யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் – எளிய தமிழாக்கம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

srisailesa-thanian

பெரிய பெருமாள் தொடக்கமான குருபரம்பரையில் மணவாள மாமுனிகள் கடைசி ஆசார்யராக கருதப்படுகிறார். சாஸ்ப்ரங்களையும் ப்ரபந்தங்களையும் தம் ஆசார்யரான திருவாய்மொழிப் பிள்ளையிடம் கற்ற அவர் தம் ஆசார்யர் விரும்பிய வண்ணம் ஸ்ரீரங்கத்தில் இருந்து வந்தார். ஈடு காலக்ஷேபத்தை (நம்பிள்ளையின் காலக்ஷேபங்களை அடிப்படையாகக் கொண்டு வடக்குத் திருவீதிப்பிள்ளை அருளிய திருவாய்மொழி விளக்கம்) மணவாள மாமுனிகள் செய்து அதனைக் கேட்க பெரிய பெருமாள் விரும்பி, காலக்ஷேபம் கேட்க ஏதுவாக ஸ்ரீரங்கத்தில் அனைத்து உத்சவங்களையும் ஒரு வருட காலத்திற்கு நிறுத்தி வைத்தார். காலக்ஷேபத்தின் முடிவில் கோயிலின் அர்ச்சகரின் பிள்ளை உருவில் தோன்றி மணவாள மாமுனிகளுக்கு ஒரு தனியன் அருளி அதன் மூலம் மணவாள மாமுனியை தம் ஆசார்யர் என்று காட்டினார்.

மணவாள மாமுனிகளின் பெருமைகளை 16 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பிள்ளைலோகம் ஜீயர் ‘ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் ‘ என்ற பெயரில் இயற்றினார்.

“யதீந்த்ர” என்ற பதம் துறவிகளின் அரசரான பகவத் ராமாநுஜரைக் குறிக்கும். பகவத் ராமானுஜரின் நேர் அவதாரமாக கருதப்படும் மணவாள மாமுனிகள் ராமாநுஜரிடம் ஆழ்ந்த பற்று கொண்டிருந்தார். அத்தகைய மணவாள மாமுனிகளின் சிறப்பைக் குறித்து பிள்ளை லோகம் ஜீயர் யதீந்த்ர ப்ரவண ப்ரபாவத்தில் அருளியுள்ளார். இனி வரும் நாட்களில் நாமும் அமுதிலும் இனிதான அவருடைய அருளிச்செயலை அனுபவித்து அதன் மூலம் பொய்யிலாத மணவாள மாமுனிகளின் பெருமைகளை அறிந்து கொள்வோம்.

ஆதாரம் – https://granthams.koyil.org/yathindhra-pravana-prabhavam-english/

அடியேன் கீதா ராமானுஜ தாஸ்யை

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org