ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
அர்த்த பஞ்சக தத்த்வஜ்ஞா: பஞ்ச ஸம்ஸ்கார ஸம்ஸ்க்ருதா: | ஆகார த்ரய ஸம்பந்நா: மஹாபாகவதாஸ்ஸ்ம்ருதா: || மஹாபாகவதா யத்ராவஸந்தி விமலாஶ்ஶுபா: தத்தேஶம் மங்களம் ப்ரோக்தம் தத்தீர்த்தம் தத்து பாவநம் || யதா விஷ்ணுபதம் ஶுபம்” என்னுமிவ்வர்த்தத்தை பராஶர ப்ரஹ்மர்ஷியும் அநுக்ரஹித்தார். “பாட்டுக் கேட்குமிடமும், கூப்பீடு கேட்குமிடமும், குதித்தவிடமும், வளைத்தவிடமும், ஊட்டுமிடமும் எல்லாம் வகுத்த விடமே என்றிருக்கக் கடவன்” என்று ஶ்ரீவசநபூஷணத்திலே பிள்ளை லோகாசார்யரும் இவ்வர்த்தத்தை ஸுவ்யக்தமாக அருளிச்செய்தார். ஆகையால் இவர்கள் தங்களுடைய ஆசார்யனை உபயவிபூதிநாதனென்றும், உபயவிபூத்யைஶ்வர்யமும் இவனே என்று ப்ரதிபத்தி பண்ணி இருக்கவேணும், “இராமானுசன் என்தன் மாநிதியே”, “ இராமானுசன் என்தன் சேமவைப்பே” , “எனக்குற்ற செல்வமிராமாநுசன்” என்றிறே தந்நிஷ்டர் இருக்கும்படி. “ஸாக்ஷாந்நாராயணோ தேவ: க்ருத்வா மத்யமயீம் தநும்” என்று இத்யாதிகளிலே சொல்லுகிறபடியே தங்களை ஸம்ஸாரத்தில் நின்றும் எடுக்கைக்காக ஸர்வேஶ்வரன் மநுஷ்யரூபம் கொண்டு வந்திருக்கிறானென்று அறியாதே அவன் அமுது செய்தருளுகை, கண்வளர்ந்தருளுகை முதலான மேலெழுந்த ஆகாரத்தைப் பார்த்து ஸ்வஜாதீயபுத்தியாலே “மாநிடவனென்றும் குருவை”, “ஜ்ஞாநதீபப்ரதே குரௌ | மர்த்யபுத்திஶ்ருதம் தஸ்ய”, “யோகுரௌ மாநுஷம்பாவம்”, “குருஷுநரமதி:” என்றும் சொல்லுகிறபடியே ஆசார்யனை மநுஷ்யன் என்று ஒருக்காலாகிலும் ப்ரதிபத்தி பண்ணியிருக்கும் நீசர்க்கு வரும் அநர்த்தத்தைச் சொல்லுகிறது மேல்.
“விஷ்ணோரர்ச்சாவதாரேஷு லோஹபாவம் கரோதிய: | யோகுரௌமாநுஷம் பாவம் உபௌநரகபாதிநௌ”, “நாராயணோபி விக்ருதிம் யாதி குரோ: ப்ரச்யுதஸ்யதுர்புத்தே: | ஜலாதபேதம் கமலம் ஶோஷயதி ரவிர்ந போஷயதி”, “ஏகாக்ஷரப்ரதாதாரம் ஆசார்யம் யோவமந்யதே| ஶ்வாநயோநிஶதம் ப்ராப்ய சண்டாலேஷ்வபி ஜாயதே|”, “குருத்யாகீ பவேந்ம்ருத்யு: மந்த்ரத்யாகீ தரித்ரதா| குருமந்த்ரபரித்யாகீரௌரவம் நரகம் வ்ரஜேத்”, “மாடும் மனையும்” என்று தொடங்கி “பீடுடைய எட்டெழுத்தும் தந்தவனே என்றிராதாருறவை விட்டிடுகை கண்டீர் விதி”, “ஐஹிகாமுஷ்மிகம் ஸர்வம் குருரஷ்டாக்ஷரப்ரத: | இத்யேவம் யே ந மந்யந்தேத்யக்தவ்யாஸ்தே மநீஷிபி:”, “மாநிடவனென்றும் குருவை” என்று தொடங்கி, “எக்காலும் நண்ணிடுவர் கீழாம் நரகு”, “ஏகக்ராமநிவாஸஸ்ஸந் யஶ்ஶிஷ்யோ நார்ச்சயேத்குரும்| தத்ப்ரஸாதம் விநாகுர்யாத் ஸ வை விட்ஸூகரோ பவேத்”, “எட்டவிருந்த குருவை இறையன்றென்று விட்டு” என்று தொடங்கி, “அம்புதத்தைப் பார்த்திருப்பானற்று”, “பற்று குருவைப் பரனன்றென இகழ்ந்து” என்று தொடங்கி, “அப்பொருள் தேடித்திரிவானற்று” , “என்றுமனைத்துயிருக்குமீரஞ்செய் நாரணனும்” என்று தொடங்கி, “பொங்குசுடர் வெயிலின் அனலுமிழ்ந்து தானுலர்த்தியற்று”, “தத்தமிறையின் வடிவென்று தாளிணையை வைத்தவவரை வணங்கியிராப்பித்தராய், நிந்திப்பார்க்குண்டேறா நீணிரயம் நீதியால் வந்திப்பார்க்குண்டிழியாவான்”, “தன்குருவின் தாளிணைகள்தன்னிலன்பொன்றில்லாதார்” என்று தொடங்கி, “ஆதலால் நண்ணாரவர்கள் ததிருநாடு”, “ப்ரதிஹந்தா குரோரபஸ்மாரி வாக்யேந வாக்யஸ்ய ப்ரதிகாதம் ஆசார்யஸ்ய வர்ஜயேத்”, “அர்ச்சாவிஷ்ணௌஶிலாதீர்குருஷூநரமதி:” என்று தொடங்கி, “ஸர்வேஶ்வரேஶே ததிதரஸமதீர்யஸ்யவாநாரகீ ஸ:”
குருபரிபவமாவது – கேட்ட அர்த்தத்தின்படியே அநுஷ்டியாதொழிகையும், அநதிகாரிகளுக்கு உபதேஶிக்கையும், “தாமரையை அலர்த்தக்கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரிந்தால் அத்தை உலர்த்துமாபோலே, ஸ்வரூப விகாஸத்தைப் பண்ணும் ஈஶ்வரன்தானே ஆசார்ய ஸம்பந்தம் குலைந்தால் அத்தை வாடப்பண்ணும்”, “குரோரபஹ்நுதாத் த்யாகாத்ஸாம்யாத் அஸ்மரணாதபி| லோபமோஹாதிபிஶ்சாந்யைரபசாரைர்விநஶ்யதி”, “குரோரந்ருதாபிஶம்ஸநம் பாதகஸமாநம் கலு, குர்வர்த்தே ஸப்தபுருஷாந் இதஶ்ச பரதஶ்ச ஹந்தி| மநஸாபி குரோர்நாந்ருதம் வதேத்| அல்பேஷ்வப்யர்த்தேஷு”, “பொய்யுரைத்தல், மாறுரைத்தல், பொருளல்லாதன உரைத்தல், பொருளருளச் சிதகுரைத்தல், போற்றுதற்கு நெகிழுதல், நையுரைத்தல், வலியுரைத்தல், விதிமறுத்தல், கிடத்தல், மேலிருத்தல், கால்நீட்டல், விலங்குமுகமவைத்தல், கையெடுத்துத் தொழ நாணுதல், களை ஒதுக்காதிருத்தல், கருத்தறியாப் பொருளுரைத்தல், காயிலே வாய்க்கிடுதல், மெய் விதிர்த்தல், நிழல் மிதித்தல், தன்னிழல் மேலிடுதல் – வியன்குருவின் சன்னதியில் விடுங்கருமமிவையே”. “யஸ்ய ஸாக்ஷாத் பகவதி ஜ்ஞாநதீப்ப்ரதே குரௌ| மர்த்யபுத்தி ஶ்ருதம் தஸ்ய ஸர்வம் குஞ்ஜரஶௌசவத்”, “ஸுலபம் ஸ்வகுரும் த்யக்த்வா துர்லபம் உபாஸதே| லப்தம் த்யக்த்வாதநம் மூடோகுப்தமந்வேஷதிக் ஷிதௌ”, “சக்ஷுர்கம்யம் குரும் த்யக்த்வா ஶாஸ்த்ரகம்யம் து யஸ்ஸ்மரேத்| ஹஸ்தஸ்தமுதகம் த்யக்த்வாகநஸ்தமபி வாஞ்சதி”, “குரும்த்வங்க்ருத்ய ஹுங்க்ருத்ய விப்ரம் நிர்ஜித்ய வாதத: | அரண்யே நிர்ஜலே தேஶே பவந்தி ப்ரஹ்மராக்ஷஸா:”- இது ஆசார்யாபசாரம்.
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org