ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
e-book – https://1drv.ms/b/s!AoGdjdhgJ8HegQmXL5rsR4a6JQYk
திவ்ய தேசங்களின் பெருமைகள் பக்தர்களுக்குப் பரவசமூட்டுபவை ! எம்பெருமானுடைய உயர்ந்த சரித்திரங்களே அவனை நம்பியவர்களுக்கு அரு மருந்தாம் !
அவ்வகையில் ஸத்ய வ்ரத க்ஷேத்திரம் என்று கொண்டாடப்படுகின்ற காஞ்சியின் மஹிமையும், இங்குறையும் பேரருளாளனின் பெருமையும் எத்தனை அனுபவித்தாலும் தெவிட்டாத தெள்ளமுதம் ஆகும்..
ஃபேஸ் புக்கில் அவ்வப்போது ஸம்ப்ரதாய விஷயங்களைப் பதிவிடும் வழக்கம் கொண்டுள்ள அடியேன், “மல்லனின் மாண்பு ” என்கிற பெயரில் பிள்ளையுறங்காவில்லி தாஸரின் பெருமைகளை ஒரு தொடராக வரைந்தேன்..
அன்பர்களின் அமோக ஆதரவினை அப்படைப்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து காஞ்சீ பேரருளாளனின் வைபவத்தை , வரதன் வந்த கதை என்கிற பெயரில் எழுதலானேன் ! காஞ்சியின் பற்பல திவ்யதேசங்களின் சரித்திரங்களை உள்ளடக்கிய இத்தொடரும் வாசகர்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றது !
தமிழ் மொழி அறியாதாரும் தேவப்பெருமாள் பெருமை பேசிடும் அத்தொடரின் பொருளை அறிய மொழிபெயர்ப்பு இன்றியமையாததாகிறது.
ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப் பெற்றால் , பலரும் படித்துப் பயனடையக் கூடும் என்றெண்ணினோம்.
அதன் பொருட்டு சில அன்பர்களின் உதவியை நாடினோம். ஒரே நேரத்தில் இருவேறு இடத்தில், இரு ஸ்வாமிகள் ஆங்கில மொழிபெயர்ப்பில் ஈடுபட்டனர் !
ஸ்ரீமான்.உ.வே. R.S.ராமானுஜம் என்பவர் ஏற்கெனவே இத்தொடரினை மொழி பெயர்ப்பு செய்துள்ளார்.
அடியேன் ப்ரார்த்தனையின் பேரில் அந்த ஸ்வாமி அருமையாக மொழி பெயர்ப்பு செய்து கொடுத்தார்.
மொழிபெயர்ப்பு செய்ய வேண்டி , அடியேன் ஸ்ரீமான் உ.வே. சாரதி தோத்தாத்திரி ஸ்வாமியையும் ப்ரார்த்தித்திருந்தேன்.
அவரும் ஸ்ரீமான். உ.வ தோத்தாத்திரி திருமலை ஸ்வாமியைக் கொண்டு இத்தொடரினை மொழிபெயர்ப்பு செய்துள்ளார் !
இத்தொடரினை இருவேறு நபர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்துள்ளது இவ்வடியவனின் பேறேயாம் .
விரைவில் ஹிந்தியிலும் இந்நூல் மொழிபெயர்ப்பு செய்யப்படும் என்று நம்புகிறோம்.
பேரருளாளன் அருள் புரிவானாக !
இச்சீரிய பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அனைவருக்கும் இவ்வடியவனின் அஞ்சலிகளும் நன்றிகளும் உரித்தாகுக !
- பகுதி 1
- பகுதி 2
- பகுதி 3
- பகுதி 4
- பகுதி 5
- பகுதி 6
- பகுதி 7
- பகுதி 8
- பகுதி 9
- பகுதி 10-1
- பகுதி 10-2
- பகுதி 11-1
- பகுதி 11-2
- பகுதி 11-3
- பகுதி 12-1
- பகுதி 12-2
- பகுதி 13
- பகுதி 14-1
- பகுதி 14-2
- பகுதி 14-3
- பகுதி 15-1
- பகுதி 15-2
அடியேன் – அக்காரக்கனி தி.அ.ஸ்ரீநிதி தாஸன் !
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org