ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்
பேரின்பத்தின் வெவ்வேறு அநுபவங்கள்
பகவத்கீதை பத்தாம் அத்யாயம், ஒன்பதாம் ச்லோகம் சொல்கிறது:
“மத் சித்தா மத்கதப் ப்ராணா போதயந்தப் பரஸ்பரம் கதயந்தஸ்ச மாம் நித்யம் துஷ்யந்திச ரமந்திச “
இதன் எளிய தமிழாக்கம்: யாவர் என்னை எப்போதும் சிந்தையில் வைக்கிறார்களோ, என்னுடன் ஆத்மார்த்தமாகப் பிணைந்திருக்கிறார்களோ அவர்கள் பரஸ்பரம் உணர்த்திக்கொண்டு எப்போதும் என்னைப் பற்றிப் பேசியே ஆனந்தமும் திருப்தியும் அடைகிறார்கள்.
இந்த ச்லோகம் அடியார்கள் தங்களுக்குள் நிகழும் பரிமாற்றங்கள் மற்றும் பரஸ்பரம் தங்களுக்குள் நிகழும் நல்லுணர்வுகள், இவற்றால் விளையும் திருப்தி ஆனந்தங்களை விவரிக்கிறது. மாமுனிகள் தம் உபதேசரத்னமாலை இறுதியில் ஒவ்வொருவரும் தத்தம் நட்புக்கேற்ற குணாதிசயம் கொள்கிறார் என சாதித்தருளுகிறார்.
ஆகிலும், இப்படிப்பட்ட ச்லோகங்களிலும் சுவாமியின் வ்யாக்யான வைகரி ஓங்கி வெளிப்படுகிறது.
இந்த கீதா ச்லோகத்தின் இறுதிப் பகுதி, துஷ்யந்தி ச ரமந்தி ச , என்பது மிக ரசமானது. இச்சொற்களை, திருப்தி அடைதல், ஸந்தோஷப் படுதல் என விரித்துரைப்பது இவ்விரு சொற்களின் வேறுபாட்டைக் காட்டவல்லதன்று. ஒரு சொல்லால் குறிப்பிடமுடியாது இவ்விரு சொற்களால் கூறப்படுவது யாது?
ஸ்ரீ சங்கரர், “துஷ்யந்தி-பரிதோஷம் உபாயந்தி, ரமந்தி-ரதிம் ச ப்ராப்னுவந்தி ப்ரிய ஸங்கத்யா இவ” (துஷ்யந்தி என்பது ஸந்தோஷத்தை அடைவது, ரமந்தி என்பது விரும்பிய பொருளை அடைவது) ஸந்தோஷமோ விரும்பிய பொருளோ எப்படி அடைவது என்பது விளக்கப் படவில்லை.
ஸ்ரீ மத்வர் இச்லோகத்துக்கு விரிவான பொருள் சொல்லவில்லை.
இதற்கு ஸ்வாமியின் வ்யாக்யானமாவது “வக்தார: தத்வசநேந அநந்யப்ரயோஜநேந துஷ்யந்தி | ச்ரோதாரச்ச தச்ச்ரவணேந அநவதிகாதிசயப்ரியேண ரமந்தே |”. ஸ்வாமி இச்லோகத்துக்கு அருளிய விரிவுரை தன்னிகரற்றது, இவ்விரு சொற்களுக்கும் அவர் தந்தருளிய அர்த்தம் இந்த கீதா ச்லோகத்தையே விளக்குகிறது.
எம்பெருமானைப் பற்றிப் பேசுபவர் அப்பேச்சினாலேயே ஸந்தோஷம் அடைந்துவிடுகிறார். அவருக்கு வேறு லக்ஷ்யம் இல்லை. அப்பேச்சைக் கேட்டு ஆனந்தம் அடைபவருக்கு அதுவே ஆனந்தம், வேறு ஆனந்தம் இல்லை.
இவ்விளக்கம் மிகச் சீரியது. ஏனெனில் இது ச்லோகத்திலுள்ள இரு சொற்களையும் விளக்குகிறது. க்ருஷ்ணன் “போதயந்த: பரஸ்பரம்” என்றான். அவர்கள் பரஸ்பரம் என்னைப் பற்றியே எழுகிறார்கள். அவன் மேலும் , “மாம் நித்யம் கதயந்தி” என்கிறான். அவர்கள் என்னைப் பற்றியே பேசுகிறார்கள். இந்தப் பரஸ்பர பேச்சுப் பற்றிய விவரணத்தில், ஒருவர் பேசுகிறார், மற்றவர் கேட்கிறார். ஒருவர் வக்தா, மற்றவர் ச்ரோதா. இருவரும் தத்தம் நிலையை மாற்றிக் கொள்ளவும் செய்கிறார்கள். ஆகவே, இருவருமே பேசும் ஆனந்தமும் அடைகிறார்கள், கேட்கும் ஆனந்தமும் அடைகிறார்கள். வேதாந்த தேசிகர் தம் தாத்பர்ய சந்திரிகையில் “கதாயா ச்ரவணயோ ஏகச்மின்னேவ கால பேதேன ஸம்பாவிதவத்” – இருவரும் பேசுவதும் கேட்பதும் வெவ்வேறு காலங்களில் நடப்பன என்கிறார்.
கீதா ச்லோகங்களை அலசி ஆய்ந்து ஸ்வாமி இவ்வுரையை அருளினார் என்னலாம் எனினும் இவ்வுரைக்கு மூலப்ரமாணம் ஆக ஸ்வாமிக்கு எது வாய்த்தது?
திருமழிசைப்பிரானின் அநுபவமே ஸ்வாமிக்கு இவ்விளக்கத்தின் மூலப்ரமாணம் ஆயிற்று. ஆழ்வார், தம் நான்முகன் திருவந்தாதியில், “தெரித்தெழுதி வாசித்தும் கேட்டும் …..போக்கினேன் போது” என்று அருளினார். தெரிக்கை என்பது தெரிவிக்கை அல்லது பேசுதல் எனப்பொருள் [படும்/துஷ்யந்தி – கேட்டும் எனில் காதால் கேட்டும். ரமந்தி: – போக்கினேன் போது என்பது இதுவே அவர்தம் நித்ய வியாபாரமாய் இருந்தது எனக் காட்டுகிறது. மாம் நித்யம் கதயந்தா. அதே பாசுரத்தில் ஆழ்வார், “தரித்திருந்தேனாகவே” – இதைச் செய்தே நான் உயிர் தரித்தேன் என்கிறார். “மச்சித்தா மத்கதிப் ப்ராணா என்பதை ஸ்வாமி மயா விநா ஆத்மா தாரணம் அலாபமானா: – நானின்றி தரித்து உயிர் வாழ மாட்டாதவர்கள் என்றார். .
இவ்வாறாக, இந்த கீதா ச்லோகத்துக்குப் பொருள் உரைப்பதற்கு ஸ்வாமிக்குத் திருமழிசை ஆழ்வாரின் இப்பாசுரமே மூலப்ரமாணம் ஆயிற்று. இந்த கீதா ச்லோகத்தின் பொருளே, “திருமழிசைப் பிரான் போன்ற அடியார்கள் நானின்றித் தரித்திருக்க மாட்டார்கள் என்பதால் நான் எப்போதும் அவர்தம் சிந்தையிலே உள்ளேன். இத்தகு அடியார்கள் பரஸ்பரம் ஒருவர் மற்றவரை எப்போதும் என்னைப் பற்றியே பேசுவதும் கேட்பதும் செய்து சொல்பவரும் கேட்பவரும் மகிழ்ந்தும் மகிழ்ச்சி அடைவித்தும் வாழ்ச்சி பெறுகிறார்கள்”. என்பதாம்,
ஆழ்வார்களின் அருளிச் செயல்களை இடையறாது அனுபவித்ததாலேயே சுவாமியால் இப்படிப்பட்ட அத்புதமான ஈடற்ற விளக்கம் அருள முடிந்தது.
அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்
ஆதாரம்: https://granthams.koyil.org/2018/02/16/dramidopanishat-prabhava-sarvasvam-18-english/
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org