ஸ்ரீ: ஸ்ரீமத்யை கோதாயை நம: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம:
निर्विकल्पकसविकल्पकभिन्नं प्रत्यक्षं द्विविधम्, अर्वाचीनमनर्वाचीनं चेति । अर्वाचीनं पुनर्द्विविधम्, इन्दिरियसापेक्षं तदनपेक्षं चेति । तदनपेक्षं द्विविधम् – स्वयंसिद्धंदिव्यं चेति । स्वयंसिद्धं-योगजन्यम्, दिव्यं भगवत्प्रसादजन्यम् अनर्वाचीनं तु, इन्द्रियानपेक्षं नित्यमुक्तेश्वरज्ञानम् । अनर्वाचीनं प्रसङ्गादुक्तम् । एव साक्षात्कारिप्रमाकरणं प्रत्यक्षमिति सिद्धम् ।
நிர்விகல்பகஸவிகல்பகபின்னம் ப்ரத்யக்ஷம் த்விவிதம், அர்வாசீனமநர்வாசீனம் சேதி | அர்வாசீனம் புனர்த்விவிதம், இந்திரியஸாபேக்ஷம் ததநபேக்ஷம் சேதி | ததநபேக்ஷம் த்விவிதம் – ஸ்வயம்ஸித்தம்திவ்யம் சேதி | ஸ்வயம்ஸித்தம்-யோகஜந்யம், திவ்யம் பகவத்ப்ரஸாதஜந்யம் அநர்வாசீனம் து, இந்த்ரியாநபேக்ஷம் நித்யமுக்தேஶ்வரஞானம் | அநர்வாசீனம் ப்ரஸங்காதுக்தம் | ஏவ ஸாக்ஷாத்காரிப்ரமாகரணம் ப்ரத்யக்ஷமிதி ஸித்தம் |
நிர்விகல்பகம், ஸ்விகல்பகம் என இரண்டு வகையான ப்ரத்யக்ஷமானது – (1) தாழ்ந்தது, (2) உயர்ந்தது என இரண்டு வகைப்படும்.
தாழ்ந்தது என்பது இந்த்ரியத்தைக் கொண்டு உண்டாவது, இந்த்ரியம் இல்லாமல் உண்டாவது என்று இருவகைப்படும். இந்த்ரியமில்லாமல் உண்டாவது என்பதும் தானே உண்டாவது (ஸ்வத ஸித்தம்), திவ்யம் (எம்பெருமானால் உண்டாவது) என்றும் இருவகைப்படும். தானே உண்டாவது – யோகத்தினால் உண்டாவது. திவ்யம் ஆவது எம்பெருமானின் அனுக்ரஹத்தினால் உண்டாவது.
- யோகிகளின் ப்ரத்யக்ஷமாவது (ஸ்வத ஸித்தமாவது) – யோகாப்யாஸத்தாலோ, அல்லது தபஸினாலோ உண்டாகிறது. ஆகையினாலே இவர்களால் வேறு லோகத்தில் நடப்பவை ப்ரத்யக்ஷமாகப் பார்க்கப்படுகிறது.
- திவ்யம் என்பது தேவனால் அளிக்கப்படுவது. தேவன் என்பது எம்பெருமானே. திவ் க்ரீடாதௌ என்கிற தாது ஸித்தமான அர்த்தம் எம்பெருமானையே குறிக்கும். இதுவே “மயர்வற மதிநலம் அருளுவது” (திருவாய் 1-1-1). பகவத் கீதையிலே இது தன்னையே दिव्यं ददामि ते चक्षुः [திவ்யம் ததாமி தே சக்ஷு:] (11-8) என்றருளினான்.
- இங்கு ஸ்வாமி எம்பெருமானார் வ்யாக்யானம் – तव दिव्यम् – अप्राकृतं मद्दर्शनसाधनं चक्षुर्ददामि [தவ திவ்யம் – அப்ராக்ருதம் மத்தர்சனஸாதனம் சக்ஷுர்ததாமி] என்பது நினைக்கத்தக்கது.
அநர்வாசீநமாவது இந்த்ரியங்களின் உதவியில்லாமல் வரும் அறிவு. இது பகவானுக்கும், நித்யர்களுக்கும், முக்தர்களுக்கும் உள்ளது. இது ப்ரஸங்காத் சொல்லப்பட்டது.
-
உபநிஷதானது अपाणिपादो जवनो गृहीता पश्यत्यचक्षुः स श्रुणोत्यकर्णः [அபாநிபாதோ ஜவனோ க்ருஹீதா பச்யத்யசக்ஷு: ஸ ச்ருநோத்யகர்ண:] என்றது. அதாவது எம்பெருமானுக்கு ஒரு பொருளை எடுப்பதற்குக் கைகள் தேவையில்லை. கண்கள் பார்ப்பதற்கு அவசியமில்லை. அவனது திருவருளால், முக்தியடைந்தார்க்கும் இது கலங்காப்பெருநகரம் என்னும் பரமபதம் அடைந்தவுடன் இது ஸம்பவிக்கிறது.
-
ஸ்வாமி கூரத்தாழ்வான் தம்முடைய வரதராஜஸ்தவத்தில் 24-வது ஶ்லோகத்தில் இந்த விபூதியிலே பேரருளாளப் பெருமாளை இவ்விதம் அவனது திருவருளால் இந்த்ரியங்களின் அடைவுகெட அனுபவிக்க ஆசைப்பட்டதும் இந்த ரீதியிலே – முக்தி தசையில் அனுபவிக்கப் படுவதை இங்கு அனுபவிக்க ஆசைப்பட்டார்
ननु यथावस्थितव्यवहारानुगुणं ज्ञानं प्रमेति उक्तम् । एवं च स्मृतेरपि यथावस्थित व्यवहारानुगुणज्ञानत्वेन प्रामाण्यात् स्मृतेरपि प्रमाणत्वेन परिगणनात् त्रीण्येव प्रमाणानि इति कथं प्रतिपाद्यते इति चेत्; उच्यते – स्मृतेः प्रामाण्याङ्गीकारेSपि संस्कारसापेक्षत्वात्, तस्य प्रत्यक्षमूलत्वात् मूलभूतप्रत्यक्षेSन्तर्भावः इति न पृथक्प्रमाणत्वकल्पनम् । अतः त्रीण्येवेति सम्भवति ॥
நநு யதாவஸ்திதவ்யவஹாரானுகுணம் ஞானம் ப்ரமேதி உக்தம் | ஏவம் ச ஸ்ம்ருதேரபி யதாவஸ்தித வ்யவஹாராணுகுணஞாநத்வேன ப்ராமாண்யாத் ஸ்ம்ருதேரபி ப்ரமாணத்வேன பரிகணனாத் த்ரீந்யேவ ப்ரமாணானி இதி கதம் ப்ரதிபாத்யதே இதி சேத்; உச்யதே – ஸ்ம்ருதே: ப்ராமாண்யாங்கீகாரேSபி ஸம்ஸ்காரஸாபேக்ஷத்வாத், தஸ்ய ப்ரத்யக்ஷமூலத்வாத் மூலபூதப்ரத்யக்ஷேSந்தர்பாவ: இதி ந ப்ருதக்ப்ரமாணத்வகல்பனம் | அத: த்ரீண்யேவேதி ஸம்பவதி ||
இப்பொழுது ஸ்ம்ருதி என்பது தனி ப்ரமாணம் அல்லவா? என்று விசாரிக்கப்படுகிறது. அதற்கு முன்பு ஸ்ம்ருதி என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். ஸ்ம்ருதியாவது ஒரு வஸ்துவை முன் அனுபவித்ததால் எழும் ஜ்ஞானம் ஆகும். அதாவது முன் அறிந்ததை மறுபடியும் நினைத்துக் கொள்வது.
இப்பொழுது மூலம் விளக்கப்படுகிறது. – ஒரு வஸ்துவை உள்ளது உள்ளபடி அறிவது ப்ரமா என்று சொல்லப்பட்டது. அப்படிக் கொண்டால் ஸ்ம்ருதியும் ஒரு ப்ரமாணமாகும். அப்படி இருக்கும் பொழுது, ப்ரமாணங்கள் மூன்று தான் என்று சொல்வது எப்படி என்று கேட்டால்?
பதில் சொல்கிறோம். ஸ்ம்ருதியை ப்ரமாணம் என்று அங்கீகரிப்பதற்குக் காரணம் ஸம்ஸ்காரம் ஆகும். அந்த ஸம்ஸ்காரம் ப்ரத்யக்ஷத்தாலே உண்டாகிறது. எனவே ஸ்ம்ருதியை தனி ப்ரமாணமாகக் கொள்ள வேண்டியது இல்லை – அது ப்ரத்யக்ஷத்திலேயே அடங்கி விடுகிறது.
- ஸம்ஸ்காரம் என்பது கீழே விளக்கப்படுகிறது.
स्मृतिर्नाम पूर्वानुभवजन्यसंस्कारमात्रजन्य ज्ञानम् । तत्र चोद्बुद्धः संस्कारो हेतुः । तदुद्बोधश्च “सदृशादृष्टचिन्ताद्याः” इत्युक्तप्रकारेण क्वचित् सदृशदर्शनात् भवति, क्वचित् अदृष्टात्, क्वचिच्चिन्तया । आदिशब्देन साहचर्यस्यापि ग्रहणात्तेनापि च भवति । सादृश्यजा यथा – देवदत्तयज्ञदत्तयोः सदृशयोर्देवदत्तदर्शन यज्ञदत्तस्मृतिः । द्वितीया यथा – यादृच्छिक कालान्तरानुभूत श्रीरङ्गादि दिव्यदेशस्मृतिः । तृतीया यथा चिन्त्यमाने श्रीवेङ्कटेशस्य कमनीयदिव्यमन्ङ्गलविग्रहस्मृतिः । चतुर्थी तु – सहचरितयोर्देवदत्तयज्ञदत्तयोर्मध्ये अन्यतरदर्शनेन तदन्यतरस्मृतिः । सम्यगनुभूतस्य सर्वस्य स्मृतिविषयत्वनियमः । क्वचित् कालदैर्ध्यात् व्याध्यादिना वा संस्कारस्य प्रमोषात् स्मृत्यभावः ।
ஸ்ம்ருதிர்நாம பூர்வானுபவஜன்யஸம்ஸ்காரமாத்ரஜன்ய ஞானம் | தத்ர சோத்புத்த: ஸம்ஸ்காரோ ஹேது: | ததுத்போதச்ச “ஸத்ருஷ-அத்ருஷ்ட – சிந்த்யாத்யா:” இத்யுக்தப்ரகாரேண க்வசித் ஸத்ருஷதர்ஷநாத் பவதி, க்வசித் அத்ருஷ்டாத், க்வசிச்சிந்தயா | ஆதிஶப்தேந ஸாஹசர்யஸ்யாபி க்ரஹநாத்தேனாபி ச பவதி | ஸாத்ருஶ்யஜா யதா – தேவதத்தயஞ்தத்தயோ: ஸத்ருஶயோர்தேவதத்ததர்ஷன யஞ்தத்தஸ்ம்ருதி: | த்விதீயா யதா – யாத்ருச்சிக காலான்தரானுபூத ஸ்ரீரங்காதி திவ்யதேஶஸ்ம்ருதி: | த்ருதீயா யதா சிந்த்யமானே ஸ்ரீவேங்கடேஸஸ்ய கமனீயதிவ்யமங்கலவிக்ரஹஸ்ம்ருதி: | சதுர்தீ து – ஸஹசரிதயோர்தேவதத்தயஞதத்தயோர்மத்யே அந்யதரதர்ஷநேன ததந்யதரஸ்ம்ருதி: | ஸம்யகனுபூதஸ்ய ஸர்வஸ்ய ஸ்ம்ருதிவிஷயத்வநியம: | க்வசித் காலதைர்த்யாத் வ்யாத்யாதினா வா ஸம்ஸ்காரஸ்ய ப்ரமோஷாத் ஸ்ம்ருத்யபாவ: |
ஸ்ம்ருதி என்பது முன் அநுபவத்தினால் உண்டான ஸம்ஸ்காரத்தினால் மட்டும் உண்டாகும் ஜ்ஞானம். இதற்கு ஸம்ஸ்காரம் தான் முக்கிய காரணம் ஆகும். அந்த ஸம்ஸ்காரம் வருவதற்கு காரணங்கள்
- ஒற்றுமை,
- அத்ருஷ்டம்,
- சிந்தை
சில சமயங்களில் முன்பு பார்க்கப்பட்ட வஸ்துவிற்கும், இப்பொழுது பார்க்கப்படுகிற வஸ்துவிற்கும் இருக்கும் ஒற்றுமையினாலும், சில சமயங்களில் அத்ருஷ்டத்தாலும், சில சமயங்களில் சிந்தையினாலும் உண்டாகிறது. “ஆதி” ஶப்தத்தால் ஸாஹசர்யம் சொல்லப்பட்டது. இவற்றுக்கு உதாரணங்கள்
(1) ஒருவருக்கொருவர் ஒப்பாக உள்ள தேவதத்த யஜ்ஞதத்தர்களுள் தேவதத்தனைப் பார்க்கும் பொழுது, வரும் யஜ்ஞதத்தனின் நினைவு.
(2) யாத்ருச்சிகமாக வேறு காலத்தில் அநுபவித்த ஸ்ரீரங்கம் முதலான திவ்யதேஶங்களின் நினைவு,
(3) சிந்திக்கும் பொழுது தோற்றும் ஸ்ரீவேங்கடேசனுடைய ரம்யமான திருமேனியின் நினைவு.
(4) எப்பொழுதும் சேர்ந்தே பார்க்கப்பட்ட தேவதத்தன், யஜ்ஞதத்தன் ஆகியவர்களில், தேவதத்தனைப் பார்க்கும் பொழுது வரும் யஜ்ஞதத்தனின் நினைவு. இதற்கும் (1) வித்யாஸம் உள்ளது. முதலாவது ஆகார ஒற்றுமை (உருவ ஒற்றுமை) யினால் உணர்த்தப்படுவது. இங்கு யானையையும் அதன் பாகனையும் சேர்த்தே பார்த்த ஒருவனுக்கு, யானையைக் கண்டவுடன் வரும் பாகனின் நினைவு.
நன்றாய் அநுபவிக்கப்பட்ட விஷயங்கள் அனைத்தும் நினைவுக்கு வராமல் இருக்காது. ஆனால் நீண்ட காலமாவதாலும், வ்யாதி முதலியவைகளாலும் ஸம்ஸ்காரம் மழுங்கிப் போவதால் நினைவுக்கு வருவதில்லை.
यथा स्मृतेः प्रत्यक्षेSन्तर्भावः एवं “सोSयं देवदत्तः ” इति प्रत्यभिज्ञाया अपि प्रत्यक्षेSन्तर्भावः ॥
யதா ஸ்ம்ருதே: ப்ரத்யக்ஷேSந்தர்பாவ: ஏவம் “ஸோSயம் தேவதத்த: ” இதி ப்ரத்யபிஜ்ஞா அபி ப்ரத்யக்ஷேSந்தர்பாவ: ||
எப்படி ஸ்ம்ருதியானது ப்ரத்யக்ஷத்தில் அடங்கிவிடுகிறதோ, அப்படியே “இந்தக் காலத்தில் இங்கு பார்க்கப்பட்ட தேவத்தத்தன், முன்னொரு காலத்தில் வேறிடத்தில் பார்க்கப்பட்ட தேவத்தத்தன் தான்” என்னும் ப்ரத்யபிஜ்ஞாவும் ப்ரத்யக்ஷத்தில் அடங்கிவிடுகிறது.
- இந்த ப்ரத்யபிஜ்ஞா என்பது நிர்விகல்பக/ஸவிகல்பக ஞானம், ஸ்ம்ருதி ஆகியவற்றிலிருந்து மாறுபட்டது. எல்லாவற்றிற்கும் ஆகாரம் பொதுவானது என்றறிவது ஸவிகல்பக ஞானம். ஸ்ம்ருதியின் ஸம்ஸ்கார காரணங்கள் (நான்கு) கீழே விளக்கப்பட்டன. ப்ரத்யபிஜ்ஞா என்பது முன்னொரு காலத்தில் வேறிடத்தில் பார்க்கப்பட்ட தேவத்தத்தனே, இந்தக் காலத்தில் இங்கு பார்க்கப்பட்ட தேவத்தத்தன் என்னும் ஞானம்.
अस्मन्मते अभावस्य भावन्तर रूपत्वात्तस्यापि प्रत्यक्षेSन्तर्भावः । घटप्रागभावो नाम मृदेव । घटध्वंसश्च कपालमेव । प्रायः पुरुषेणानेन भवितव्यमित्येतत् ऊहः । संशय उक्तः ॥ तयोरपि प्रत्यक्षे अन्तर्भावः । पुण्यपुरुषनिष्ठा प्रतिभापि प्रत्यक्षेSन्तर्गता ॥
அஸ்மந்மதே அபாவஸ்ய பாவந்தர ரூபத்வாத்தஸ்யாபி ப்ரத்யக்ஷேSந்தர்பாவ: | கடப்ராகபாவோ நாம ம்ருதேவ | கடத்வம்ஸச்ச கபாலமேவ | ப்ராய: புருஷேநாநெண பவிதவ்யமித்யேதத் ஊஹ: | ஸம்ஸய உக்த: || தயோரபி ப்ரத்யக்ஷே அந்தர்பாவ: | புண்யபுருஷநிஷ்டா ப்ரதிபாபி ப்ரத்யக்ஷேSந்தர்கதா ||
பரம வைதிக மதமான எம்பெருமானார் தரிசனத்தில், அபாவம் என்பது ஒரு தனி பதார்த்தமாகக் கொள்ளப்படவில்லை. அதுவும் ப்ரத்யக்ஷத்தில் அடங்கி விடுகிறது. வைசேஷிகர்களான தார்க்கிகர்கள் அபாவம் என்பது ஒரு தனி பதார்த்தம் என்றும், அது ப்ராகபாவம் (இல்லாமை), ப்ரத்வம்ஸாவாம் (த்வம்ஸமாகை) என்றும் கொள்கிறார்கள். உதாரணத்திற்கு, ஒரு குடம் செய்வதன் முன்பு அது காணப்படாது – அது ப்ராகபாவம்; அது உருவாகி உடைந்த பின்பும் அது காணப்படாது – அது ப்ரத்வம்ஸாவாம் என்கிறார்கள்.
இது கல்பிப்பதே – ப்ராகபாவம் – மண்கட்டி (குடம் ஆவதன் முன்); ப்ரத்வம்ஸாவாம் – கபாலங்கள்.
அதே போன்று ஊஹமும் (ஒரு வஸ்துவில் கால்/கை அசைவதால் அவன் மனிதனே என்பது) ப்ரத்யக்ஷத்தில் அடங்கி விடுகிறது. ஸம்ஸயம் என்பது கீழே விளக்கப்பட்டது. அதுவும் ப்ரத்யக்ஷத்தில் அடங்கி விடுகிறது.
புண்ணியம் புரிந்த ஒரு புருஷனிடத்தில் இருக்கிற ப்ரதிபையும் ப்ரத்யக்ஷத்தில் அடங்கி விடுகிறது. ப்ரதிபையாவது ஒரு மலை, நதி ஆகியவைகளைக் கண்டால் மேன்மேலும் அதைப் பற்றித் தோன்றும் ஞானம்.
அடியேன் ஸுதர்சன ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org
On Mon 4 May, 2020, 10:09 PM SrIvaishNava granthams in thamizh, wrote:
> sutharsansvpr posted: “ஸ்ரீ: ஸ்ரீமத்யை கோதாயை நம: ஸ்ரீமதே சடகோபாய நம:
> ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
> ஸ்ரீமத் வரதகுரவே நம: யதீந்த்ரமத தீபிகை < निर्विकल्पकसविकल्पकभिन्नं प्रत्यक्षं द्विविधम्, अर्वाचीनमनर्वाचीनं चेति ।
> अर”
>