வரதன் வந்த கதை 15-1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 14-3 அத்திகிரி அமலன் அயன் முகம் நோக்கிப் பேசத் தொடங்கினான் !! பிள்ளாய் பிரமனே, பற்பல சிரமங்களை அனுபவித்தும் மனம் தளராமல் வேள்வியை நன்கு நடத்தி முடித்தாய் ! உன் தளராத உள்ளமும் உறுதியும் கண்டு பூரிப்படைந்தேன் நான்! என்ன வரம் வேண்டுமோ கேட்டுப் பெற்றுக் கொள் ! தருவதற்கு நான் தயாராய் இருக்கிறேன் என்றான் … Read more

வரதன் வந்த கதை 14-3

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 14-2 பெருவிசும்பருளும் பேரருளாளன் புன்முறுவல் பூத்தபடி பிரமனுடைய தோத்திரங்களை ஏற்றுக் கொண்டிருந்தான் ! பெருமானுடைய பெருங்கருணையை எண்ணியபடி பிரமனும் அவனைப் போற்றிக் கொண்டிருந்தான் ! இறைவா! ஆமுதல்வனே! உன்னை நம்புபவர்களை நீயே வழி நடத்துகின்றாய் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி விட்டது! தனி நின்ற சார்விலா மூர்த்தீ! அடியார்களிடம் உனக்குத்தான் எத்தனை அன்பு. பக்த … Read more

வரதன் வந்த கதை 14-2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 14-1 பொன்மலை உதித்தாற் போல் , புண்ணிய கோடி விமானம் தோன்ற,  அதனுள் (ஒளியில்) ஸூர்யனும் தோற்றுப் போகக் கூடிய அளவிற்கு; ஒளி வெள்ளமாய் வரதன் வந்துதித்தான் !! “சைத்ர மாஸி ஸிதே பக்ஷே சதுர்தச்யாம் திதௌ முனே: சோபனே ஹஸ்த நக்ஷத்ரே ரவிவார ஸமந்விதே | வபாஹோமே ப்ரவ்ருத்தே து ப்ராதஸ் ஸவந காலிகே … Read more

வரதன் வந்த கதை 14-1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 13 உன்னுடைய வடகரையில் நான் நித்தியமாக வாஸம் செய்யப் போகிறேன் என்று வேகாஸேதுப் பெருமான் சொன்னதை கவனமுடன் கேட்டான் பிரமன் ! மேலும் உனக்கான பரிசு விரைவில் என்று அவன் திருவாய் மலர்ந்தருளியதும் அவன் ( பிரமன் ) நெஞ்சில் நிழலாடின ! தேவர்களுக்கும் ரிஷி முனிவர்களுக்கும் ஏற்பட்ட (யாக பச ) பிரச்சினையும், தான் … Read more

வரதன் வந்த கதை 13

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 12-2 இதோ காஞ்சியை நோக்கிப் பாய்ந்து வருகின்றாள் வேகவதி .. இரண்டிடத்தில் அணையாய்க் கிடந்து, இறைவன் ; தன்னைக் காட்டிடக் கண்ட கலைமகள் மீண்டுமொரு முறை அவனைத் தரிசித்திட ஆசைப்பட்டாள். அவனைத் தரிசிக்க இச்சை (ஆசை) தானே தகுதி ! “கூடுமனமுடையீர்கள் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ” என்றும் “போதுவீர் போதுமினோ” என்றும் தமப்பனாரும் திருமகளாரும் (பெரியாழ்வாரும், … Read more

வரதன் வந்த கதை 12-2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 12-1 பிரமனுடைய வேள்வியைக் குலைத்திட, ஸரஸ்வதி வேகவதியாய் உருமாறி, கடுங்கோபத்துடன் விரைந்து வந்து கொண்டிருந்தாள் ! சுக்திகா, கநகா, ஸ்ருப்ரா, கம்பா, பேயா, மஞ்சுளா, சண்டவேகா என்கிற ஏழு ப்ரவாஹங்களுடன் (பெருக்குகளுடன்) அந்நதி பாய்ந்து வந்தது ! கங்கையை விட வேகமாகப் பெருகினபடியால் “வேகவதி” என்று இந்நதி பெயர் பெற்றதாம் ! அனைவரும் கலக்கமுற்று என்ன … Read more

வரதன் வந்த கதை 12-1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 11-3 எம்பெருமான் வேள்வியினால் மகிழ்ச்சியடைகிறான் ! யஜ்ஞம் என்றால் அவனுக்கு அத்தனை இட்டமாம் ! அவ்வளவு ஏன் ?! அவனுக்கே “யஜ்ஞ:” என்று திருநாமம் உண்டு! – தானே யஜ்ஞமாயுள்ளவன் என்பது பொருள் .. “அஹம் க்ரதுரஹம் யஜ்ஞ: ஸ்வதாஹம் அஹமௌஷதம் | மந்த்ரோஹம் அஹமேவாஜ்யம் அஹமக்நிரஹம் ஹுதம் || ” ( கீதை 9-16 … Read more

வரதன் வந்த கதை 11-3

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 11-2 திருவட்டபுயகரம் – காஞ்சியில் வைகுந்த வாசலுடன் விளங்கும் ஒரே க்ஷேத்ரம் ! எட்டுத் திருக்கரங்களுடன் பகவான் சேவை ஸாதிக்கும் தலம். வலப்புறம் உள்ள நான்கு கரங்களில் சக்கரம், வாள், மலர், அம்பு ஆகியவற்றையும், இடப்புறம் உள்ள நான்கு கைகளில் சங்கு, வில், கேடயம், தண்டு ஆகியவற்றை ஏந்தினபடி இங்கு இன்றும் நம்மைக் காத்து நிற்கிறான் … Read more

வரதன் வந்த கதை 11-2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 11-1 பிரமனையும், அவனுடைய வேள்வியையும் ரக்ஷிக்க, எம்பெருமான் , எட்டுத் திருக்கரங்களுடன் பல்வகை ஆயுதங்களைத் தாங்கினவனாய்த் தோன்றினான் ! மலர்ந்த முகத்துடன், காளியையும் அவளுடன் வந்த கொடிய அரக்கர்களையும் எதிர்கொண்டான். கணப்பொழுதில் வெற்றி இறைவன் வசமானது ! காளி விரட்டியடிக்கப்பட்டாள். அரக்கர்கள் மாய்ந்தொழிந்தனர் ! பிரமனுக்காக விரைந்து வந்தவன், வந்த காரியத்தையும் விரைவாக முடித்திட்டான் ! … Read more

வரதன் வந்த கதை 11-1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 10-2 அயர்வறும் அமரர்கள் அதிபதியைக் கண்டு விட வேண்டும் என்கிற துடிப்பினோடு , பிரமன் வேள்வியை நடத்திக் கொண்டிருந்தான் ! வசிஷ்டர் மரீசி போன்ற அறிவிற்சிறந்த பெருமக்களைக் கொண்டு நடத்தப்படும் இந்த யாகத்தினை தரிசிக்க, பலரும் பெருமளவில் குழுமியிருந்தனர் ! இடர்ப்பாடுகள் தொடர்ச்சியாக ஏற்படுவதையும் , அவற்றை எம்பெருமான் உடனுக்குடன் போக்கியருள்வதையும் நினைத்துப் பார்த்த பிரமன், … Read more