த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 23

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்

<< பகுதி 22

 

ஸ்ரீ ராமாநுஜரின் க்ரந்தங்களை ஆழ்ந்து கற்றல்

ஸ்ரீ ராமாநுஜரின் க்ரந்தங்களைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவற்றை ஆழ்ந்து வாசிக்க வேண்டும். அவரது சொற்களின் உட்பொருளை மேலோட்டமான வாசிப்பில் தெரிந்துகொள்ள முடியாது.  ஆளவந்தார், ஆழ்வான், பட்டர், வேதாந்த தேசிகர் போன்றோரோடு ஒப்புநோக்கும்போது இது தெளியலாகும். வேறுபாடு நடை (சைலி), உட்கருத்து இரண்டிலுமுண்டு.

இராமானுசரின் க்ரந்தங்களைச் சேவிக்கும் ஒருவர் சொற்களின் உள்ளாழத்தை முற்றும் விடுத்து அவற்றின் மேல் அழகோடு நிறுத்திக்கொள்ளலாம். அப்போது ஸ்வாமியின் முழுக்கருத்தும் காட்சியும் கிடைக்காது.  ஸ்வாமியின் முழுமையான திருவுள்ளக் கருத்து புலப்பட வேண்டுமெனில் ஆழ்வாரின் சொற்கள் எவ்வாறு பயின்று வருகின்றன எனக் காண வேண்டும்.

ஆழ்வாரின் சொற்கள் எவ்வாறு பயின்று வருகின்றன எனப் பாராமல் ஸ்வாமியின் திருவுளக் கருத்துகள் எவ்வாறு அவற்றையே எதிரொலிக்கின்றன எனப் பார்ப்போம். அப்படிப் பார்த்தால் ஸ்வாமி  ஆழ்வார்கள் திறத்தில் மட்டுமின்றி எவ்வாறு மற்ற விஷயங்களிலும் நம் புரிதலுக்கு விஸ்தாரமான தளம் அமைத்துள்ளார் எனத் தெரியும்.

கீதா பாஷ்யத்தின் தொடக்கத்தில் உள்ள ஸ்வாமியின் ஆளவந்தார் பற்றிய தனியன்”

யத் பதாம்போருஹ-த்யான வித்வஸ்தாசேஷ-கல்மஷ
வஸ்துதாம்-உபயாதோ-ஹம் யாமுநேயம் நமாமி தம்.

என்பதே அந்த ச்லோகம்.

ஸ்வாமி பஞ்சாசார்ய பதாச்ரிதர் ஐந்து ஆசார்யர்களின் அடி பணிந்தவர் என்பது தெரிந்ததே.  இதற்குக் காரணம், ஸ்வாமிக்கு ஆளவந்தாரிடம் நேரடியாகக் கற்கும் வாய்ப்பு இல்லாமற் போனதேயாம்.  ஆகவே அவர் யாமுனாசார்யர் திருவுளப்படி அவரது ஐந்து சிஷ்யர்களிடம் ஸ்ரீவைஷ்ணவக் கோட்பாடுகளைக் கற்கவேண்டியதாயிற்று. ஸ்ரீ க்ருஷ்ணன் சாந்தீபநியிடம் கற்றாப்போலேயே ஆகிலும், ஆளவந்தார் ஸ்வாமி திருவரங்கம் சேருமுன்பே தம் திருமேனி விட்டுத்திருநாடலங்கரித்து விட்டபடியால் கல்வி ஐவரிடம் அமைந்தது. 

ஆகவே ஸ்வாமி கீதா பாஷ்யத் தொடக்கத்தில் தாம் கற்ற தம் மற்ற ஆசார்யர்களை விடுத்து ஆளவந்தாரை மட்டும் துதித்து மற்றையோரைத் துதிக்கவில்லையே, குருபரம்பரை முழுவதுக்குமாகவன்றி ஆளவந்தாரை மட்டும் வணங்கி விட்டுவிட்டாரே எனத் தோன்றும். ஆழ்வான், பட்டர், தேசிகர் க்ரந்தங்களில் குருபரம்பரை பற்றிய குறிப்புகளும் முற்பட்ட ஆசார்யர்கள் அனைவர் பற்றியும் விரிவான பிரஸ்தாவங்களுண்டு.

ஸ்வாமியின் இத்தனியனில் குருபரம்பரை பற்றியோ மற்ற ஆசார்யர்கள் பற்றியோ வெளிப்படைக் குறிப்பில்லையேனும், அவர்களெல்லாரையும் பற்றியும் இத்தனியன் பேசுகிறது என்பதே இதற்கு விடையாம்.

  • “யத்பதாம்போருஹ ” எனும் சொல் ய், அ, த், ப், அ, த், அ, ம், ப், ஒ, ர், உ, ஹ், அ  எனப் பதிநான்கு பகுதிகளாலானது. அதாவது ஏழு ஜோடித் திருவடிகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம். இந்த ஏழு இணைத் திருவடிகள் ஸ்வாமியின் ஐந்து ஆசார்யர்கள், ஆழ்வார், ஆளவந்தாரையே குறிப்பனவாகக் கொள்ள வேணும்.
  • இதை வேறு விதமும் காணலாம். இந்த “யத்பதாம்போருஹ ” சப்தத்தை ஷஷ்டி தத்புருஷ ஸமாஸமாக எடுத்து, யஸ்ய பதாம்போருஹே எனக் கொண்டு, யாவருடைய தாமரைத் திருவடிகளில் என விளக்கம் பெற்று, மேலும் அதை இப்படி மூவகைகளில் நிர்வஹிக்கலாம்:
    1. ஆளவந்தாரின் திருவடித் தாமரைகள் அவரது திருமேனியிலே                              வணங்கப்படுகின்றன.
    2. ஆளவந்தாரின் திருவடிகள் – அவரால் தொழப்பட்ட                           எம்பெருமான், ஆழ்வார், நாதமுனிகளின் திருவடிகள்,
    3. ஆளவந்தாரின் திருவடிகள் – அவர்தம் சிஷ்யர்கள், சிஷ்யர்களைத் திருவடிகளாகக் கூறுதல் மரபாதலால். ஆகவே அவர்தம் ஐந்து சிஷ்யர்களைக் குறிக்கும்.
  • ஸ்வாமியின் இத்தனியன் “பதாம்போருஹ” என “ப” சப்தத்தோடு தொடங்குகிறது. பெரியநம்பிகள்தாம் ஸ்வாமிக்குப் பஞ்ச சம்ஸ்காரங்கள் செய்து மந்த்ரோபதேசமும் அர்த்த உபதேசமும் செய்து வைத்தார்.ஆகவே அவர்க்கு ஸ்வாமியின் ஆசார்ய பரம்பரையில் விசேஷ இடமுண்டு. அவர் திருநாமம் பராங்குச தாசர் என்பது “ப”வில் தொடங்குவது. பராங்குசர் என்பது முதலிலேயே நம்மாழ்வார் திருநாமம்.

இவ்வாறாக, இராமாநுசர்  தம் ஆசார்யன் தனியனில் குருபரம்பரை முழுமையையும் துதித்தாராயிற்று. ஆழ்வானின் சிஷ்யரும் சுவாமியின் சமகாலத்தவருமான அமுதனார் தம் க்ரந்தத்தில் இராமானுசருக்கு அவர் முன்னோருடனான தொடர்பையே விசேஷித்துப் பாடினார்.

இதுவே ஒரு பேரறிவாளனுக்கான அடையாளம். ஒரு சாதாரண வித்வான் சொல்லுக்கு, தானே உள்ள பொருளோடு நிற்பார். சுவாமியின் ஈடு இணையற்ற மேதாவிலாசம் நமக்கு அவரது ஒரு சொல்லில் பல பொருள்களைக் காட்டுகிறது.   எம்பெருமானாரின் க்ரந்தங்கள், சொற்கள் பழையதாகி வருகின்றன, ஆனால் பொருளோ தினமும் இளமையாய் உள்ளது.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://granthams.koyil.org/2018/02/21/dramidopanishat-prabhava-sarvasvam-23-english/

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment