ஸ்ரீ: ஸ்ரீமத்யை கோதாயை நம: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம:
सर्वं पदार्थजातं प्रमाणप्रमेयभेदेन द्विधा भिन्नम् ॥ 4
ஸர்வம் பதார்த்தஜாதம் ப்ராமாணப்ரமேயபேதேன த்விதா பிந்நம் ॥ 4
இனி க்ரந்தம் ஆரம்பிக்கப்படுகிறது. முதலில் வஸ்துக்களின் பிரிவினைக் காட்டி விட்டு பின் ஒவ்வொன்றாக எடுத்து விளக்க உள்ளார். அனைத்து வஸ்துக்களயும் ப்ரமாணம், ப்ரமேயம் என்று இரண்டாகப் பிரிக்கலாம்.
प्रमाणानि त्रीण्येव । प्रमेयं द्विधम्, द्रव्याद्रव्यभेदात् ॥ 5
ப்ரமாணாணி த்ரீண்யேவ | ப்ரமேயம் த்விவிதம், த்ரவ்யத்ரவ்யபேதாத் ॥ 5
ப்ரமாணம் – உள்ளதை உள்ளபடி அறிய உதவுவது; ப்ரமேயம் – ப்ரமாணத்தால் அறியப்படுவது. ப்ரமாணங்கள் மொத்தம் மூன்று – 1) ப்ரத்யக்ஷம், 2) அனுமானம், 3) ஶப்தம். ப்ரமேயத்தை மொத்தம் இரண்டாகப் பிரிக்கலாம். 1) த்ரவ்யம் – மாறும் நிலைகளையுடைய பொருள்; 2) அத்ரவ்யம் – த்ரவ்யங்களின் நிறம், சுவை முதலிய தன்மைகள்.
- அழகிய மணவாளச் சீயரும் தம்முடைய தத்வ நிரூபணத்தில் “இவற்றில் ப்ரத்யக்ஷத்தையும், அநுமாநத்தையும், ஆகமத்தையும் இம்மூன்றையும் வைதிகர் ப்ரமாணமாக பர்க்ரஹிக்கிறவளவிலே…” என்றருளிச் செய்தது இங்கு குறிக்கொள்ளத்தக்கது..
- ப்ரமேயம் – ப்ரமாணத்தால் அறியப்படுவது என்று ஸாதாரணமாகச் சொன்னாலும், முமுக்ஷுக்களுக்கு சிதசித் விலக்ஷணான பரமாத்மாவே ப்ரமேயம் என்பது அறியத் தக்கது.
- கற்பார் இராமபிரானையல்லால் மற்றும் கற்பரோ – ஈடு ஸ்ரீ ஸூக்தி – இவ்விஷயத்தையொழியப் புறம்பு கற்குமது கல்விக்கு உடலல்ல என்றிருக்கிறார். தத்ஜ்ஞாநமதோந்யதுக்தம் என்றானிறே. பகவல்லாபத்துக்குஉடலான ஜ்ஞாநம் ஜ்ஞாநமாகிறது; அல்லாதது அஜ்ஞாநமென்னக்கடவதிறே
द्रव्यं द्विधं, जडमजडं चेति ॥ 6
த்ரவ்யம் த்விவிதம் ஜடமஜடம் சேதி ॥ 6
த்ரவ்யத்தை ஜடம், அஜடம் என்று இரண்டாகப் பிரிக்கலாம். ஜடமாவது – வேறொரு ஜ்ஞானத்தால் மட்டுமே தோன்றக்கூடியது; அஜடமாவது – தானாகவே ப்ரகாஶிப்பது.
जडं च द्विविधं, प्रकृतिः कालश्चेति । प्रकृतिश्चतुर्विंशतितत्वात्मिका । कालस्तु उपाधिभेदेन त्रिविधः ॥7
ஜடம் ச த்விவிதம், ப்ரக்ருதி காலச்சேதி । ப்ரக்ருதிச்சதுர்விம்ஶதிதத்வாத்மிகா । காலஸ்து உபாதிபேதேந த்ரிவித: ॥7
ஜடத்தின் பிரிவுகள் இரண்டு – ப்ரக்ருதி மற்றும் காலம். ப்ரக்ருதி – 24 தத்வங்களாவது; சூரியனுடைய உபாதி பேதத்தால் காலம் மூன்று – 1) பூத (இறந்த காலம்), 2) பவிஷ்ய (வருங்காலம்); 3) வர்த்தமான (நிகழ் காலம்) காலங்கள்.
अजडं तु द्विविधम्, पराक् प्रत्यक्चेति । परागपि द्विविधा – नित्यविभूतिः, धरमभूतज्ञानं चेति । प्रत्यगपि द्विडिधः – जीवेश्वरभेदात्॥ 8
அஜடம் து த்விவிதம், பராக் ப்ரத்யக் சேதி। பராகபி த்விவிதா-நித்யவிபூதி:, தர்மபூதஞானம் சேதி। ப்ரத்யகபி த்விவிதா: – ஜீவேஶ்வர பேதாத்॥ 8
அஜடம் இருவகைப்படும் – 1) ப்ரத்யக் மற்றும் 2) பராக். ப்ரத்யக் – தன்னைப் பற்றிய ஜ்ஞானம் தனக்கு வருமாறு உள்ள பொருள். பராக் – தன்னப் பற்றின ஜ்ஞானம் மற்றொன்றிற்கே வருமாறு உள்ள பொருள் (ஜீவனையும், ஈஶ்வரனையும் தவிர அஜடப் பொருள்கள் அனைத்தும் இந்தப் பிரிவின் கீழ் வரும்)
जीवः त्रिविधः बध्दमुक्तनित्यभेदात् ॥ 9
ஜீவ: த்ரிவித: பத்தமுக்தநித்யபேதாத் ॥ 9
ஜீவர்கள் மொத்தம் மூன்று வகை – பத்தர், முக்தர், நித்யர்.
பத்தர்க்கும் பரமபதத்திலிருக்கும் நித்யர்க்கும், முக்தர்க்கும் உள்ள படியினை ஸ்ரீ லோகதேசிகனான பிள்ளை லோகாசார்யர், அஷ்டாதச க்ரந்தங்களில் ஒன்றான அர்ச்சிராதியில் கீழ்க்கண்டவாறு அருளியுள்ளார்.
(அர்ச்சிராதி மூலம்) நித்யர் மற்றும் முக்தர், ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப (திருவாய் 4-9-10) என்கிறபடியே அவனுடைய செங்கோலே ஏகாதபத்ரமாக நடக்கும்படி அவனுடைய அபிமாநத்திலே அந்தர்பவித்துப் போருவர்கள். லீலாவிபூதியிலுள்ளார் அவர்களைப்போலே சந்தாநுவர்த்திகளன்றிக்கே ஸங்கல்பாநுவிதாயிகளாய் “நம இத்யேவ வாதிந:” என்கிறதுக்கு எதிராக, “ந நமேயம்”, “ஈஶ்வரோஹம்” என்கிறபடியே, மனையடைவே, “யானேயென்றனதே” என்று,
ஒண்டொடியாள் – அழகிய வளைகளை உடையவள்; கழலாத வளைகளை உடையவள் – அகலகில்லேன் இறையும் என இருப்பவளிறே; சங்கு தங்கு முன்கை நங்கையிறே; சீரார் வளை (திருப்பாவை – 6000 படி ஸ்ரீ ஸூக்தி) – வளைக்குச் சீர்மையாவது – கையில் நின்றும் கழலாதொழிகை. விஶ்லேஷவ்யஸநம் அநுபவியாத வளை. சங்குதங்குமுன்கை – ஒண்டொடியாள் திருமகள் திருமகளும் – பெரிய பிராட்டியாரும்; நீயுமே – எம்பெருமானுமே; செங்கோல் – செம்மையான கோல்/ஆட்சி; ஏகாதபத்ரமாக – வேறு ஒருவனுடைய தலையீடு இல்லாமல்/ ஒரு குடைக்குக் கீழே; அபிமானம் – எம்பெருமானால் தன்னுடையவன் (மதீயர்கள்) என்று நினைக்கப்படுதல்; சந்தாநுவர்த்திகளன்றிக்கே– எம்பெருமான் திருவுள்ளம் அறிந்து கைங்கர்யம் செய்பவர்களாய் இருக்கை தவிர்ந்து; ஸங்கல்பாநுவிதாயிகளாய் – ஸங்கல்பத்தைப் பின்செல்லுபவர்களாய்; நம இத்யேவ வாதிந: – இரண்டு கைகளையும் குவித்துக் கொண்டு வாயால் எப்போதும் நம: என்று சொல்லிக் கொண்டும் (நித்யர் மற்றும் முக்தர் படி); ந நமேயம் – ஒருவனையும் வணங்கமாட்டேன் (இராவணன் சொன்னது); ஈஶ்வரோஹம் – நானே ஈஶ்வரன் [பகவத் கீதை]; (லீலாவிபூதியிலுள்ளார் படி); மனையடைவே – ஸம்ஸாரம் முழுவதும்; யானேயென்றனதே – அஹம்/மம, நான்/எனது என்றிருக்கும் இருப்பு
(மூலம்) அவர்கள் “பணியா அமரர்” (திருவாய் 8-3-6) யிருக்கும் இருப்புக்கெதிராக “மற்றோர் தெய்வம் பாடி ஆடிப் பணிந்து” (திருவாய் 4-10-7)
பணியா அமரர் – ஸ்ரீமந் நாராயணனைத் தவிர வேறு ஒருவனையும் வணங்காதே;
(மூலம்) “மிக்கார் வேதவிமலர்” (திருவாய் 2-9-8) என்கிறபடியே, அவர்களைப்போலே “பெருமக்களாய்” (திருவாய் 3-7-4) இராதே “சிறியார் சிவப்பட்டார்” (நான். திரு 6) என்கிறபடியே சிறியாராய்
மிக்கார் – பகவதனுபவத்திலே எல்லாரைக் காட்டிலும் விசேஷமாண ஸ்வபாவம் உடையவர்களாய்; மலம் – அழுக்கு; விமலர் – தோஷமில்லாதவர்கள் வேதவிமலர் – வேதத்திலே விமலராய் சொல்லப்பட்டவர்கள்; சிறியார் – அல்ப்பர், சிறியார் – ஸ்வத:ப்ரமாணமான வேதத்தை விட்டு ஆகமத்தைக் கொண்டவர்கள் தாழ்சடையோன் சொற்கற்ற சோம்பர் என்னக்கடவதிறே.
(மூலம்) “அயர்வறும் அமரர்கள்” (திருவாய் 1-1-1) என்கிறபடியே அவர்களைப்போலே திவ்யஜ்ஞாநோபபந்நராயிராதே அறிவிலாமனிசராய் (திருமாலை 13), ஒளிக்கொண்டசோதிக்கெதிராக (திருவாய் 2-3-10) அழுக்குடம்பை (திருவிருத்தம் 1) பரிக்ரஹித்து,
அயர்வு – மறதி முதலானவைகள்; திவ்யஜ்ஞாநோபபந்நராயிராதே – திவ்யமான ஜ்ஞானம் உடையவராய் இராதே; ஒளிக்கொண்டசோதி – ரஜோகுணம் தமோகுணம் கலசாதே ஸுத்தசத்வ திவ்ய மங்கள விக்ரஹம்;
(மூலம்) விபந்யவ: விண்ணோர் பரவுந்தலைமகன் (திருவாய் 2-6-3) என்றதுக்கெதிராக உலகில் கண்டவா தொண்டரைப் பாடி (பெரிய திருமொ 1-1-7),
விபந்யவ: – விசேஷமாக எம்பெருமானைத் துதிப்பவர்கள்; விண்ணோர் பரவுந்தலைமகன் – நித்ய ஸூரிகளால் துதிக்கப்படுபவன்; உலகில் கண்டவா தொண்டரைப் பாடி – கண்ட ஆ – தன்னை ஸ்தோத்திரம் பண்ண இச்சை உடையவர்களை பாடி, திருவாய்மொழி ஈட்டில் ஒரு அற்புதமான கதை த்ருஷ்டாந்தமாக இவ்வர்த்ததிற்கு எடுக்கப்பட்டுள்ளது இங்கு நோக்கத்தக்கது
(மூலம்) உனக்கே நாமாட்செய்வோம் (திருப்பாவை 29) என்கிறபடியே அவனுக்காட் செய்யாதே மாரனார் வரிவெஞ்சிலைக்காட்செய்து (பெரு திரு 3-3), தொண்டுபூண்டமுதமுண்ணாதே (திருமாலை 5) பாவையர் வாயமுதமுண்டு (பெரிய திருமொ 1-3-5),
உனக்கே நாமாட்செய்வோம் – உனக்கும் எங்களுக்குமாயிருக்கிற இருப்பைத் தவிர்ந்து “தனக்கேயாக” என்னுமாபோலே கொள்ளவேணும் (திருப்பாவை 6000படி ஸ்ரீ ஸுக்தி); மாறன் – மன்மதன்;
(மூலம்) ஸ ஏகதா பவதி என்கிறதுக்கெதிராக குலந்தானெத்தனையும் பிறந்து (பெரிய திருமொ 1-9-4), உருவார் சக்கரஞ்சங்கு சுமந்திங்கவனோடு ஒருபாடு உழலாதே (திருவாய் 8-3-7) ஆக்கையின் வழியுழன்று (திருவாய் 3-2-1),
ஸ ஏகதா பவதி – பரமபதம் செல்லும் முக்தாத்மா எம்பெருமான் ஸங்கல்பத்தாலே சரீரங்களை கொள்கிறான் – ஏனெனில் எம்பெருமானை ஒரு சரீரத்தால் அனுபவித்து முடிக்க முடியாமையாலே. பரமபதத்தில் இருப்பவர்கள் எம்பெருமானை அனுபவிப்பதற்காக சரீரம் கொள்கிறார்கள்; ஸம்ஸாரத்தில் உள்ளார் கர்மமடியாக பல சரீரங்களை எடுக்கிறார்கள் என்பது தாத்பர்யம்; உருவார் – அழகான; ஒருபாடு – ஒரு பக்கம்; அவனுடைய திருவாயுதங்களைச் சுமந்து கொண்டு அவனோடு போகாதே; ஆக்கை – உடம்பு; ஆக்கையின் வழியுழன்று – சரீரத்தைக் கொடுத்து எம்பெருமானை அடை என்றால், சரீரம் செல்லும் வழி சென்று
(மூலம்) ஏதத் வ்ரதம் மம என்கிறவனுடைய வ்ரதத்துக்கெதிராக யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை (திருவிருத்தம் – 95) ஏறிட்டுக் கொண்டு, அவர்தருங் கலவியே கருதி ஓடினேன் (பெரிய திருமொ 1-1-1) என்கிறபடியே அலம்புரிந்த நெடுந்தடக்கைக்கும் (திரு நெடு – 6) எட்டாதபடி கைகழியவோடி, அற்பசாரங்களவை சுவைத்தகன்று (திருவாய் 3-2-6) போரக்கடவராயிருப்பர்கள்.
ஏதத் வ்ரதம் மம – ஒருக்காலே சரணம் அடைந்தார்க்கும் எல்லாராலும் வரக்கூடிய பயங்களைப் போக்குகிறேன் என்னும் பெருமாளின் வ்ரதம்; யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை – ஏதேனும் பற்றிக் கொண்டு நாம் எம்பெருமானை விட்டு நீங்கும் வ்ரதம்; ஏறிட்டுக் கொண்டு – இத்தால் இது (யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை) வந்தேறி என்றபடி – நானும் உனக்குப் பழவடியேன் என்பதே ஜீவாத்மாவின் உண்மையான நிலை; அலம்புரிந்த நெடுந்தடக்கைக்கும் – ஆச்ரிதர்கள் போதும் போதும் என்று சொன்னாலும் நிறுத்தாத நீண்ட நெடுங்கைகள்; எட்டாதபடி கைகழியவோடி – அதற்கும் தப்பி; அற்பசாரம் – சப்தாதி விஷயங்கள்
बध्दोSपि द्विविधः – बुभुक्षुमुमुक्षुभेदात् ॥ 10
பத்தோபி த்விவித: – புபுக்ஷுமுமுக்ஷுபேதாத்॥ 10
பத்தர் இருவகைப்படுவர் – புபுக்ஷு, முமுக்ஷு
बुभुक्षुSपि द्विविधः – अर्थकामपरो धर्मपरश्चेति । धर्मपरो द्विविधः- देवतान्तरपरो भगवत्परश्चेति॥11
புபுக்ஷுபி த்விவித: – அர்த்தகாமபரோ தர்மபரச்சேதி | தர்மபரோ த்விவித:- தேவதாந்தரபரோ பகவத்பரஶ்சேதி|| 11
புபுக்ஷுக்கள் இருவகை – அர்த்தபரர் மற்றும் தர்மபரர். தர்மபரர்கள் இருவகைப்படுவர் – தேவதாந்தரபரர் மற்றும் பகவத்பரர்கள்.
मुमुक्षुSपि द्विविधः – कैवल्यपरो मोक्षपरश्चेति । मोक्षपरो द्विविधः – भक्त: प्रपन्नश्चेति । प्रपन्नश्च द्विविधः – एकान्ती परमैकान्ती चेति । परमिकान्ती द्विविधः – दृप्तार्तभेदात् ॥12
முமுக்ஷுபி த்விவித: – கைவல்யபரோ மோக்ஷபரச்சேதி | மோக்ஷபரோ த்விவித: – பக்த: ப்ரபந்நச்சேதி | ப்ரபந்நச்ச த்விவித: – ஏகாந்தீ பரமைகாந்தி சேதி | பரமைகாந்தீ த்விவித: – த்ருப்தார்தபேதாத் ॥12
முமுக்ஷுக்கள் இரண்டு வகைப்படுவர் – கைவல்யபரர் மற்றும் மோக்ஷபரர்கள்; மோக்ஷபரர்கள் பக்தர்கள் மற்றும் ப்ரபந்நர்கள் என்று இரண்டு வகைப்படுவர்கள். ப்ரபந்நர்கள் மறுபடியும் ஏகாந்தீ, பரமைகாந்தீ என இரண்டு வகைப்படுவர்கள். பரமைகாந்தீ த்ருப்தன் ஆர்த்தன் என இரண்டு வகைப்படுவர்.
- மோக்ஷத்தில் இச்சையுடையவர்கள் முமுக்ஷுக்கள். மோக்ஷம் என்றால் பரமானந்தம் என்று நிகண்டு. அதாவது ப்ரஹ்மானுபவம்.
- த்ருப்தன் – சரீரம் விடும்பொழுது மோக்ஷம் கிடைக்கட்டும் என ஆறி இருப்பவன்; ஆர்த்தன் – சரணாகதி செய்தயுடன் மோக்ஷம் வேண்டுபவன்
ईश्वरः पञ्चधा – परओव्यूहविभवान्तर्याम्यर्चावतारभेदात् । पर एकधा । व्यूहश्चतुर्धा – वासुदेवसङ्कर्षणप्रद्य्म्नानिरुद्ध्भेदात् । केशवादि व्यूहान्तरमत्रैवान्तर्भवति । मत्स्यादयो विभवाः पुनः अनन्ताः । अन्तर्यामि प्रतिशरीरमवस्थितः । अर्चावतारस्तु श्रीरङ्गवेङ्कटाद्रिहस्तिगिरियादवाद्रिघटिकाचलादिषु सकलमनुजनयनविषयताम् गतो मूर्तिविशेषः ॥ 23
ஈஶ்வர: பஞ்சதா – பரவ்யூஹவிபவாந்தர்யாம்யர்சாவதாரபேதாத் | பர ஏகதா | வ்யூஹச்சதுர்தா – வாஸுதேவஸங்கர்ஷணப்ரத்யும்னாநிருத்தபேதாத் | கேசவாதி வ்யூஹாந்தரமத்ரைவாந்தர்பவதி | மத்ஸ்யாதயோ விபவா: புந: அநந்தா: | அந்தர்யாமி ப்ரதிஶரீரமவஸ்தித: | அர்சாவதாரஸ்து ஸ்ரீரங்கவேங்கடாத்ரிஹஸ்திகிரியாதவாத்ரி கடிகாசலாதிஷு ஸகலமனுஜநயநவிஷயதாம் கதோ மூர்த்திவிசேஷ: || 23
ஈஶ்வரன் பரம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்று ஐந்து ப்ரகாரமாக இருக்கிறான். பரமபதநாதனான பகவான் ஸ்ரீமந் நாராயணன் என்கிற ரூபம் ஒன்றுதான். * ஆதியஞ்சோதிவுரு * . இவ்வுருவில் இருந்தே மற்ற ரூபங்கள் தோன்றுவதினால் பரம் என்னப்பட்டது. வ்யூஹ ருபங்கள் – வாஸுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் என்று நான்கு. மத்ஸ்யம், கூர்மம் முதலான ரூபங்கள் விபவங்கள். அவை கணக்கற்றவை. அந்தர்யாமி நிலையாவது ஒவ்வொரு உடம்பிலும் அவர்கள் உபாஸிக்கும்படி அவர்கள் ஹ்ருதயத்தில், கட்டை விரல் அளவுள்ளதாய் இருக்கும் ரூபம். அர்ச்சாவதாரமாவது, ஸ்ரீரங்கம், திருவேங்கடம், முதலான திவ்யதேசங்களில் அனைவர் கண்களுக்கும் விஷயமாம்படி இருக்கும் நிலை.
- தத்வத்ரயம் – 182, ஸ்ரீமத் வரவரமுனிகள் வ்யாக்யானம் இவ்வர்த்தம் அழகாக விளக்கப்பட்டுள்ளது காண்க.
- விபவங்கள் அநந்தம் என்னுமிடம் தத்வத்ரயம் – 189வது சூர்ணிகையில் ” பரிகணித்துத் தலைக் கட்டப் போகாதபடி அநந்தமாய் ” என்ற வ்யாக்யான ஸ்ரீஸூக்திகொண்டு நோக்க வேண்டியது.
- அடலரவப் பகையேறி அசுரர் தம்மை வெல்லும் அவன் இவன் என்று பரமபதத்தில் இருக்கும் பெருமானே அர்ச்சாவதாரமாக உள்ளான் என்று கொண்டு அர்ச்சாவதாரமே முக்கியமாகக் கொண்டனர் நம் ஆசார்யர்கள். மற்றைய நிலைகளைக் காட்டிலும் இதன் ஏற்றம் * தமருகந்த அடியோமுக்கே என்னும் பின்னானார் வணங்கும் இடத்திலே எல்லாம் பூர்ணம் * என்னும் ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகையின் வ்யாக்யானத்தில் கண்டு கொள்வது.
இங்ஙனே த்ரவ்யம் பலவாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும்,
- சிதசித் வஸ்துக்களை சரீரமாகக் கொண்டவன் என்பதினால் ஒன்று என்றும்,
- ஆத்மா, அநாத்மா (ஆத்மா அல்லாதது – ஜீவனையும், ஈஶ்வரனையும் தவிர அனைத்தும்) என்ற பேதத்தால் இரண்டு என்றும்,
- * போக்தா போக்யம் ப்ரேரிதாரம் ச மத்வா * என்ற ச்ருதியை அனுஸரித்து சித், அசித், ஈச்வரன் என மூன்றாகவும்,
- இங்கு ” போக்தா போக்யம் ப்ரேரிதாரம் ச மத்வா என்று போக்த்ரு சப்தத்தாலும், போக்ய சப்தத்தாலும், ப்ரேரயித்ரு சப்தத்தாலும் சிதசிதீச்வர தத்வங்கள் மூன்றையுமிரே சொல்லுகிறது” என்னும் ஸ்ரீமத் வரவரமுனிகளின் தத்வத்ரய வ்யாக்யான ஸ்ரீஸுக்தி ஸ்மரிக்கத்தக்கது.
- ப்ரக்ருதி, காலம், நித்யவிபூதி, தர்மபூதஜ்ஞானம், ஜீவன், ஈச்வரன் என ஆறாகவும் கொள்ளலாம்.
अद्रव्यम् तु सत्वरजस्तमश्शब्दस्पर्शरुपरसगन्धसंयोगशक्तिभेदाद्दशधैव ॥ 24
அத்ரவ்யம் து ஸத்வரஜஸ்தமச்ஶப்தஸ்பர்சரூபரஸகந்தஸம்யோகஶக்திபேதாத்தசதைவ || 24
அத்ரவ்யம் ஶப்தம், ஸ்பர்ஶம், ரூபம், ரஸம், கந்தம், ஸத்வம், ரஜஸ், தமஸ், ஸம்யோகம், ஶக்தி என 10 பிரிவுகளைக் கொண்டது.
அடியேன் ஸுதர்சன ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org