ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
வேதங்களின் உட்பொருள் உணர்தல்
அத்வைத விமர்சம்
பத்தி 51
எதிர்ப்பவர் பேசுகிறார்:
நீரும் பிரஞ்ஞை உள்ளதும் ஸ்வயம் ப்ரகாசமுமான ஓர் ஆத்மாவை ஏற்றுக்கொண்டாக வேண்டுமே. இந்த ஒளி ஆத்மா தன்னைத் தன் சரீரங்களோடும் தெய்வங்கள் போன்ற பிறவற்றோடும் இணைத்துக்கொள்ளத் தேவை. இவ்வொளி ப்ரகாசித்தால் தோற்றங்களைப் புரிந்துகொள்வதில் பிழை ஏற்படாது. ஆகவே எடுத்துக்காட்டப்பட்ட குறை உமக்கும் ஏற்கும். எங்களைப் பொறுத்தவரை ஒரே ஆத்மா, பரமாத்மா ஒருவனே உளன் அவன் விஷயத்தில் இக்குறை விளக்கப் பட வேண்டும். ஆனால் உமக்கோ எனில் நீர் ஒப்புக்கொண்டுள்ள கணக்கற்ற ஆத்மாக்கள் விஷயத்தில் இக்குறை விளக்கப்படவேண்டும்!
பத்தி 52
நம் கருத்து தொடர்கிறது:
பரப்ரஹ்மன், ஸ்வாபாவிகமாகவே எல்லா அப்பழுக்குகளுக்கும் அப்பாற்பட்டவர், எல்லையில் ஞானமும் இன்பமும் உடையவர். கல்யாண குணங்களும் சக்திகளும் நிரம்பிய அளப்பரிய கடல். வினாடி, நிமிஷம், மணி, நாழிகை போன்ற கணக்குகளால் பகுக்கப்பட்டுள்ள எல்லையிலாக் காலங்களாக ஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரளயங்களை, தான் அக்காலத்தால் பாதிக்கப்படாமல் செய்து வருபவர். இதுவே இவரது தனிச் சிறப்பாகும். எண்ணற்ற தனி உயிர்வாழிகள் அவர் சரீரமாய் உபகாரணங்களாய் உள்ளன. அவரது லீலையில் பாங்காய் உள்ளன. இவை மூவகைப்படும்: (நித்யர்) எப்போதுமே ஸம்ஸார ஸம்பந்தமற்று இருப்போர், (முக்தர்) ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டோர், மற்றும் (பத்தர்) ஸம்ஸாரத்தில் கட்டுப்பட்டுள்ளவர்கள். இவர்கள் தவிர இந்த உயிர்வாழிகளால் அநுபவிக்கப்படுகிற எண்ணற்ற வியத்தகு பொருள்கள் ஆற்றல்களும் அவரின் உபகரண அம்சங்களே. உள்ளிருந்து நியமிக்கும் அந்தர்யாமியாய் ப்ரஹ்மன் ஆத்மாக்களையும் பொருள்களையும் தம் சரீரமாகவும் ப்ரகாரமாகவும் தம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இந்த ப்ரஹ்மனே அறிந்துகொள்ளப் பட வேண்டியவர்.
ருக், யஜுஸ், ஸாம, அதர்வ வேதங்கள் அநாதி காலமானவை, ஆயிரக்கணக்கான கிளைகள் உள்ளவை. மேம்பொருளை உரைக்க அவை அவிச்சின்னமான இடையறாத ஆற்றொழுக்காக ஞான பரம்பரை மூலம் வருகின்றன. வேதங்களின் விதி, ஸ்துதி, ப்ரார்த்தனை பாகங்கள் பகவத் த்வைபாயனர், பராசரர், வால்மீகி, மநு, யாஜ்யவல்க்யர், கவுதமர், ஆபஸ்தம்பர் போன்றோரின் இதிஹாசங்கள், புராணங்கள், தர்ம சாஸ்த்ரங்களில் விளக்கப் படுகின்றன.
இது நம் நிலை ஆகும்போது நமக்கு என்ன கஷ்டம்?
பத்தி 53
மஹா பாரதத்தில் பகவான் த்வைபாயனர்
எவன் என்னைப் பிறப்பிலி என்றும் ஒரு காரணம் அற்றவன் என்றும் உலகங்கள் எல்லாவற்றுக்கும் நாயகன் என்றும் அறிகிறானோ…..கீதை
இவ்வுலகில் அழிவது அழிவில்லாதன என இரண்டுள, எல்லா உயிர்வாழிகளும் அழியும் உடல் அழியா ஆத்மா இரண்டும் பெற்றுள்ள, அழியும் அழியா இவ்விரண்டினும் மேம்பட்டவன் பரமாத்மா, இந்த அழிவற்ற பரமாத்மா மூவுலகுகளையும் நிறைத்து, தாங்குகிறார்…..கீதை .
பரமாத்மாவின் லோகத்தில் காலமும் யஜமானன்று, கட்டுப்பட்டது. ஆனால் இவ்வுலகிலோ யாவுமே நரகம்தான்…மோக்ஷ பர்வம், மஹாபாரதம்
உருவிலா இயற்பியல் பொருள்கள் முதல் யாவுமே மாற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் உட்பட்டவை, இவை யாவும் ஹரியின் லீலையில் அடங்குவன….மோக்ஷ பர்வம், மஹாபாரதம்
க்ருஷ்ணன் ஒருவரே இவ்வுலகின் ஆதியும் அந்தமும். அசையும், அசையாப் பொருள்கள் யாவும் இருப்பது க்ருஷ்ணன் பொருட்டே…….ஸபா பர்வம்
க்ருஷ்ணனுக்காகவே இருப்பதாவது கிருஷ்ணனின் உபகரணமாய் இருப்பதே.
பத்தி 54
பகவான் பராசரரும் இதே போல் பேசியுள்ளார்:
மைத்ரேய! ‘பகவத்’ எனும் சொல் எல்லா வகையிலும் சுத்தமான பெரிய எல்லாக் காரணங்களுக்கும் மூல காரணமான பரப்ரஹ்மத்துக்கு மட்டுமே உரித்தாகும்.
ஞானம், பலம், ஐச்வர்ய. வீர்யம், சக்தி, தேஜஸ் , குறைகளின்மை ஆகியவற்றின் பரிபூர்ணத்வம் இந்த பகவான் என்ற சொல்லால் பெறப்படும். மைத்ரேய! இச்சொல் எல்லாப் பூர்த்தியும் நிறைந்த பரப்ரஹ்மன் ஒருவனுக்கே உரித்தாகும்.
மைத்ரேய! இச்சொல் இப்பூர்த்திகள் அனைத்தும் உடைய வாஸுதேவன் ஒருவனையே சாரும்.
நம் மரபில் இச்சொல் மரியாதைக்குரிய ஒருவனுக்கு உபசாரமாகவே பயன்படுத்தப்பெறுகிறது. வாஸுதேவனுக்கு இது ஆதாரமான சொலும், மரியாதையால் பயன்படுத்தப்படுகிறது.
இதுவே ஒரு குறையுமற்ற, அப்பழுக்கற்ற, நித்யமான அழிவற்ற எங்கும் நிறைந்த மேம்பொருளான விஷ்ணுவின் நிலை.
பலவாகப் பகுப்புண்டுள்ள காலத்தால் அவர் மேன்மைக்கு ஒரு மாற்றமும் வாராது. ஒரு குழந்தைபோல் விளையாடும் அவர் லீலைகளை பார்!
………இவை யாவும் ஸ்ரீ விஷ்ணு புராண ச்லோகங்கள்.
பத்தி 55
இவ்வாறே மநுவும் சொல்கிறார் : அனைத்தையும் நடத்துபவர் அணுவிலும் சிறியதாய் உள்ளார்.
யாஜ்யவல்க்யர், எம்பெருமானைப் பற்றி அறிந்தே ஆத்மா மேலான தூய்மை அடைகிறது என்கிறார்.
ஆபஸ்தம்பர், எல்லா ஆத்மாக்களும் ஈச்வரன் உறையும் குஹை என்கிறார்.
குஹை = இடம், சரீரம். ஆத்மாக்களுக்கு உறைவிடமாயுள்ள சரீரங்கள் யாவும் இறைவனின் வசிக்குமிடம்.
பத்தி 56
ப்ரதிபக்ஷி வினவுகிறார்: இந்தச் சொல் ஆரவாரங்களின் நோக்கம் என்ன?
பதில்: நாம் கீழ்ச் சொன்னபடி புரிந்து கொள்கிறோம். ஆகவே ஆத்மாவின் தர்ம பூத ஞானமே கர்மத்தின் அடிப்படையில் விகாசமோ ஸங்கோசமோ அடைகிறது. ஆகவே உங்கள் எதிர்ப்புக்குப் பொருள் இல்லை.
உங்களுக்கோ எனில் அடிப்படை ஞானம்/பிரஞ்ஞையே பாதிக்கப்படுகிறது, ஏனெனில் நீங்கள் அதற்குள்ள இயல்புகள்/பண்புகளை ஏற்பதில்லை. ஆகவே அதற்கான விரிவோ சுருக்கமோ உங்களுக்கு இசைவில்லை.
எங்களுக்கோ கர்மம் குண இயல்புகளை ஞான ஒளியிலிருந்து தடுப்பதில் ஏற்புண்டு. நீங்களோ அவித்யா/அஞ்ஞானம் மறைக்கும் கருவி என்பதால் அது இயல்புகளை மறைக்காமல் ஞான ஒளியையே மறைந்துவிடுகிறது என்கிறீர்கள்.
ஆகவே, எங்கள் நோக்கில் நித்ய ஞானத்தின் குண இயல்புகளே கர்ம வசத்தினால் அஞ்ஞானம் விளைப்பதால் தேவன், மனிதன், விலங்கு, முதலியவற்றை பேதமாய் உணர்கிறது. இதுவே வேறுபாடு.
பத்தி 57
“இன்னொரு மூன்றாவது சக்தி உள்ளது, அது அஞ்ஞானம், கர்மம். அதுவே ஆத்மாவின் ஞானத்தை மறைக்கிறது . ஆகவே ஆத்மாக்கள் ஸம்சார துக்கங்களில் உழல்கிறது “ என்று சொல்லப்படுகிறது.
கர்ம வடிவெடுக்கும் அஞ்ஞானம் ஆத்மாவின் குணம் சார்ந்த ஸங்கோச விகாசங்களுக்குக் காரணம் என்பது இதனால் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
ஆதாரம்: https://granthams.koyil.org/2018/03/13/vedartha-sangraham-14-english/
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org