யதீந்த்ரமத தீபிகை – பகுதி – 3

ஸ்ரீ:  ஸ்ரீமத்யை கோதாயை நம:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம:

யதீந்த்ரமத தீபிகை

<< பகுதி – 2

Image may contain: 1 person, smiling, text that says "VARAVARAMUNI"

एवमुद्देशक्रमेण परीक्षा क्रियते ।

ஏவமுத்தேச க்ரமேந பரீக்ஷா க்ரியதே |

இனி நிர்ணயித்த க்ரமத்திலேயே வஸ்துக்களைப் பற்றின லக்ஷணம் உரைக்கப்பட்டு அவை பரீக்ஷிக்கப் படுகின்றன. சாஸ்த்ர க்ரந்த விசாரங்கள் இந்த ரீதியிலே அமையும். முதலில் வஸ்துக்களை வரிசைப்படுத்தி, பின்பு அவற்றின் லக்ஷணமுரைத்து, அந்த லக்ஷணங்களை ஆராய்வது இந்த ரீதியிலேயே இருக்கும்.

  • இது தன்னை பெரிய ஜீயரும் தத்வத்ரய வ்யாக்யானத்தில் “உத்தேசம், லக்ஷணம், பரீக்ஷை என்று மூன்று வகைப்பட்டிறே தத்வ நிர்ணயக்ரமம் இருப்பது” என்றருளிச் செய்தார்

तत्र प्रमाकरणं प्रमाणम् । प्रमाणं लक्ष्यम् । प्रमाकरणत्वं लक्षणम् । यथावस्थितव्यवहारानुगुणम् ज्ञानं प्रमा ॥ प्रमा लक्ष्यम् । यथावस्थितव्यवहारानुगुण ज्ञानत्वं लक्षणम् । ज्ञानं प्रमेत्युक्ते शुक्तिकायाम् ‘ इदं रजतम्’ इति ज्ञानेSतिव्याप्तिः । अत उक्तं व्यवहारानुगुणं ज्ञानमिति । एवमपि तत्रैवातिव्याप्तिः, भ्रान्तिदशायामिदं रजतमिति व्यवह्रियमाणत्वात् । अत उक्तं यथाडस्थितेति ।

தத்ர ப்ரமாகரணம் ப்ரமாணம் | ப்ரமாணம் லக்ஷ்யம் | ப்ரமாகரணம் லக்ஷணம் | யதாவஸ்தித வ்யவஹாரானுகுணம் ஞானம் ப்ரமா || ப்ரமா லக்ஷ்யம் | யதாவஸ்தித வ்யவஹாரானுகுண ஞானத்வம் லக்ஷணம் | ஞானம் ப்ரமேத்யுக்தே ஶுத்திகாயாம் “இதம் ரஜதம்” இதி ஞானேSதிவ்யாப்தி: | அத உக்தம் வ்யவஹாரானுகுணம் ஞானமிதி | ஏவமபி தத்ரைவாதிவ்யாப்தி: ப்ராந்தி தஶாயாமிதம் ரஜதமிதி வ்யவஹ்ரியமாணத்வாத் | அத உக்தம் யதாவஸ்திதேதி |

ப்ரமாணம் விசாரிக்கப்படுகிறது. அதற்கு முன்பு லக்ஷணம் – லக்ஷ்யம் என்றால் என்ன என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஓரு வஸ்துவினிடத்திலேயே இருப்பதாய், அவ்வஸ்துவை மற்ற வஸ்துக்களில் இருந்து வேறுபடுத்திக்காட்டுவது அவ்வஸ்துவின் லக்ஷணமாகும். அந்த லக்ஷணத்தால் அறிந்துகொள்வது லக்ஷ்யமாகும். இனி ப்ரமாணம் லக்ஷ்யமாமிடத்தில் – ப்ரமாகரணம் அதன் லக்ஷணம் ஆகும். அதாவது ப்ரமைக்கு கரணமாயிருப்பது. ப்ரமா லக்ஷ்யமாமிடத்தில் – ஒரு வஸ்துவை உள்ளபடி பேசுவதற்குக் (வ்யவஹரிப்பதற்கு) காரணமான அறிவு (அ) ஞானம் என்பது அதன் லக்ஷணம் ஆகும்.  ப்ரமைக்கு ஏன் ஞானம் என்று லக்ஷணம் உரைக்ககூடாது என்னில் – அப்படிக் கொண்டால் சுத்தி என்று சொல்லப்படும் முத்துச் சிப்பியினைப் பார்த்து வெள்ளி என்று தோன்றுவதும் ப்ரமை என்றாகிவிடும். இது அதிவ்யாப்தி எனும் தோஷமாகும். அதைத் தவிர்ப்பதற்காகவே ப்ரமைக்கு ஒரு வஸ்துவை உள்ளபடி பேசுவதற்கு (வ்யவஹரிப்பதற்க்கு) காரணமான அறிவு என்று லக்ஷணம் உரைக்கப்பட்டது.

  • லக்ஷணம், அதிவ்யாப்தி, முத்துச் சிப்பியினைப் பார்த்து வெள்ளி என்று தோன்றுகிற ஞானம் இவை அனைத்தும் மேலே விளக்கப்படவுள்ளன.

यथावस्थितपदेन संशयान्यथाज्ञानव्यावृत्तिः । धर्मिग्रहणे मिथो विरुध्दानेकविशेष स्फुरण संशयः । यथा ऊर्ध्वताविशिष्टे स्थाणुर्वा पुरुषो वेति ज्ञानम् । अन्यथाज्ञानम् नाम धर्मविपर्यासः । यथा, कर्तृत्वेन भासमाने आत्मनि कुयुक्तिभिः कर्तृत्वस्य भ्रान्तत्वोपपादनम् । विपरीतज्ञानम् नाम धर्मविपर्यासः । यथा वस्तुनो वस्त्वन्तर ज्ञानम् ।

யதாவஸ்தித பதேன ஸம்சய அந்யதா விபரீத ஞான வ்யாவ்ருத்தி: | தர்மிக்ரஹணே மிதோ விருத்த அநேக விசேஷ ஸ்புரண ஸம்சய: | யதா ஊர்த்வதாவிசிஷ்டே ஸ்தாணூர்வா புருஷோ வேதி ஞானம் | அந்யதாஞானம் நாம தர்மவிபர்யாஸ: | யதா கர்த்ருத்வேன பாஸமானே ஆத்மநி குயுத்பி: கர்த்ருத்வஸ்ய ப்ராந்தத்வோபபாதனம் | விபரீத ஞானம் நாம தர்மவிபர்யாஸ: | யதா வஸ்துனோ வஸ்த்வநந்தர ஞானம் |

உள்ளதை உள்ளபடி வழங்குதல் என்றதினால் ஸம்சய ஞானம், அந்யதா ஞானம், விபரீத ஞானம் ஆகியவைகள் தள்ளப்பட்டன.

ஸம்சயம் என்றால் என் என்னில் – தர்மியை (தர்மி – பூ; தர்மம் – அதனுடைய  மணம்/நிறம்) க்ரஹிக்கும் பொழுது ஒரே சமயத்தில் விருத்தமான (ஒன்றுக்கொன்று விரோதமான) பல தர்மங்கள் (விசேஷணங்கள்) தோன்றுவது ஸம்சயம் ஆகும். உதாரணத்திற்கு நாம் இருட்டில் தூரத்தில் ஒரு வஸ்துவைப் பார்க்கிறோம். அது கை, கால்கள் கொண்ட மனிதன் போன்று தெரிகிறது. அதே சமயத்தில் அது கிளைகள் கொண்ட மரம் போன்றும் தோன்றுகிறது. இது தன்னையே ஸ்தாணுர் வா புருஷோ வ (மரமா அல்லது மனிதனா) என்று உரைப்பர்கள். ஒரே வஸ்துவினிடத்தில் மரத்தினுடைய விசேஷணங்களும், மனுஷ்யத்வமும் தோன்றுவதால் – இது ஸம்சயம் ஆகும்.

அந்யதா ஞானமாவது – தர்மியை க்ரஹிக்கும் விஷயத்தில் மாறாட்டம். ஒரு வஸ்துவினுடைய தர்மத்தை மாறாகக் க்ரஹிப்பது. கர்த்ருத்வம் எனப்படும் செயல்படும் தன்மையாவது ஆத்மாவின் (ஆத்மா – தர்மி; கர்த்ருத்வம் – தர்மம்) தர்மம் அன்று என்று தர்ம விஷயத்தில் மாறுபாடகக் கொள்வது அந்யதாஞானமாகும்.  இப்படி கர்த்ருத்வமாவது ஆத்மாவிற்கு கிடையாது என்று கொள்வது ஸாங்க்யர்கள் பக்ஷமாகும். அவர்கள் அதை ப்ரக்ருதிக்கேயுள்ளது என்கிறார்கள். அவர்களை நிரஸிக்கிறார். அப்படிக் கொண்டால் சேதனனைக் குறித்துக் கட்டளையிடும் வேத வாக்யங்கள் பயனற்றவையாகிவிடும்.

  • இதன் விரிவினை தத்வத்ரய சூர்ணிகைகள் 31, 32 மற்றும் ஸ்ரீமத் வரவரமுநிகளின் வ்யாக்யானம் கொண்டு மேலும் அறிந்து கொள்ளலாம்.

விபரீதஞானமாவது – தர்மியையே மாறாடி க்ரஹிக்கை. ஒரு வஸ்துவை க்ரஹிக்கும் பொழுது அந்த வஸ்துவையே தவறாகக் க்ரஹிக்கை. உதாரணமாக சுக்திகையை (சிப்பியை) ரஜதமென்று (வெள்ளியென்று) க்ரஹிக்கை, அல்லது தேஹத்தை ஆத்மா என்று கொள்ளுகை.

  • “அந்யதாஞானமாவது தேவதாந்தர சேஷமென்றிருக்கை. விபரீதஞானமாவது ஸ்வதந்த்ரமாகவும், ஸ்வபோக்யமாகவும் நினைத்திருக்கிற கேவலனைடைய ஞானம் என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்.” என்கிற ஈட்டு ஸ்ரீஸூக்தியும் (1-1-1 மயர்வற),
  • “சேஷத்வஸயைவ ஆத்மந ஸ்வரூபநிரூபகத்வாத் ததவிஹாய ஸ்வதந்த்ரத்வேநாநுஸந்தாநம் தர்மிவிபர்யாஸ இத்யபிப்ராயேணாஹ, விபரீதஞானமாவது யத்வா நிரதிசய போக்யத்தை பராபிக்கவேணுமென்று அபேக்ஷித்து, அந்த போக்யந்தான் ஏதென்று நிரூபித்து போக்யந்தானே என்று நிச்சயிக்கையினாலே கேவலன் போக்யத்திலே ஸ்வபேதாத்யவஸாயம் பண்ணுகிறான் அது தர்மயாரோபரூப விபரீதஜ்ஞாநமென்று திருவுள்ளம்.” என்று அதன் அரும்பத ஸ்ரீஸூக்தியும் நினைக்கத்தக்கது.
    • ஆத்மாவினுடைய தர்மமான பகவானுக்கு மட்டும் அடிமைப்பட்டு இருத்தல் என்பதை மாறாக தேவதாந்தரங்களுக்கு சேஷமாக நினைப்பதால் அது அந்யதாஞானம்.
    • கேவலனான கைவல்யார்த்தி பரம புருஷார்த்தத்தை நிச்சயிக்கும் பொழுது அதைத் தவறாக பகவானை அனுபவிக்காமல் தன்னைத் தானே அனுபவிப்பதாகிற சிற்றின்பமாகக் நிச்சயிப்பதால் அது விபரீத ஞானமாகும்.
  • அந்யதாஞானம் மற்றும் விபரீத ஞானம் இரண்டையும் சேர்த்து விபர்யயம் என்று சொல்வதுண்டு.
  • “*துயக்கு* என்கிற சப்தத்தால் சொல்லப்படும் *ஸ்தாணூர்வா புருஷோவா* என்கிறபடியே க்ராஹ்யவஸ்துவை இன்னதென்று நிச்சயிக்கமாட்டாத ஸம்சயமும், *மயக்கு* என்கிற சப்தத்தால் சொல்லப்படும் ரஜ்ஜூ சுக்த்யாதிவிஷய ஸர்ப்பரூப்யாதி புத்திபோலே அதஸ்மிந் தத்புத்தியகிற விபர்யமும்” – என்கிற ஸ்ரீமத்வரவரமுனிகளின் ஆசார்ய ஹ்ருதய (ஸூ – 98) வ்யாக்யான ஸ்ரீஸூக்தியும் நினைக்கத்தக்கது

लक्षणस्य त्रीणि दूषणानि सन्ति, अव्याप्तिरतिओयाप्तिरसम्भवश्चेति । लक्ष्यैकदेशे लक्षणस्यावर्तनमव्याप्ति । लक्ष्यादन्यत्र वर्तमानत्वमतिव्याप्तिः। लक्ष्ये क्वाप्यवरतमनसम्भव । यथा जीवो गुनत्रयवश्य इत्युक्ते अव्याप्तिः, ज्ञानगुणक इत्य्क्ते अतिव्याप्तिः, चक्षुर्विषयो जीव इत्युक्तेSसम्भव एव । अत्रोक्तदूषणत्रयाभावात् प्रमाणलक्षणं सुस्थं ।

லக்ஷணஸ்ய த்ரீணி தூஷணாநி ஸந்தி, அவ்யாப்திரதிவ்யாப்திரஸம்பவம் | லக்ஷயைகதேசே லக்ஷணஸ்யாவர்தனமவ்யாப்தி | லக்ஷாயதந்யத்ர வர்த்தமானத்வமதிவ்யாப்தி: | லக்ஷ்யே க்வாப்யவரதமனஸம்பவ | யதா ஜீவோ குணத்ரயவச்ய இத்யுக்தே அவ்யாப்தி:, ஞாநகுணக இத்யுக்தே அதிவ்யாப்தி:, சக்ஷுர்விஷயோ ஜீவ இத்யுக்தேSஸம்பவ ஏவ | அத்ரோக்ததூஷணத்ரயாபாவாத் ப்ரமாண லக்ஷணம் ஸுஸ்தம் |

லக்ஷணம் என்றால் ஓரு வஸ்துவினிடத்திலேயே இருப்பதாய், அவ்வஸ்துவை மற்ற வஸ்துக்களில் இருந்து வேறுபடுத்திக்காட்டுவது என்று முன்பு உரைக்கப்பட்டது. ஒரு வஸ்துவிற்கு லக்ஷணம் உரைக்கும் பொழுது, அந்த லக்ஷணத்திற்கு மூன்று விதமான தூஷணங்கள் (குற்றங்கள்) ஸம்பவிக்கலாம். அவை அவ்யாப்தி, அதிவ்யாப்தி மற்றும் அஸம்பவம் ஆகும்.

உதாரணத்திற்கு பசு மாட்டிற்கு லக்ஷணம் உரைக்கும் பொழுது வெள்ளை நிறமுடையது பசுமாடு என்று லக்ஷணம் உரைத்தால், மற்ற நிறமுடைய பசுக்கள் விடுபடும். இது அவ்யாப்தியாகும்.

கொம்புடையது மாடு என்று கொண்டால், ஆட்டிற்கும் கொம்பு இருப்பதால் அது அதிவ்யாப்தி ஆகும். அந்த லக்ஷணம் ஆட்டையும் சேர்த்துக் கொள்ளும்.

Image result for goat

இரண்டு கால்கள் உள்ளது பசு மாடு என்றால், அது மாட்டையே குறிக்காததாகையால் அது அஸம்பவம் ஆகும்.

மூலத்தில் குறிப்பிட்டுள்ள உதாரணமாவது – ஜீவர்கள் முக்தர்கள், நித்யர்கள் மற்றும் பக்தர்கள் என் மூவகைப்படுவர்கள். ஜீவர்களுக்கு லக்ஷணம் சொல்லும் பொழுது – குணத்ரயவச்யர்கள் ஜீவர்கள் என்று கொண்டால் அது முக்தர்கள் மற்றும் நித்யர்களைக் குறிக்காது – ஆகையினால் அது அவ்யாப்தி ஆகும். ஞானத்தையுடையவன் என்று லக்ஷணம் சொன்னால் அது ஈச்வரனையும் குறிக்கும் ஆதலால், அது அதிவ்யாப்தி ஆகும். கண்ணால் பார்க்கப்படுபவன் ஜீவன் என்று சொன்னால் அது அஸம்பவம். ஒரு ஜீவனையும் கண்ணால் பார்க்க முடியாது.

  • இங்கு “இப்போது இவர்களுக்கு லக்ஷணம் – சேஷத்வத்தோடே கூடின ஜ்ஞாத்ருத்வம்.” என்கிற தத்வத்ரய சூர்ணிகையும் (61),
    • “சேஷத்வமாத்ரத்தை சொல்லில் அசித்வ்யாவ்ருத்தி ஸித்தியாமையாலும், ஜ்ஞாத்ருத்வமாத்ரத்தை சொல்லில் ஈச்வரவ்யாவ்ருத்தி ஸித்தியாமையாலும், சேஷத்வே ஸதி ஜ்ஞாத்ருத்வமே லக்ஷணம் என்கிறார்” என்கிற அதன் வ்யாக்யான ஸ்ரீஸுக்தியும் நினைக்கத்தக்கது.

இம்மூன்று தோஷங்களும் இல்லாதது லக்ஷணமாகும். ப்ரமைக்கு சொன்ன லக்ஷணமாவது இந்த மூன்று தோஷங்களும் இல்லாமல் உள்ளது.

साधकतमं करणम् । अतिशयित साधकं साधकतमं । यस्मिन् सत्यविलम्बेण ज्ञानमुत्पद्यते तदतिशयितमित्युच्यते ।

ஸாதகதமம் கரணம் | அதிசயித ஸாதகம் ஸாதகதமம் | யஸ்மிந் ஸத்யவிலம்பேந ஞானமுத்பத்யதே தததிசயிதமித்யுச்யதே |

கரணம் என்பது ஸாதகதமம் ஆகும். அதாவது மிகுந்த உபகாரத்தைச் செய்வது. இவ்விடத்தில் ப்ரமை உண்டாவதற்கு தாமதமில்லாமல் மிகுந்த உபகாரத்தைச் செய்வது என்று கொள்ளல் வேண்டும். அதாவது ப்ரமா எனப்படும் உள்ளதை உள்ளபடி வழங்குதல் எனும் ஞானம் விரைவாக உண்டாவதற்கு உபகாரத்தைச் செய்வது.

இத்தால், ப்ரமாணம் என்பதன் லக்ஷணத்தை (ப்ரமா கரணம்) விரிவாக அருளிச் செய்தாராயிற்று.

அடியேன் ஸுதர்சன ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment