யதீந்த்ரமத தீபிகை – பகுதி – 8

ஸ்ரீ:  ஸ்ரீமத்யை கோதாயை நம:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம:

யதீந்த்ரமத தீபிகை

<< பகுதி – 7

ஆக இந்த முதல் அவதாரத்தால், ஸித்தாந்த ஸங்க்ரஹத்தை முதலில் சொல்லி, பின்பு, உத்தேச, லக்ஷண, பரீக்ஷா க்ரமத்தில் உத்தேசிக்கப்பட்ட பதார்த்தங்களின் பிரிவினைக் காட்டி, அதன் பின்பு முதலில் ப்ரத்யக்ஷத்தை விசாரிக்க ஆரம்பித்து, ப்ரமாணத்தின் லக்ஷணத்தைச் சொல்லி, ஸம்சய அந்யதா விபரீத ஜ்ஞானங்களை விவரித்து, லக்ஷணத்தின் தோஷங்களைக் காண்பித்து, அத்தோஷங்கள் கீழ்ச் சொன்ன லக்ஷணத்தில் இல்லை என்பது விளக்கியருளி, நிர்விகல்பகம் – ஸவிகல்பகம் ஆகியவற்றை விளக்கி, நிர்விகல்பகம் வஸ்து மாத்ரம் க்ரஹிப்பது அன்று என்று விளக்கியருளி, ப்ரத்யக்ஷ ஜ்ஞானம் உண்டாகும் விதத்தினைக் காட்டி, நிர்விகல்பக ஜ்ஞானத்தின் பிரிவுகள் காட்டியருளி, ஸ்ம்ருதி, ப்ரத்யபிஞை ஆகியவைகள் தனிப் ப்ரமாணம் அன்று – அவைகள் ப்ரத்யக்ஷத்தில் அடங்கிவிடுகிறது என்பதையும் காட்டி அபாவத்தின் அநங்கீகாரத்தையும் காட்டி, ஜ்ஞானங்கள் அனைத்தும் உண்மையே என்கிற ஸத்க்யாதி பக்ஷத்தைக் விளக்கியருளி, அதன் காரணத்தையும் காட்டி, வாக்யஜன்ய ஞானம் ப்ரத்யக்ஷம் அன்று என்பதையும் விளக்கியருளி, காணாதம் எனப்படும் ந்யாய மதம் முதலானவற்றை ஏற்காத காரணங்களையும் அருளிச் செய்து இந்த ப்ரத்யக்ஷ அவதாரத்தைத் தலைக்கட்டியருளுகிறார்.

முதல் அவதாரம் முற்றிற்று.

அடியேன் ஸுதர்சன ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment