ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
“லோகே கேசந மத் பக்தாஸ்ஸத்தர்மாம்ருதவர்ஷிண:| ஶமயந்த்யகமத்யுக்ரம் மேகா இவ தவாநலம்”, “ஜ்ஞாநீத்வாத்மைவ மே மதம்” ,”ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்த்தம் அஹம் ஸ ச மம ப்ரிய:”, “மம ப்ராணா ஹி பாண்டவா:” “நிரபேக்ஷம் முநிம் ஶாந்தம் நிர்வைரம் ஸமதர்ஶநம்| அநுவ்ரஜாம்யஹம் நித்யம் பூயேயேத்யங்க்ரிரேணுபி:”, “மம மத் பக்தபக்தேஷு ப்ரீதிரப்யதிகாந்ருப| தஸ்மாந்மத்பக்தபக்தாஶ்ச பூஜநீயா விஶேஷத:” , “அந்நாத்யம் புரதோ ந்யஸ்தம் தர்ஶநாத்க்ருஹ்யதே மயா| ரஸாந் தாஸஸ்ய ஜிஹ்வாயாமஶ்நாமி கமலோத்பவ”, “மத்பக்தஜநவாத்ஸல்யம் பூஜாயாஞ்சாநுமோதநம்| ஸ்வயம்ப் யர்ச்சநஞ்சைவ மதர்த்தே டம்பவர்ஜநம்|| மத்கதாஶ்ரவணே பக்திஸ்ஸ்வரநேத்ராங்கவிக்ரியா| மமாநுஸ்மரணம் நித்யம் யச்ச மாம் நோபஜீவதி|| பக்திரஷ்டவிதாஹ்யேஷா யஸ்மிந் ம்லேச்சேபி வர்த்ததே| ஸ்விப்ரேந்த்ரோ முநிஶ்ஶ்ரீமாந் ஸ யதிஸ்ஸ ச பண்டித:|| தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் ஸ ச பூஜ்யோ யதா ஹ்யஹம்” என்று ஸர்வேஶ்வரன்தானும் தன்னுடைய அடியாரை லோகபாவநராகவும், தனக்கு ஆத்மாவாகவும், ப்ராணனாகவும், ‘நாள்தோறும் நான் அவர்களுடைய பாதரேணுக்களை ஆசைப்பட்டுப் பின்செல்லாநின்றேன்’ என்றும், ‘அவர்களுடைய ஸத்காரம் எனக்கு மிகவும் ப்ரியம்’ என்றும், ‘அந்நாதிகளிலுண்டான ரஸங்களெல்லாம் அவர்கள்முகேந ஜீவிப்பேன்’ என்றும், ம்லேச்சஜாதியிலே பிறந்தார்களேயாகிலும் தன்னைப்போலே அவர்களும் பூஜ்யர் என்றும் அருளிச்செய்தான்.
“அக்ஷ்ணோ: பலம் தாத்ருஶதர்ஶநம் ஹி தந்வா: பலம் தாத்ருஶகாத்ரஸங்கம்| ஜிஹ்வாபலம் தாத்ருஶகீர்த்தநஞ்ச ஸுதுர்லபாபாகவதா ஹி லோகே”, “நாஹம் ஸமர்த்தோ பகவத்ப்ரியாணாம் வக்தும் குணாந் பத்மபுவோப்யகண்யாந்| பவத்ப்ரபாவம் பகவாந் ஹி வேத்தி ததாபவந்தோ பகவத்ப்ரபாவம்” என்று – மஹாபாகவதர்களுடைய தர்ஶந – ஸ்பர்ஶந – ஸம்பாஷணங்களே தனக்கு ஸர்வப்ரயோஜநமென்று அவர்களுடைய திவ்ய குணங்களைச் சொல்லுகைக்கு நான் ஸமர்த்தையன்று என்றும், அவர்களுடைய ப்ரபாவத்தை என்னால் சொல்லித் தலைக்கட்டப் போகாது என்றும் ஶ்ரீபூமிப்பிராட்டியும் அருளிச்செய்தாள்.எம்பெருமானார் திருவதாரத்தாலே அனைவருக்கும் உஜ்ஜீவனம்
“திறம்பேன்மின் கண்டீர்” என்று தொடங்கி , “இறைஞ்சியும் சாதுவராய்ப் போதுமின்களென்றான் நமனுந்தன் தூதுவரைக் கூவிச் செவிக்கு” என்றும், “அவன்தமர் எவ்வினையராகிலும் எங்கோனவன்தமரே என்றொழிவதல்லால் நமன்தமராலாராயப் பட்டறியார் கண்டீர் அரவணைமேல் பேராயற்காட்பட்டார் பேர்” என்றும், “பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச்சாபம் நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங்கு யாதொன்றுமில்லை” என்றும், “வெள்ள நீர் வெள்ளத்தணைந்த அரவணைமேல் துள்ளுநீர் மெள்ளத் துயின்ற பெருமானே வள்ளலே உன்தமர்க்கென்றும் நமன்தமர் கள்ளர்” என்று பகவத்ப்ரபந்நர் எப்படி இருந்தார்களேயாகிலும் அவர்களை யமாதிகள் ஏறிட்டுப் பார்க்கவொண்ணாத மாத்ரமுமன்றிக்கே யம்படர் கள்ளர்பட்டது படுவார்கள் என்று பாகவத ப்ரபாவத்தை ஆழ்வார்களும் அருளிச்செய்தார்கள்.
“நாவலிட்டுழிதருகின்றோம் நமன்தமர் தலைகள்மீதே” என்னும் மதிப்பரிறே ஆழ்வார்கள். “நகலுபாகவதா யமவிஷயம் கச்சந்தி” என்றும் பாகவத வைபவத்தைச் சொல்லுகிறது. இந்த ப்ரஸங்கத்திலே யமாதிகள் பாகவத விஷயத்தில் வர்த்திக்கிறபடி சொல்லுகிறது. “ஸ்வபுருஷமபி வீக்ஷ்ய பாஶஹஸ்தம் வததி யம: கில தஸ்ய கர்ணமூலே| பரிஹர மதுஸூதந ப்ரபந்நாந் ப்ரபுரஹமந்யந்ருணாம் ந வைஷ்ணவாநாம்|| கமலநயந வாஸுதேவ விஷ்ணோ தரணிதராச்யுத ஶங்க சக்ரபாணே| பவஶரணமிதீரயந்தி யேவை த்யஜபட தூரதரேணதாநபாபாந்” என்றும் இத்யாதிகளாலே – நான் பகவத் ப்ரபந்நரை நியமிக்கக் கர்த்தாவன்று; என்னுடைய ப்ருத்யரான நீங்களும் அவர்களைக் கண்டால் தடஸ்தராய் உங்களைப் பேணிக்கொண்டு தூரத்திலே விலகிப் போங்கோள் – என்று அவர்களுக்கு புத்தி சொல்லி எல்லாரையும் கர்மாநுகுணமாக உசித தண்டம் பண்ணுகிற யமன்தன்னாலும் ஶ்ரீவிஷ்ணுபுராணாதிகளிலே பாகவத வைபவம் சொல்லப்பட்டதிறே.
அபாகவத ஸம்ஶ்லேஷம் பாகவத விஶ்லேஷத்தையும், பகவத் விஶ்லேஷத்தையும் பிறப்பிக்கும்; பாகவத ஸம்ஶ்லேஷம் பகவத ஸம்ஶ்லேஷத்தையும், அபாகவத விஶ்லேஷத்தையும் பிறப்பித்து, இவனையும் கரைமரம் சேர்த்துவிடும். இவ்வெல்லைமயக்கு ஸதாசார்யன் கண்வட்டத்திலே வர்த்திக்குமவனுக்கு வாராது. அவன் கண்வட்டம் விட்டால் நித்ய ஸம்ஸாரியாய்ப் போமித்தனை என்று ஆச்சான் பிள்ளையும் மாணிக்க மாலையிலே அருளிச்செய்தார்.
ஆகையாலே ஸகல ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் ஆசார்யாதீநமாயிருக்க வேணும்; அப்படியிராமல் கலங்கி தத்ஸம்பந்தத்தையும் மறந்து, ஸ்வாதந்த்ர்யம் தலையெடுத்து, அக்ருத்யகரணம், பகவதபசாரம், பாகவதாபசாரம், அஸஹ்யாபசாரம் தொடக்கமான அநர்த்தங்களிலே ஏதேனுமொன்றை விளைத்துக்கொண்டு, யாவதாத்மபாவி ரௌரவாதி கோர நரகங்களிலே விழுந்து நஶித்துப்போகத் தக்கதான ஆத்மாக்களையும், முற்படத் தங்கள் திருவடிகளிலே ஒரு ஸம்பந்தமுண்டாகையாலும் அவ்வாத்மாக்கள் மேல் படப்போகிற து:க பரம்பரைகளை அறிந்தருளுகையாலும் அவர்கள் விஷயத்தில் ‘ஐயோ’ என்கிற க்ருபாதிஶயத்திலே விடமாட்டாதே “பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப்பணி கொள்”ளுகையிறே ஸதாசார்ய லக்ஷணம்.
ஆகையாலே தம்முடைய ஶிஷ்யனான நாலூரானும் க்ருமிகண்டனோடே கூடித் தம்முடைய விஷயத்திலே மஹாபராதத்தைப் பண்ண, பெருமாள் அவனை ‘நஷமாமி’ என்று முனிந்தருள, அவரோடே மறுதலைத்து ‘நாம்பெற்ற லோகம் நாலூரானும் பெறவேணும்’ என்று கூரத்தாழ்வானும்;
தம்முடைய ஶிஷ்யராயிருப்பாரொருவர் ஸஹவாஸ தோஷத்தாலே கலங்கி, விஷயப்ராவண்யம் தலையெடுத்து, ‘பட்டரே! உமக்கும் நமக்கும் பணியில்லை’ என்று அவருடைய திருவடிகளை விட்டகன்று போகத்தேட, ‘வாராய் பிள்ளாய்! அது உன்னுடைய அபிப்ராயத்தாலேயன்றே, நீ விட்டாலும் நான் விடேன்’ என்று பட்டரும் தம்முடைய திருவடிகளிலே ஆஶ்ரயிப்பித்தும்;
அந்தரங்கராய், மஹாவிரக்தராய் இருப்பாரொரு ஸாது ஶ்ரீவைஷ்ணவர் அந்ந தோஷத்தாலே அஹங்கராதிகள் தலையெடுத்து, பூர்வதஶையில் பொகட்டுவந்த சவளத்தை (= ஈட்டியை) மீளவும் எடுத்துக்கொண்டு ராஜஸேவை பண்ணித்திரிய, இப்படிக் கைகழிந்து போனவரையும் பின்தொடர்ந்து யத்நேந பிடித்துக்கொண்டுவந்து, ஒரு அறையிலே தாமும் அவருமாக அடைத்துக் கொள்ள, ஶ்ரீபாதத்துக்கு பரிவரான முதலிகள் எல்லாருங்கூடி ‘ஐயோ! ப்ரமாதம் பிறக்கிறது; சவளமும் உடைத்துக்கையுமான அவனைவிட்டு அறையினின்றும் புறப்படவேணும்’ என்று அதிக்லேஶத்தோடே கூப்பிட, “இவனை ரக்ஷித்தாலல்லது நான் புறப்படேன்; இவன் உஜ்ஜீவியாதிருக்கில் இந்த சவளக்காரனோடே அடைத்துக்கொண்டு சாவேன்’ என்ற வேதாந்திகளான நஞ்சீயரும்;
பிள்ளை லோகாசார்யர்
தந்தாம் விஷயங்களிலே குற்றம் செய்தவர்கள் பக்கல் பொறையும், க்ருபையும், சிரிப்பும், உகப்பும், உபகார ஸ்ம்ருதியும் நடக்கவேணுமென்று அருளிச்செய்த மாத்ரமன்றிக்கே அநுஷ்டாநத்துக்கு ஸீமாபூமியாயிருக்கும் பிள்ளை லோகாசார்யரும், “ஸ்வீகரோதி ஸதாசார்யஸ்ஸர்வாநப்யவிஶேஷத: | யத்புநஸ்தேஷு வைஷம்யம் தேஷாம் சிஜ்ஜ்ஞாநவ்ருத்தயோ:|| தேஷாமேவ ஹி தோஷோயம், ந சாஸ்யேதி விநிஶ்சிதம்| அபக்வ பத்மகோசாநாம் அவிகாஸோ ரவேர்யதா” என்கிறபடியே தங்கள் திருவடிகளிலே ஆஶ்ரயித்திருக்கச் செய்தேயும் அவர்களுடைய ஜ்ஞாநதௌர்பல்யத்தாலே மீளவும் விபரீத ப்ரவ்ருத்தராய், ஆத்மநாஶம் பிறந்து போகத்தேடினவர்களையும் விட க்ஷமரன்றிக்கே “ஸ்காலித்யே ஶாஸிதாரம்” என்றும், “தேஶிகோ மே தயாலு:” என்றும் சொல்லுகிறபடியே தங்களுடைய நியமத்தலும் க்ருபாதிஶயத்தாலும் இப்படி ரக்ஷித்துப் போந்தார்கள்.
“வாஸுதேவம் ப்ரபந்நாநாம் யாந்யேவ சரிதாநி வை| தாந்யேவ தர்மஶாஸ்த்ராணீத்யேவம் வேத விதோ விது:” இப்படி பூர்வசார்யர்கள் விசேஷத்தை நம்முடைய ஆசார்யர் திருநகரியிலே ஓலமேச்சான் மடத்திலே தாம் கண்வளர்ந்தருளாநிற்க, எம்பெருமானாருக்கு விஷமிட்ட சண்டாளரைப் போலே மனக்குற்ற மாந்தரான அஸூயாபரரானவர்கள் கர்மகாலத்திலே மத்யராத்ரியிலே அந்த மடத்திலே அக்நிப்ரக்ஷேபத்தைப்பண்ண, அந்தக் கள்ளளரை அத்தேஶத்துக்குக் கர்த்தரான ராஜாக்கள் கண்டுபிடித்துக் கொண்டு சித்ரவதம் பண்ணத்தேட “கேட்பார் செவிசுடு” என்கிறபடியே ஆருக்கும் ஶ்ரவணகடோரமான இம்மஹாபாபத்தைத் தம்முடைய விஷயத்திலே கூசாமல் தீரக்கழியப் பண்ணின நிஷ்டுரரையுமுட்பட {அகப்பட} “பாபாநாம் வா ஶுபாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம| கார்யம் கருணமார்யேண ந கஶ்சிந்நாபராத் யதி” என்றும், “பவேயம் ஶரணம் ஹி வ:” என்றும், “க: குப்யேத் வாநரோத்தம” என்றும் சொல்லுகிறபடியே அந்த ராஜாக்களோடே மறுதலைத்து அந்தக் கள்ளரைக் கொல்லாதபடி விடுவித்து ரக்ஷித்தருளின பரமக்ருபையாளர் என்னுமது லோகத்திலே எல்லாருமறிய ப்ரஸித்தமிறே. இன்னமும் அஸ்மதாசார்யருடைய க்ருபாதிஶயமும், அவதாரவிசேஷமும் கீரி, கிளி, வ்ருக்ஷவ்ருத்தாந்தங்களிலும், ஸ்வப்நவ்ருத்தாந்தங்களிலும் அறிவார்க்கிறே தெரிவது.
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org
1 thought on “அந்திமோபாய நிஷ்டை – 17- பாகவதர்களின் நிர்ஹேதுக க்ருபை”