ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்
ஸ்ரீ பாஷ்யத்தின் மூலம் ஆழ்வார் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறார்
பாஷ்யத்தின் மங்கலச்லோகம் ஸ்ரீநிவாசனுக்கான மங்களாசாசனம் மட்டுமன்று, அது நம்மாழ்வாருக்கான மங்களாசாசனமும் ஆகும்.
அதே மங்கலச்லோகம் நம்மாழ்வாரையும் எப்படிக் குறிக்கிறது என்பதைப் பார்ப்போம்.
அகில-புவன -ஜந்ம -ஸ்தேம -பங்காதி -லீலே
அகிலபுவன ஸ் தேம பங்காதியாய் இருப்பவன் எம்பெருமான். “தேன ஸஹ லீலா யஸ்ய” இந்த எம்பெருமானோடு அவனாகிய லீலையை விளையாடுபவர் ஆழ்வார். ஆகவே அகில புவன ஜந்ம ஸ்தேம பங்காதி லீலா எனும் அடைமொழி ஆழ்வாரைக் குறிக்கிறது.
எம்பெருமானுடனான விளையாட்டை ஆழ்வாரே பாடுகிறார் ”என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ” என்றும், “விளையாடப் போதுமின் என்னப் போந்தமை” என்றும்.
இந்தச் சொற்களின் தேர்வு இன்னொரு விளக்கத்துக்கும் ஹேதுவாகிறது – புவன ஜந்ம ஸ்தேம பங்காதி லீலா அகிலம் யஸ்ய. புவன ஜந்ம ஸ்தேம பங்காதி லீலையே இவ்வண்ட சிருஷ்டியின் ப்ரதான காரணம், அதாவது எம்பெருமான். இவன் யாருக்கு இப்படி எல்லாமாய் இருக்கிறான் எனில், ஆழ்வாருக்கே. ஏன் எனில் அவர் ஒருவரே “உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்” என்றார். நமக்கு உயிர் பிழைக்கச் சில, வளர்ச்சி பெறச்சில, இன்பம் அனுபவிக்கச் சில எனப் பொருள்கள் தேவை. ஆனால் ஆழ்வாருக்கு கிருஷ்ணனே இம்மூன்றுமாய் உள்ளான்.
விநத-விவித-பூத-வ்ராத-ரக்ஷைக-தீக்ஷே
இவ்வெல்லாவற்றையும் காப்பவன் எம்பெருமானே. ஆயினும் பக்தன் நோக்கில் எம்பெருமான் பூரணமாகத் தேவைப்படுவதில்லை. ஸ்தனன்ஜயப் ப்ரஜைக்கு அதன் பசி தீரப் பால் கிடைப்பதால் அதன் நோக்கு தாயின் ஸ்தனத்திற்போலே எம்பெருமானை வணங்கும் அடியானுக்கு அவன் திருவடியிலேயே கைங்கர்யம் பற்றி நோக்கு.
எம்பெருமானின் திருவடி நிலைகளே ஸந்நிதிகளில் சடாரி அல்லது ஸ்ரீ சடகோபம் என ஆழ்வார் பேராலேயே வழங்கப் பெறுகிறது. ஆகவே ஆழ்வாருக்கும் எம்பெருமான் திருவடிக்கும் வேறுபாடில்லை. ரக்ஷை வேண்டும் அடியாருக்குத் திருவடிகளாகிய ஆழ்வாரே கிடைக்கிறார்.
ச்ருதி சிரஸி விதீப்தே
ச்ருதி சிரஸ்ஸாவது வேதாந்தம். ச்ருதி சிரஸி விதீப்தே எனில் வேதாந்தத்தில் நன்கு உணர்ந்தவர், வேதாந்தம் எம்பெருமானை அறியவே என்று உணர்ந்தவர் ஆழ்வார். ஆகவே இச்சொற்றோடரும் அவர்க்கு இசையும்.
வேதமே ஆழ்வாரை, “தத் விப்ராஸோ விபந்யவோ ஜாக்ரவாக்ம்ஸஸ் ஸமிந்ததே” விப்ரா எனும் சொல் ஆழ்வாருக்கே பொருந்தும். “ந சூத்ரா பகவத்பக்தா விப்ரா பாகவதாஸ்ம்ருதா” என்றபடி அடியானாக உள்ள ஒருவர் மாய மயக்குகளில் சிக்கி உழலமாட்டார். “பண ஸ்துதௌ” என்பதால் விபன்யவோ என்பதற்கு எம்பெருமான் திருக்குணங்களைப் பாடுபவர் என்றதால் அவ்வகையிலும் ஈடு இணையற்ற பாசுரங்கள் பாடிய ஆழ்வாரையே குறிக்கும். “தேவிற் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன்”. “ ஜாக்ர வாக்ம் ஸ” என்பது எப்போதும் விழிப்புணர்ச்சியோடிருப்பது. எம்பெருமானையன்றி வேறொன்றும் பாராது, அவனையன்றி மற்றொன்று உணராது நினையாது அவனையே அனுபவித்திருக்குமவரான ஆழ்வாரே இச்சொற்றொடருக்கு இலக்கும் இலக்கியமும். தானே ஸத்தையாயும் எப்பொருளாயும் இருந்து ஒளிரும் எம்பெருமான் விஷயமாகவன்றோ ஆழ்வார் “கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே” என்று பாடினார்? இவ்வேத வாக்யத்துள்ள “வி” என்பதை ஸ்ரீபாஷ்யச்லோக இறுதிச்சொல்லான ஸமிந்ததேவிலுள்ள “ஸம்” காட்டுகிறது.
ப்ரஹ்மணி
எல்லாவிதத்திலும் பெரியது எனக்காட்டும் “ப்ரு” எனும் சொல்லின் அடியாக வந்த சொல் ப்ரஹ்மம்.பரப்ரஹ்மமே அவரிடம் கட்டுண்டுள்ளதென்பதே ஆழ்வாரின் பெருமை. பெரிய திருவந்தாதியில் ஆழ்வார் இதனை, “யான் பெரியன், நீ பெரியை என்பதனை யார் அறிவார்” என்று காட்டுகிறார். ஆகவே ப்ரஹ்மம் என்பதன் சரியான பரியாயம் பெரியன்.
ஸ்ரீநிவாஸே
இதெல்லாம் சரி….ஆனால், ஸ்ரீநிவாசே என்பதை ஆழ்வார் பரமாக நிர்வஹிக்க முடியாது, ஏனெனில் ஆழ்வார்க்கு ச்ரிய:பதித்வம் இல்லையே எனலாம்.
ச்ரிய:பதித்வம் எம்பெருமானின் ஏகதேசமான உரிமைதான், எனினும் ஆழ்வார் ஸ்ரீ நிவாசனே…. மேலும் சம்பிரதாயத்தில் ஸ்ரீநிவாசர்கள் பலர் உளர்.
லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பன்ன – லக்ஷ்மணன் லக்ஷ்மியை உடையவன்,
ஸ து நாக வர ஸ்ரீமான் – கஜேந்த்ரனும்ஸ்ரீமான்,
அந்தரிக்ஷ கத ஸ்ரீமான் – விபீஷணன் நடு வானில் நின்றவன் ஸ்ரீமான் ஆனான். இவ்வொவ்வோரிடத்திலும் ஸ்ரீ அல்லது லக்ஷ்மி என்பது வெவ்வேறு பொருள் தருவதாகும். லக்ஷ்மணனுக்கு ஸ்ரீ கைங்கர்யம், கஜேந்திரனுக்கு ஸ்ரீ அவன் கைம்மலரை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க விரும்பிய மனத்தூய்மை, விபீஷணனுக்கு ஸ்ரீ அவன் மனதில் துயரம் இருப்பினும் எல்லா செல்வமும் விட்டுப் பெருமாளை சரண் புக்கது.
ஆழ்வார் விஷயமாகவோ எனில் வ்யாக்யாதாக்கள் அவரிடம் ஸ்ரீ இருப்பது போக அவரே ஸ்ரீ, பிராட்டி என்றார்கள். ஆழ்வார் முன் சொன்ன பிரபன்னாதிகாரிகளின் ஒவ்வொரு குணமும் நிரம்பப் பெற்றதால் ஸ்ரீநிவாசர், தாமே பிராட்டி போலானதாலும் ஸ்ரீநிவாசர் என்று எண்ணத்தகும்.
இவ்வாறாக, எம்பெருமானார் எம்பெருமானை அனுபவிக்கு முகமாக இச்லோகத்தால் ஆழ்வாரை அனுபவித்தார் என்பது தெளிவு. ஆழ்வார் ப்ரபாவம் ஸ்ரீ பாஷ்யம் முதலில் தொடங்கி, இறுதி வரை, ஆம் கடைசி ஸூத்ர பாஷ்யம் வரை செல்கிறது.
ஸ்ரீ பாஷ்யம் விவரிக்கும் கடைசி ஸூத்ரம் “அநாவ்ருத்தி அநாவ்ருத்திஸ் சப்தாத்” என்பது. இதில் அநாவ்ருத்தி சொல்லின் பொருளாவது, விடுபட்ட ஜீவாத்மா மீண்டும் இம்மாயாவுலகுக்கு வருவதில்லை என்பது.
திரும்ப வராததற்குக் காரணம், சப்தாத், அதாவது இவ்வாறு வேதம் சொல்வதால். வேதம், “ந ச புநராவர்த்ததே ந ச புநராவர்த்ததே” என்கிறது:விடுபட்ட ஜீவாத்மா மீண்டும் இவ்வுலகுக்கு வருவதில்லை.
இது வறண்ட வேதாந்தக் கோட்பாடுள்ளவருக்கு ஒப்புதலாகலாம். ஆனால் தேர்ந்த ஞானமுள்ள வேதாந்தியும் உணர்வுபூர்வமான ஸாம்ப்ரதாயிகருமான ஸ்வாமிக்கு அன்று. மற்ற வ்யாக்யாதாக்கள் போலன்றி அவர் ஒரு முக்கியக் கேள்வியை இந்த ஸூத்ரத்தில் கண்டார்: ப்ரஹ்மம், ஜீவன் பற்றி என்ன வேறுபாடுகளிருப்பினும், வேதாந்தத்தில் வேண்டிய ஒரு முக்கியக் கேள்வி மோக்ஷம்/விடுதலை என் அவ்வளவு கவர்ச்சிகரமாய் உள்ளது? அத்வைதிக்கு, ஏற்கெனவே அவித்யையால் பாதிக்கப்பட்டுள்ள ப்ரஹ்மம் இதனால் பாதிக்கப்படாமல் உள்ளது என்பதை விளக்குவதே பெரிய காரியம். ப்ரஹ்மம் ஏற்கெனவே அவித்யைக்கு உள்ளாகாவிடில் அதற்குப் “பல” எனும் எண்ணமே தோன்றாது. ப்ரஹ்மம் ஒழிந்த வேறொன்றும் இல்லையாதலால் அவித்யைக்கு மாறான அதற்கு அதினின்றும் தப்புதலில்லை. திரும்புவதில்லை என்பது ஒட்டுமொத்தமாக இன்றி ஒப்புநோக்கில் மட்டுமெனில் ப்ரஹ்ம ஸூத்ரம் வேதாந்தம் யாவும் வீணாகும். ஆகவே ப்ரஹ்ம ஸூத்ரம் ஜீவன் திரும்ப வருமோ எனும் ஐயத்தை எழுப்பி, வேதம் சொல்கிறபடியால் வாராது என்று பறை சாற்றுகிறது. இந்த ஸூத்ரகாரர் அத்வைதத்தில் ஒரு துளியும் இல்லை என்பது இந்த ஐயத்தை இல்லை செய்ததிலிருந்தே அறியலாம். முற்றிலும் ஸ்வதந்த்ரமான ப்ரஹ்மத்தை நம்பும் த்வைதிக்கும் அந்த ப்ரஹ்மத்தை ஒரு ச்ருதி வாக்யத்தால் கட்டுப்படுத்துவது, (ஜீவனை மீண்டும் இவ்வுலகுக்கு அனுப்புவதிலிருந்து) இக்கேள்வி முக்கியமானதே.
ஆனால் ஒரு விசிஷ்டாத்வைதிக்கு இக்கேள்வி தள்ளுபடியன்று, விடையளிப்பதும் கடினமன்று. ஏனெனில் ஜீவன் ப்ரஹ்மத்தின் ப்ரகாரமே ஆதலால். அவன் ப்ரஹ்மத்தின் ப்ரகாரமே ஆதலால் விடுபட்டபின் மீண்டும் இவ்வுலகுக்கே வருவதெனில், அவித்யையில் இவ்வுலகு தெரிவதே ஆகும்.
ஆகிலும், விசிஷ்டாத்வதத்தில் ப்ரஹ்மம் மட்டுமே ஸ்வதந்த்ரமானது, ஜீவனைக் கட்டுப் படுத்தவும் வல்லது. எம்பெருமான் ஏன் மீண்டும் ஆத்மாவைத் திரும்ப அனுப்பக் கூடாது? இக்கேள்விக்கு விடை காண்கையில் ஸ்வாமி வேதத்தையும் தாண்டிச் சென்று, ஆய்வு செய்கிறார். ஏன் ச்ருதி இப்படிச் சொலிறது, என்பதை அவர்க்கே உரிய பாணியில் தர்க்க, புராண, லௌகிக நெறிகளில் ஆய்ந்து ஒருங்கிணைக்கிறார்.
பிரம்மத்துக்கும் ஜீவனுக்குமுள்ள பந்தம் அம்ச/அம்சி பாவத்தைத்தாண்டி உண்மை அனுபவ ரீதியாகக் காதலன்/காதலி எனும் நிலையும் உண்டு. ப்ரஹ்மத்துக்கும் ஜீவனுக்குமுள்ள சம்பந்தம் வெறும் அறிவாராய்ச்சி விளக்கங்களில் மட்டுமில்லை, இரு நபர்களுக்கிடையிலான அனுபவ உறவுணர்வில் உள்ளது. இது பரம சேதனன் சேதனனைக் காதலோடு ஆரத்தழுவும் நிலை. ஜீவனின் நிலையைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் வெறும் ஆதாரமாய் இருக்கும் நிலையன்றி, பரம சேதனன் சேதனனை அடையப் பல வடிவுகளும் முயற்சிகளும் ஏற்கிறான். அவன் ஆரா அன்புள்ள காதலன், ஒருபோதும் கைவிடாத காதல் கொண்டவன். “ஸ ச மம ப்ரிய:” என்று சொல்பவன். ஜீவன் என் அன்புக்குரியவன் எனும் இதைப் பொருளில்லாமல் சொல்வானா?
இதற்கு ஸ்வாமி நம்மாழ்வாரின் பாசுரங்களில் விடை கண்டார். காதல் விளையாட்டு நம்மாழ்வார் அனுபவங்களிற்போல் வேறு எங்குண்டு?
ஆழ்வார் அநுபவத்தை முன்னாகக் கொண்டு ஸ்வாமி, “ந ச பரமபுருஷ ஸத்ய ஸங்கல்ப அத்யர்த்தப்ரியம் ஞாநிநாம் லப்த்வா கதாசித் ஆவர்தயிஷ்யதி”.
நழுவாத ஸங்கல்பங்கொண்ட பரமபுருஷன் தனக்கு மிகப்ரியமான மயர்வறப்பெற்ற சேதனனை மிக்க பரிச்ரமத்துடன் அடைந்தபின் விடுவானா? கிருஷ்ணனை வெண்ணெய் திரும்பத் தா எனில் தருவானோ?
சேதனனை அடைந்து அநுபவிப்பதில் எம்பெருமானுக்குள்ள ஆசையை ஆழ்வார், “என்னை முன்னம் பாரித்துத் தானென்னை முற்றப் பருகினான்” என்கிறார், அவன் என்னை முழுதுமாக அநுபவித்தான். இந்தக் காதலை வார்த்தைகளால் விளக்கமுடியாது, உணரவே முடியும். இவ்வாறான திருத்தவொண்ணாத காதல் நோயாளன் பெற்ற சேதனனைத் திரும்பவிடுவனோ!
ஸ்வாமி ஸ்ரீ பாஷ்யத்தை ஒரு பேருரையாய் நிகமிக்கிறார் – ”வாசுதேவஸ் ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸு துர்லப:” எனும் கண்ணன் எம்பெருமானின் தன்னை விட்டு விலகும் சேதனனைப் பற்றிய நிர்வேத ப்ரகடணத்தை உதாஹரிக்கிறார். எம்பெருமான் உத்தராயணத்தில் கிளம்பிச் சென்றபின் ஆழ்வார் தக்ஷிணாயனத்தில் “உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்” எனக் கண்ணனே எனக்கு எல்லாமும் எனச் சொல்லிப் போந்தார். கண்ணனின் திருப்பவளம் உதிர்த்த சொற்களே ஆழ்வார் பாசுரமாக வந்தன.
ஸ்ரீ பாஷ்ய அனுபவம்/ரஸனைக்கு ஆழ்வார் பற்றிய ஞாநமும் அவர் பாசுர அனுபவமும் எவ்வளவு இன்றியமையாதது!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்
ஆதாரம்: https://granthams.koyil.org/2018/02/20/dramidopanishat-prabhava-sarvasvam-22-english/
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org