த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 19

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

 

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்

<< பகுதி 18

வழிபாட்டில் அருளிச்செயல்

அருளிச்செயல்களில் ஆழ்வார்களுக்கும் ஆசார்யர்களுக்கும் உள்ள ஈடுபாட்டைக் காட்ட எத்தனையோ சொல்லலாமாயினும். பண்டிதரோடு பாமரரோடு வாசியற ஸந்நிதிகளில் அவற்றை சேவித்தபடி எம்பெருமான் புறப்பாட்டுக்கு முன்கோஷ்டியாகப் போகும் சுவையை நன்கு அறிந்தேயிருப்பர்.

அருளிச்செயல் வல்லார் செவிக்கினிய அவற்றை ஓதியபடி வரும் பேரின்பக் காட்சி கண்கொள்ளாக் காட்சி.

ஆழ்வார்களின் பாசுரங்களே எம்பெருமான் செவிக்கு மிக்க இனியன என்றுணர்ந்திருந்த நம் ஆசார்யர்கள் இம்முறையை ஏற்படுத்தி, அது தளர்ந்தபோதெல்லாம் வலுப்படுத்தவும் செய்தார்கள். இம்முறையின் சீரிய இயல்பினால் அருளிச்செயல் கைங்கர்யம் ஸ்ரீவைஷ்ணவர்களால் மிக விரும்பி  மேற்கொள்ளப்படுகிறது.

கோயில் வழிபாட்டில் ஆழ்வார்களின், அவர்தம் அருளிச்செயல்களின் பொருத்தமும் ப்ராதாந்யமும் நம் ஆசார்யர்களால் தொடர்ந்து பேணப்பட்டு வந்தன.  அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் தம் ஆசார்ய ஹ்ருதய க்ரந்தத்தில் இக்கோட்பாடுகளை மிக நன்றாக நிறுவியுள்ளார். ஸ்ரீ வேதாந்த தேசிகர் தொடர்பான தகவல்களும் அவரும் இவ்வருளிச் செயல் கோஷ்டிகளை மிகவும் ஆதரித்துப் போந்தார் என்று காட்டும்.  நம் ஆசார்யர்கள் அருளிச்செயல்களுக்கு அளித்துள்ள விபுலமான விளக்கங்கள் மூலம் அவர்களுக்கு இவற்றில் இருந்த ஆழமான ஈடுபாட்டையும், அவர்கள் மீது இப்பாசுரங்களுக்கிருந்த ப்ரபாவமும் நன்கு தெரிந்துகொள்ளலாகும். ஸ்ரீவைஷ்ணவ-விசிஷ்டாத்வைதம் என்பது அருளிச்செயல்களே மூச்சும் பேச்சுமாக இருந்த ஆசார்யர்களின் திவ்ய கந்தமே எனில் மிகையாகாது.  

திவ்யப்ரபந்த வ்யாக்யானங்கள், குருபரம்பரா ஐதிஹ்யங்களிலிருந்து இராமானுசரைப் போல பெரும்பாலும் ஸம்ஸ்க்ருதத்திலேயே சம்ஸ்க்ருத வேதாந்த க்ரந்த ரசனைகள் செய்தவர்களுக்கும் இவற்றிலுள்ள ஈடுபாட்டை அறிகிறோம். இராமாநுசரின் சமகாலத்தவரும் அவரது மற்றும் கூரத்தாழ்வானின் சிஷ்யருமான திருவரங்கத்தமுதனார் இராமானுசரைத் துதித்து எழுதும்போது முந்துறமுன்னம் அவர்க்கு இப்பாசுரங்களிலும் ஆழ்வார்களிடமும் இருந்த அளவிலா ஈடுபாட்டையே போற்றத் தோன்றியது.

இப்பாசுரங்களைக் கற்று ஓதியே ஆகவேண்டுமென்பதில் கேள்வியேயில்லை. ஓதுவதோடு, இவற்றின் அர்த்தத்தையும் சிந்திப்பது அவர்தம் வாழ்வை வளப்படுத்தி ஸ்வரூபத்துக்கும்  நிறம் சேர்க்கிறது.

ஆகிலும் எதற்கும் இல்லை சொல்வாருமுளர் அன்றோ! சில வ்யக்திகள், குழுக்கள் அரை உண்மைகள், புனைசுருட்டுகளைப் பரப்பக் காண்கிறோம். ஒரு ஸம்ப்ரதாயக் கோட்பாடுகளை விளக்கும்போது, எப்போதுமே சிலர் இவற்றுக்கு வேதம் மூலப் பிரமாணம் இல்லை என வாதாடுவர். இவ்வாறு பேசுவோரே வேத சாஸ்த்ர நுணுக்கங்களை அறிந்திரார். ஆயினும் தம் பொய்க் கவர்ச்சிப் பேச்சினாலும் வாய்ச்சவடாலாலும் குறைவாகக் கற்றோரை மருட்டியும் மயக்கியும் நம்ப வைத்துக் குழப்புவர்.    

ஆகமங்கள் வேதங்களை ஆராயாமல் சிலர் கோயில் விக்ரஹங்களுக்கு ஆதாரமில்லை என்பர். சில வேத பாகங்களை ஓதும் ஆற்றல் தாம் பெற்றிருப்பதே தாம் எதைப் பற்றியும் பேசத் தமக்கு ஆற்றலும் அதிகாரமும் தந்ததாய்  நினைப்பர். நம் ஸம்ப்ரதாயத்து ஆசார்யர்கள் பாங்கு இத்தகைத்தன்று. ஆசார்யர்கள் ஏன் ஒன்றைச் சொன்னார்கள், செய்தார்கள் என்று ஆயாமல் எழுதுவது அழிவுக்கு அடிக்கோலாகும்.

இந்த பாதை மாறிய பேச்சுக்கு ஒரு காரணமுண்டு.

நம் ஆசார்யர்களின் ஹிமாலய விசுவாச விளக்கமானவை இருந்தும் அருளிச்செயல்களின் மகிமை பற்றி இல்லை சொல்வார் கோஷ்டியுமுண்டு. கோயில்களில் ஓதப்படுவதற்கு அத்தாக்ஷிகளிருந்தும், வரலாற்று ரீதியாக ஓதுவதைக் காட்டும் சான்றுகளிருந்தும் ஸ்வாமியின் க்ரந்தங்களில் அருளிச்செயல் ஓதவேணுமென்று நேர்படச் சொல்லவில்லை என்பது இவர்தம் வீண் வாதம்.

இது ஒரு குருட்டுக் குற்றச்சாட்டு. ஸ்வாமியின் ஒன்பது கிரந்தங்களில் ஒன்று கூட அவரால் நேர்படத்தம் சிஷ்யர்களுக்குச் சொல்லப்பட்டதன்று. (இவ்வாணைகள் யாவும் சிஷ்யர்களால் குறிக்கப்பட்டுள்ளன, இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகின்றன) நித்ய க்ரந்தம் ஒன்றில் மட்டுமே ஸ்வாமியின்  சில ஆக்ஞைகளை நாம் காணலாகும். இது அவரது சரம க்ரந்தமாகும். இதில் ஸ்வாமி வழிபாட்டு முறையை விளக்குகிறார்.

ஆக, ஸ்வாமி அருளிச்செயல்களில் அளவற்ற ஈடுபாடுள்ளவராகில் அவர் வழிபாட்டில் அருளிச்செயல்களுக்கு இடம் தந்திருக்க வேண்டாமோ?

ஆம் தந்துள்ளார்.

அருளிச்செயல் “செவிக்கினிய செஞ்சொல்” என அறியப்படுகிறது. நம்மாழ்வார் திருவாய்மொழி  10-6-11ல் “கேட்பார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே” என்கிறார்.

ஆழ்வாரின் திருவாய்மொழியின் ஈரச்சொல்லிலேயே சிந்தை நனைந்து கிடந்த ஸ்வாமி , “ஸ்ரீ ஸூக்தை: ஸ்தோத்ரை: அபிஸ்தூய” என்கிறார். அருளிச்செயல் என்பது ஒரு சொற்றொடர். அது ஸ்தோத்ரம் , ஏதோ  ஒரு ஸ்தோத்ரம அன்று அது ஸ்ரீ ஸூக்த ஸ்தோத்ரம் …செவிக்கு இனிய செஞ்சொல்.

ஸ்வாமி அருளிச்செயலை “ஆழ்வார் பாசுரங்கள்” எண்ணாமல், ஆழ்வாரே தந்த பேரைக் குறித்து செவிக்கினிய செஞ்சொல் என்று காட்டி, தமக்கு அவற்றிலுள்ள புலமையையும், ஈடுபாட்டையும் ஒருசேரக் காட்டுகிறார்.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம் – https://granthams.koyil.org/2018/02/17/dramidopanishat-prabhava-sarvasvam-19-english/

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment