த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 9

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்

<< பகுதி 8

இந்தக் கட்டுரையில் நாம் ஸ்வாமி எம்பெருமானாரின் கப்யாச ச்ருதி வ்யாக்யானத்தில் ஆழ்வார்களின் திருவுள்ளக்கருத்து எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை ஆய்வோம்.

கம்பீராம்பஸ்ஸமுத்பூத புண்டரீக – தாமரை ஜலஜம், அல்லது அம்புஜம் அல்லது நீரசம் எனப்படும். அது நீரில் தோன்றுவதால் இப்பெயர்களைப் பெறுகிறது. தாமரை தோன்ற  வேறு வழி இல்லை. அது நிலத்தில் தோன்றாது. ஆகவே இப்பெயர்கள் அதற்கே உரியன. அம்பஸ் சமுத்பூத எனில் நீரில் தோன்றிய என்பதாம். ஸ்ரீவசனபூஷனத்தில் ஸ்வாமி பிள்ளை லோகாசார்யர் “தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரிந்தால் அத்தை உலர்த்துமாபோலே” என்கிறார்.  இதனால் தாமரைக்குத் தண்ணீர் எவ்வளவு இன்றியமையாதது என விளங்குகிறது.

எம்பெருமானின் தாமரைக்கண்கள் தண்ணீரில் தோன்றும் தாமரைக்கு ஒப்பிடப் படுகின்றன. நீரில் தோன்றும் தாமரையின் இத்தன்மை ஆழ்வார்களின் பாசுரங்களில் காணக் கிடைக்கின்றது. சிறிய திருமடலில், திருமங்கை மன்னன், ”நீரார் கமலம்போல் செங்கண் மால் என்றொருவன்” என்கிறார். எம்பெருமானின் சிவந்த கண்கள் அழகியநீர்த் தாமரை போலுள்ளன. மேலும் திருவிருத்தத்தில் ஆழ்வார் “அழலலர் தாமரைக் கண்ணன்” என்கிறார் இதே பொருளில். இவ்விடத்து வ்யாக்யானத்தில் ஸ்வாமி நம்பிள்ளை கப்யாச ஸ்ருதியை நன்கு மேற்கோள் காட்டி விளக்குகிறார். வாதிகேசரி ஜீயரின் ச்வாபதேசமும் இதைத் தழுவியே அமைந்துள்ளது.

இதில் முதற்பதம் “கம்பீர” எனும் அடைமொழி நீரின் விரிவைக் குறிப்பது ஆழ்வாரின் திருவாய்மொழியில் “தண் பெருநீர் தடந்தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண் பெருங்கண்ணன்” என வருகிறது. தாமரை பெரிய குளிர்ந்த தடாகத்தில் பூத்துள்ளது, எம்பெருமானின் திருக் கண்களும்  அவ்வாறுள்ளன.

”ஸம்ர்ஷ்ட நால புண்டரீக” – தாமரை எவ்வாறு நீரைச் சார்ந்தே உள்ளதோ அதே அளவு தன் தடித்த செவ்விய தண்டையும் சார்ந்துள்ளது/தண்டு பற்றிய குறிப்பும் ஆழ்வார் பாசுரங்களிளிருந்தே கிடைக்கிறது. திருவிருத்தத்தில் ஆழ்வார், “எம்பிரான் தடங்கண்கள் மென்கால் கமலத் தடம்போல் பொலிந்தன” எம்பெருமானின் அழகிய திருக் கண்கள் எழிலார்ந்த தண்டின்மீது துலங்கும் தாமரைபோல் பொலிந்தன.

”ரவிகர விகசித” – நீரில் தண்டால் தாங்கப்படும் தாமரை மலர்வது சூரியனின் கிரணங்களால் சொல்லமுடியாத பேரழகுள்ள பெருமானின் திருக்கண்களோடு ஓரளவாகிலும் ஒப்பு சொல்லக் கூடியது தண்டோடு அழகாய்  நீரில் நிற்கும் மலர்ந்த தாமரையே ஆகும். சூரியனின் கிரணங்களே அவனது கைகள். ”செஞ்சுடர்த் தாமரை” எனும் ஆழ்வார் பாசுரத்தில் இவ்வுவமை கிடைக்கிறது. பெருமானின் கணங்களுக்கும் தாமரைக்குமுள்ள சம்பந்தம் கூறப் படாவிடினும், குலசேகரப் பெருமாள் சூரியனுக்கும் தாமரைக்குமுள்ள தொடர்பைத் தம் பெருமாள் திருமொழியில் “செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கல்லால் அலராவால்” என்று அருளிச் செய்கிறார்.

புண்டரீக தளாமலா யதேக்ஷணா – மூலத்தில் “புண்டரீகமேவமக்ஷிணீ “என்று  இவ்வளவே உள்ளதை எளிதாகத் தாமரைபோலும் கண்களை உடையவன் என்றோ புண்டரீகேக்ஷணன் என்றோ சொல்லி விடலாம். ஆனால் ஸ்வாமி தள, ஆமல, ஆயத எனும் மூன்று சொற்களை புண்டரீக மற்றும் ஈக்ஷண எனும் இரண்டு சொற்களின் நடுவில் சேர்த்துள்ளார். இது ஆழ்வார்களின்  பாசுரங்களின் தாக்கத்தாலேயே ஆகும்.

ஆழ்வார்கள் “தாமரைத் தடங்கண்ணன்”, “கமலத் தடம் பெருங்கண்ணன்” என்பன போன்ற சொற்களைப் பயன்படுத்துகின்றனர். தமிழில் “தட”வும் வடமொழியில் “தள”வும் ஒன்றே. வடமொழியின் “ள” தமிழில் “ட” ஆகிறது. ள, ட இரண்டுக்கும் வேறுபாடு இல்லை. இக்கொள்கையைத் தமிழ்ப்புலவோர் “எழுத்துப்போலி” என்பர். பூர்வாசார்யர்கள் தம் வியாக்யானங்களில் “தடம்” எனும் சொல்லை, “பெரிய”, ”குளம்”, ”இதழ்” என்று விளக்குகிறார்கள். இவ்விடத்தில் இதழ் எனும் பொருள் பொருந்துவதாகும்.

ஆழ்வாரின் “கமலக் கண்ணன்…அமலங்களாக விழிக்கும்” – எம்பெருமானின் கருணை நோக்கு எல்லாப் பாவங்களையும் நீக்கும். எம்பெருமானின் நோக்கின் தன்மை “அமல” என்பதால் தெரிய வருகிறது.ஆங்கிலக் கவி கீட்ஸ் ஓர் அழகிய பொருள் எப்போதும் இன்பம் பயப்பது, அதன் அழகு வளர்ந்துகொண்டே போல்றது என்றார். இதன் உண்மை ஐயப்படத்தக்கது. சில காலம் கழிந்து, ஒரு பொருள் எவ்வளவு அழகாய் இருப்பினும் மக்களுக்கு அலுப்பும் சலிப்பும் ஏற்பட்டுவிடுகிறது. வாழ்வின் இன்னல்கள் போராட்டங்களின் நடுவில் அழகு பற்றிய சிந்தை எழுவதே இல்லை. இதற்கு எம்பெருமானின் அழகு மட்டுமே விதி விளக்கு. அனுபவிக்க அனுபவிக்க இவ்வழக்கு ஒருவரின் மனதை வசீகரித்துக் கொண்டே இருக்கிறது. பக்தி வளர வளர அவன் அழகும் கூடுகிறது. அவனது அழகார்ந்த கண்கள் அடியானை அன்போடும் கருணையோடும் நோக்குகின்றன. இது ஒரு காணத்தக்க காட்சி மட்டுமன்று, இது ஒரு புனிதத் தூய்மையின் அடையலாம் மட்டுமன்று, சேதனர்களை உய்விக்கும் எம்பெருமானின் கருணை உள்ளத்தின் வெளிப்பாடாகும். அழகிய திருக்கண்கள் நம் பாபங்களை எல்லாம் போக்கி நம்மை மேல்கதிக்கு உயர்த்துவன ஆகும்.

ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு “ஆயத “ என்ற சொல் எங்கிருந்து வருகிறது எனக்காண்பது எளிது. திருப்பாணாழ்வாரின் “கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப் பெரியவாய கண்கள்” எனும் அவர் சொற்கள் நம் நினைவில் உடனே தோன்றும்.

ஸ்வாமியின் சொற்களுக்கு ஆகரமும் பொருளும் ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு வெளியே தேடினால் ஏமாந்து போவோம். ஸ்ரீ ராமாயணத்தில் உள்ள “ராமக் கமல பத்ராக்ஷ”, ”புண்டரீக விசாலாக்ஷ” என்பன போலும் சொற்களைத் தவிர வேறு இடங்கள் காணக் கிடையா. அருளிச்செயலை வைத்தே இவற்றை முழுக்க விளக்க முடியும்.

ஸம்ஸ்க்ருத மூலம் எவ்விதத்திலும் தத்துவ அல்லது பக்தி விளக்கத்துக்கு இடம் தாராத போதிலும் ஸ்வாமி அருளிச்செயலில் தமக்கிருந்த அசாத்ய சாமர்த்தியத்தினால் ஸம்ஸ்க்ருத வேதாந்தத்தை விளக்க இவற்றைக் கையாண்டார். அருளிச்செயல் அடிப்படியில் ஸ்வாமி தந்தருளிய இவிளக்கத்தினால் எம்பெருமானின் திருக்கண்களின் அழகும் அவற்றில் நமக்காக வழிந்து பெருகியோடும் கருணையும் நம்மால் அனுபவ பூர்வமாக உணரமுடிகிறது.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://granthams.koyil.org/2018/02/07/dramidopanishat-prabhava-sarvasvam-9-english/

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment