வாங்மயம்” என்கிறபடியே ஸகலப்ரமாணப்ரமேயங்களும் ததந்தர்பூதமாயிருக்கும்.

ஆகையாலே நம்முடைய பெரியோர்களெல்லாரும் திருமந்த்ரத்தில் மூன்று பதத்திலும் சொல்லப்படுகிற ஶேஷத்வ – பாரதந்த்ர்ய – கைங்கர்யங்கள் ப்ரதம பர்வமான ஈஶ்வர விஷயத்திலே அரைவயிறாய், சரம பர்வமான ஆசார்ய விஷயத்திலே பரிபூர்ணமாக ஸித்திக்கும் என்னும் இவ்வர்த்தம் இம்மந்த்ரத்தில் தாத்பர்யார்த்தமாகையாலே அத்தை உட்கொண்டு ஸம்ஸ்க்ருதமாகவும், த்ராவிடமாகவும், மணிப்ரவாளவாகமவும், ஏககண்டமாக அருளிச்செய்த ப்ரமாணபலத்தாலே ஆசார்யாபிமாநமாகிற அந்திமோபாயத்திலே ஸுப்ரதிஷ்டிதராய், “தென்குருகூர்நம்பி என்னக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே”, “நாவினால் நவிற்றின்பமெய்தினேன்” என்றும், “எந்நாவிருந்தெம்மையனிராமாநுசனென்றழைக்கும்”, “இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னிவாழ நெஞ்சே சொல்லுவோமவன் நாமங்களே”, “உன் நாமமெல்லாமென்றன் நாவினுள்ளே அல்லும்பகலும் அமரும்படி நல்கு அறுசமயவெல்லும் பரம இராமாநுச” என்றும், “குரோர்வார்த்தாஶ்ச கதயேத் – குரோர்நாம ஸதா ஜபேத்” என்றும் சொல்லுகிறபடியே ஶேஷியாய், ஶரண்யனாய், ப்ராப்யனாய், “மாதா பிதா யுவதய:”, “அன்னையாயத்தனாய்”, “தந்தை நற்றாய் தாரம் தனயர் பெருஞ்செல்வம் என்றனக்கு நீயே எதிராசா” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே ஸர்வவிதபந்துவுமாயிருந்துள்ள ஸதாசார்யனைக் குறித்துப் பண்ணும் ப்ரபத்தியான ப்ரதம நமஸ்ஸை ஸதாநுஸந்தேயமான மந்த்ரமென்றும், “குருரேவ பரம் ப்ரஹ்ம”, “தேனார்கமலத் திருமாமகள் கொழுநன் தானே குருவாகி”, “யஸ்ய ஸாக்ஷாத் பகவதி ஜ்ஞாநதீபப்ரதே குரௌ”, “பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகி வந்து” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே அவனே பரதேவதை என்றும், “யேநைவ குருணாயஸ்ய ந்யாஸவித்யா ப்ரதீயதே| தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் ஸர்வ ஏவ ஸ:”, “வில்லார் மணி கொழிக்கும் வேங்கடப் பொற்குன்று முதல் சொல்லார் பொழில் சூழ் திருப்பதிகள் எல்லாம் மருளாம் இருளோட மத்தகத்துத் தன் தாள் அருளாலே வைத்த அவர்”, “நம்புவார்பதி வைகுந்தம்” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே அவன் எழுந்தருளியிருக்கிறவிடமே ப்ராப்யபூமியான பரமபதம் என்றும், “ராமாநுஜஸ்ய சரணௌ ஶரணம் ப்ரபத்யே”, “பேறொன்றுமற்றில்லை நின் சரணன்றி, அப்பேறளித்தற்கு ஆறொன்றும் இல்லை மற்றச்சரணன்றி”, “உபாயோபேயபாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத்” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே அவன் திருவடிகளே உபாயோபேயங்களென்றும்,

“ராமாநுஜார்யவஶக: பரிவர்த்திஷீய”, “நித்யம் யதீந்த்ர தவ திவ்யவபுஸ்ஸ்ம்ருதௌ மே ஸக்தம் மநோ பவது வாக் குணகீர்த்தநேஸௌ| க்ருத்யஞ்ச தாஸ்யகரணந்து கரத்வயஸ்ய வ்ருத்த்யந்தரேஸ்து விமுகம் கரணத்ரயஞ்ச”, ‘ஶக்திக்கிலக்கு ஆசார்யகைங்கர்யம்” என்று இத்யாதிகளில் சொல்லுகிறபடியே த்ரிவிதகரணத்தாலும் அவன் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தமென்றும், ‘ஶிஷ்யனென்பது ஸாத்யாந்தர நிவ்ருத்தியும் பலஸாதந ஶுஶ்ரூஷையும்” என்கிறவிடத்தில் சொல்லுகிறபடியே இவன் பண்ணும் கைங்கர்யம் கண்டு உகக்குமவனுடைய முகோல்லாஸமே மஹாபலம் என்றும் அத்யவஸித்திருக்கும் அதிகாரிகளுக்கு ஸாம்ஸாரிகமான ஸகல துர்வ்யாபாரங்களையும் ஸவாஸநமாக விட்டு அவனுடைய திவ்யமங்கள விக்ரஹத்தை ஸதாபஶ்யந்திப்படியே அநுபவித்து, “அத்ர, பரத்ரசாபி”ப்படியே அந்தமில் பேரின்பத்தடியரோடிருந்து அம்ருத ஸாகராந்தர நிமக்ந ஸர்வாவயவராய்க் கொண்டு காலதத்த்வமுள்ளதனையும் மங்களாஶாஸநம் பண்ணி வாழலாம்.

நாதமுனி – ஆளவந்தார்

“கையிற்கனியென்னக் கண்ணனைக் காட்டித்தரிலும்” என்கிற பாட்டும், “நாவினால் நவிற்று” என்கிற பாட்டும் “நல்லவென்தோழி” என்கிற பாட்டும், “மாறாய தானவனை” என்கிற பாட்டும், பரமாசார்யரான ஆளவந்தாரருளிச் செய்த “மாதா பிதா யுவதய:” என்கிற ஶ்லோகமும், “பஶுர்மநுஷ்ய:” என்கிற ஶ்லோகமும், “பாலமூகஜடாந்தாஶ்ச” என்கிற ஶ்லோகமும், “ஆசார்யஸ்ய ப்ராஸாதே ந மம ஸர்வமபீப்ஸிதம்” என்கிற வசநமும், “இஹலோக பரலோகங்களிரண்டும் ஆசார்யன் திருவடிகளே என்றும், த்ருஷ்டாத்ருஷ்டங்களிரண்டும் அவனே என்றும் விஶ்வஸித்திருக்கிறதுக்கு மேலில்லை” என்று மாணிக்கமாலையிலே பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த திவ்யஸூக்தியும், “மந்த்ரமும், தேவதையும், பலமும், பலாநுபந்திகளும், பலஸாதநமும், ஐஹிகபோகமுமெல்லாம் ஆசார்யனே என்று நினைக்கக் கடவன்” என்று ஶ்ரீவசநபூஷணத்திலே பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்தருளின திவ்யஸுக்தியும் இதுக்கு ப்ரமாணமாக அநுஸந்தேயங்கள்.

பிள்ளை லோகாசார்யர், மாமுனிகள், பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர்

ஶ்ரீஸௌம்யஜாமாத்ருமுநே: ப்ரஸாத ப்ரபாவஸாக்ஷாத்க்ருதஸர்வதத்த்வம்|
அஜ்ஞாநதாமிஸ்ரஸஹஸ்ரபாநும் ஶ்ரீ பட்டநாதம் முநிமாஶ்ரயாமி||

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

2 thoughts on “அந்திமோபாய நிஷ்டை – 18 – முடிவுரை – ஆசார்ய நிஷ்டையின் பெருமைகள்”

Leave a Comment