ஸ்ரீ: ஸ்ரீமத்யை கோதாயை நம: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம:
“यथार्थं सर्वविज्ञानमिति वेदविदां मतम्” इत्युक्तत्वात् भ्रमादि प्रत्यक्षज्ञानं यथार्थमेव, अख्याति – आत्मख्याति – अनिर्वचनीयख्याति – अन्यथाख्याति वादिनो निरस्य सत्ख्याति पक्षस्वीकारात् । सत्ख्यातिर्नाम ज्ञानविषयस्य सत्यत्वम। तर्हि भ्रमत्वम् कथमिति चेत्, विषयव्यवहारबाधात् भ्रमः । तदुपपादयामः – पञ्चीकरणप्रक्रिया पृथिव्यादिषु सर्वत्र सर्वभूतानां विद्यमानत्वात्, अत एव शुक्तिकायां रजतांशस्य विद्यमानत्वात् ज्ञानविषयस्य सत्यत्वम् । तत्र रजतांशस्य स्वल्पत्वात्तु न व्यवहार इति तज्ञज्ञानं भ्रमः । शुक्तयंशभूयस्त्वज्ञानात् भ्रमनिव्र्त्तिः ।
“யதார்தம் ஸர்வவிஜ்ஞானமிதி வேதவிதாம் மதம்” இத்யுக்தத்வாத் ப்ரமாதி ப்ரத்யக்ஷஞானம் யதார்தமேவ, அக்யாதி – ஆத்மக்யாதி – அநிர்வசனீயக்யாதி – அன்யதாக்யாதி வாதினோ நிரஸ்ய ஸத்க்யாதி பக்ஷஸ்வீகாராத் | ஸத்க்யாதிர்நாம ஞானவிஷயஸ்ய ஸத்யத்வம் | தர்ஹி ப்ரமத்வம் கதமிதி சேத், விஷயவ்யவஹாரபாதாத் ப்ரம: | ததுபபாதயாம: – பஞ்சீகரணப்ரக்ரியா ப்ருதிவ்யாதிஷு ஸர்வத்ர ஸர்வபூதானாம் வித்யமானத்வாத், அத ஏவ ஶுக்திகாயாம் ரஜதாம்ஶஸ்ய வித்யமானத்வாத் ஞானவிஷயஸ்ய ஸத்யத்வம் | தத்ர ரஜதாம்ஶஸ்ய ஸ்வல்பத்வாத்து ந வ்யவஹார இதி தஞ்ஞானம் ப்ரம: | ஶுக்தயம்ஸபூயஸ்த்வஞானாத் ப்ரமநிவ்ர்த்தி: |
இதுவரையில் ப்ரத்யக்ஷத்தின் லக்ஷணம் மற்றும் அவற்றின் பிரிவுகள் ஆகியவற்றை விசாரித்துவிட்டு, இப்பொழுது ப்ரத்யக்ஷ ப்ரமாணத்தால் அறியப்படுபவற்றின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துகிறார். ஸர்வவிஜ்ஞானம் – அனைத்து ஞானங்களும்; யதார்த்தம் – யதார்த்தமே – வஸ்துக்களை உள்ளபடி காட்டுகின்றன; இதி வேதவிதாம் மதம் – என்று வேதம் அறிந்தவர்களுடைய, ஸ்ரீமந்நாதமுனிகள், ஸ்ரீ ஆளவந்தார் ஆகியோருடைய மதம் – என்று ஸ்வாமி எம்பெருமானார் ஸ்ரீபாஷ்யத்தில் அருளியுள்ளார்.
ஸ்ரீமந்நாதமுனிகள் தம்முடைய ந்யாய தத்வத்தில் – “षश्ठीं चेयं ख्यातियथार्थख्याति” [ஷஷ்டீம் சேயம் க்யாதியதார்த்தக்யாதி] என்றருளியுள்ளார். அதாவது (1) அஸத்க்யாதி, (2) ஆத்மக்யாதி, (3) அநிர்வசநீயக்யாதி, (4) அந்யதாக்யாதி, (5) அக்யாதி என்று 5 விதமான க்யாதிகள் இல்லாமல் ஆறாவதான யதார்த்தக்யாதி என்பதே நம் ஆசார்யர்களால் கைக்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பு – இப்போது சில விஷயங்கள் அறிந்து கொள்வது, மேல் விஷயங்களைப் புரிந்து கொள்வதற்கு அவசியம் ஆகிறது.
ஶுக்தி எனப்படும் முத்துச் சிப்பியை சில சமயம் தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது – அது வெள்ளி போன்று தோன்றுகிறது. பின்பு நெருங்கிச் சென்று அதை கையில் எடுத்துப் பார்த்தால் அது வெள்ளியன்று என்று ப்ரமம் நீங்கி விடுகிறது. இதை பலவாறாகப் பல மதங்களிலே கொண்டுள்ளார்கள்.
(1) அஸத்க்யாதி,
இது மாத்யாமிகனுடைய மதம் சார்ந்தது. ஜ்ஞானமும் ஆகட்டும், வெளியிருக்கிற வஸ்துக்களாகட்டும் ஒன்றும் இல்லை – சூந்யம் தான் உள்ளது. அஸத் தோன்றுவதால் இது அஸத்க்யாதி என்னப்பட்டது.
(2) ஆத்மக்யாதி
இது பௌத்தர்களுடையதாகும் (யோகாசாரர்களுடையது). ஆத்மாவான ஞானம் ஒன்று தானிருக்கிறது. இது வஸ்துவை க்ரஹிக்கும் பொழுது, வஸ்துக்கள் இல்லை. ஜ்ஞானம் தான் இவைகள். ஜ்ஞானம் இல்லாத பொழுது இவை தோன்றவில்லையே! ஆகவே ஜ்ஞானமே ப்ராந்தியால் விஷயமாகத் தோன்றுகிறது என்பது இவர்கள் கொள்கை.
(3) அநிர்வசநீயக்யாதி,
இது அத்வைதிகளின் பக்ஷம். முத்துச்சிப்பியினைப் பார்க்கும் பொழுது, வெள்ளியானது ப்ரத்யக்ஷமாய் இல்லை. கடையில் இருக்கும் வெள்ளி ப்ரத்யக்ஷமாகத் தோன்றாது. இது தன்னை ஸ்ம்ருதி என்றும் சொல்ல முடியாது. எனவே சிப்பியில் வெள்ளி தோன்றும் பொழுது, அது எல்லாராலும் கடையில் காணப்படும் வெள்ளியினைக் காட்டிலும் அவித்யையின் மஹிமையால் வேறொரு வெள்ளி உண்டாகிறது. இது இப்படி என்று சொல்ல முடியாதாகையாலே இது அநிர்வசநீயம் என்னப்பட்டது. இது ப்ரஹ்ம வ்யதிரிக்தமான பதார்த்தம் (ப்ரஹ்மத்தைத் தவிர்த்த வேறு பதார்த்தம்) ஆகையாலே இதை ஸத் என்றும் சொல்லமுடியாது (அவர்கள் கொள்கைப்படி ப்ரஹ்மம் ஒன்றே ஸத்யம்), தோன்றுவதால் அதை அஸத் என்றும் சொல்லமுடியாது
(4) அந்யதாக்யாதி,
இது தார்க்கிகர்களின் மதம் ஆகும். ஆபரணம் செய்வதற்கு உபயோகப்படும் வெள்ளியானது தோஷத்தாலே சிப்பியிலே தோன்றுகிறது. சிப்பியானது அந்யத்தாக (வேறாக) தோன்றுவதால் இது அந்யதாக்யாதி
(5) அக்யாதி
மீமாம்ஸகர்கள் மதம் அக்யாதி வாதத்தினை கொண்டுள்ளது. சிப்பியினைப் பார்த்து வெள்ளி என்று ப்ரமிக்கும் பொழுது,
- இதம் (இது) என்றும் ரஜதம் என்றும் இரண்டு ஜ்ஞானங்கள்
- இது என்பது ப்ரத்யக்ஷம் – கண்ணால் காண்பது.
- ரஜதம் என்பது ஸ்ம்ருதி அல்லது ஸ்மரணம்.
- இவை இரண்டின் பேதத்தை அறியாமையே ப்ரமம் (சிப்பியை வெள்ளி என்று எண்ணுவது).
- இந்த பேத க்ரஹணம் இல்லாமையே அக்யாதி.
- க்யாதி: பேத க்ரஹ: – க்யாதி (ஜ்ஞானம்) என்பது பேத க்ரஹணம்.
- ததபாவ: – அக்யாதி – அது இல்லாமை அக்யாதி.
இவற்றுள் முதலாவதான அஸத்க்யாதிக்கு நிரதிஷ்டான க்யாதி என்றும் பெயர். அவர்கள் பக்ஷத்தில் தோன்றும் அனைத்தும் அஸத்.
ஆத்மக்யாதியும் நிலை நிற்காது. ஜ்ஞானமும் விஷயமும் சேர்ந்தே தோன்றுகிறது. அப்படித் தோன்றினாலும் அவை வெவ்வேறே! ஜ்ஞானமாவது வஸ்துவை க்ரஹிக்கிறது. “अहम् घटम् जानामि” என்பதால் நான் கடத்தை அறிகிறேன் என்னும்பொழுது, அறியக்கூடிய ஜ்ஞானமும் அறியப்பட்ட கடமும் ஒன்றாக ஆகமுடியாது.
அநிர்வசநீயமும் ஸத்தா அஸத்தா என்று கேட்டால் அதுவும் நிற்காது. அநிர்வசநீயம் என்பது எப்படி அறியப்படுகிறது? இன்னதென்று சொல்ல முடியுமா என்று கேட்டால் – ஆம் என்று விடையளிப்பார்களாயின், அது அநிர்வசநீயமே அன்று. இல்லை என்றால் – அஸத்தான ஒன்றைக் கொண்டு நிர்வாஹம் செய்ய முடியாதாகையாலே, அதுவும் தள்ளுண்டதாகும்.
எனவே மீமாம்ஸகர்களுடைய விளக்கத்தையோ அல்லது தார்க்கிகர்களின் விளக்கத்தையோ கொண்டு தான் மேல் விவரிக்க வேண்டும். இதில் அக்யாதி எனப்படும் மீமாம்ஸகர்களின் கொள்கையானது அனுபவத்திற்க்கும், நமது மதத்திற்க்கும் ஒத்து வருகிறது.
யதார்த்தக்யாதி
இனி நாம் நம் ஆசார்யர்கள் கொண்ட யதார்த்தக்யாதி எனப்படும் ஸத்க்யாதியினைப் பார்க்கலாம்.
- தூரத்தில் இருந்து சிப்பியினைப் பார்க்கும் பொழுது, வெள்ளியினுடைய அம்சமான பளபளப்பு தோன்றுகிறது.
- சிப்பியில் இந்த அம்சம் தோன்றுவதன் காரணம் பஞ்சீகரணம் ஆகும். (பஞ்சீகரணம் மேலே விளக்கப்படுகிறது).
- இதனால் இது வெள்ளி என்று நினைத்து அதை ஒருவன் எடுத்துக் கொள்ள எத்தனிக்கிறான்.
- அருகில் பார்த்ததும், அது சிப்பி (வெள்ளியின் அம்சம் குறைவானது) என்பது தெரிந்து கொள்கிறான்.
- இதில் அனைத்து ஜ்ஞானமும் உண்மையே. பின்பு ஏன் சிப்பியினை வெள்ளி என்று கொள்வதில்லை என்றால் – அதில் வெள்ளியின் அம்சம் குறைவாக இருப்பதினால் வ்யவஹாரம் பாதிக்கப்படுகிறது.
பஞ்சீகரணம்
பஞ்சீகரணமாவது ப்ருத்வியாதி ஐந்து பூதங்களிலும் மற்ற நான்கு பூதங்களை 50% சேர்ப்பது. உதாரணத்திற்கு ஆகாசம் என்னும் பூதத்தில் ஆகாசம் 50 சதவிகிதமும், மற்றைய பூதங்கள் (அக்னி, வாயு, நீர், ப்ருதிவீ) சேர்ந்து 50% உள்ளன. ஒவ்வொரு பூதத்தில் நின்றும் 1/8 பங்கு பிற பூதங்களில் உள்ளன. இந்த பஞ்சீகரணம் ஸ்ருஷ்டிக்கு அவசியமாகிறது.
இங்குக் கீழே ஆகாசம் காட்டப்பட்டுள்ளது. இது போன்றே பிற பூதங்களையும் கொள்ள வேண்டியது.
இது தன்னை ஸ்ரீமத் வரவரமுனிகள் தத்வத்ரயம் – 116 சூர்ணிகையில் ” ஆகாசாதி பூதங்களைந்தையும் தனிதனியே இரண்டு கூறுகளாக்கி, அவற்றிலே ஒரு கூறை நாலு கூறுகளாக்கி, அந்தக் கூறுகளை பூதாந்தரங்களிலே கூட்டி, ஸர்வ பூதங்களிலும் ஸர்வமுண்டாம்படி பண்ணுகை.” என்றருளியுள்ளது நோக்கத் தக்கது.
இனி மூலத்தில் உள்ளபடி விளக்கப்படுகிறது.
ஸத்க்யாதி என்றால் ஜ்ஞானத்தின் ஸத்யத்வம். ஜ்ஞானம் ஸத்யம் என்றால், ப்ரமம் எப்படி உண்டாகிறது என்னில், ப்ரமமானது வ்யவஹாரத்தைப் பாதிப்பது. அதாவது சிப்பியில் சிறிதளவு பார்த்திபாம்சம் இருப்பதனால், அதை வெள்ளி என்று பார்க்கும் ஜ்ஞானம் ஸத்யமாய் இருந்தாலும், அதில் வெள்ளியின் அம்சம் குறைவாக இருப்பதினால் அதை வெள்ளி என்று வ்யவஹரிப்பதை (அதைக் கடையில் கொடுத்து ஆபரணம் ஆக்க முடியாது) பாதிக்கிறது.
பஞ்சீகரணப் ப்ரக்ரியையினாலே ஸர்வ பூதங்களிலும் மற்ற பூதங்கள் அம்சம் சிறிதளவு கலந்து இருப்பதினால் சிப்பி, வெள்ளி போன்று தோற்றம் அளிக்கிறது. அந்த ரஜதாம்சம் ஸ்வல்பம் என்று அறியாமல் இருப்பது ப்ரமம். அதை அறிவது ப்ரம நிவ்ருத்தி ஆகும்.
स्वप्नादिज्ञानं तु सत्यमेव । तत्तत्पुरुषानुभाव्यतया तत्तत्कालावसानान् रथादीन् परमपुरुषः सृजतीति हि श्रुत्या अवगम्यते ।
ஸ்வப்நாதிஞானம் து ஸத்யமேவ | தத்தத்புருஷானுபாவ்யதயா தத்தத்காலாவஸானாந் ரதாதீந் பரமபுருஷ: ஸ்ரூஜதீதி ஹி ஶ்ருத்யா அவகம்யதே |
இனி சிப்பியில் வெள்ளி தோன்றுவது போல இருக்கும் வேறு சிலவற்றை நிர்வஹித்தருளுகிறார். ஸ்வப்நத்தில் பார்க்கப்படும் வஸ்துக்களும் உண்மையே. அந்த அந்த புருஷர்களின் புண்யபாபங்களுக்கு ஏற்ப, எம்பெருமான், அவன் மட்டும் அனுபவிக்குமாறு அவற்றை ஸ்ருஷ்டிப்பதாலே.
- “न तत्र रथा रथयोगा न पन्थानो भवन्ति, अथ रथान् रथयोगान् पथस् सृजते xxx स हि कर्त्ता” (बृ 6-3-10) அந்த ஸ்வப்ன காலத்தில் ரதங்களோ, குதிரைகளோ, பாதைகளோ இல்லை, அந்த சமயம் ரதங்களையும், குதிரைகளையும், பாதைகளையும் (ஸவப்னம் அனுபவிப்பவன் மட்டும் பார்க்கும் படி ஈஶ்வரன் ஸ்ருஷ்டிக்கிறான் – அவனல்லவோ ஸர்வ கர்த்தா – என்னும் ப்ருஹதாரண்ய உபநிஷத்தை திருவுள்ளத்தில் கொண்டு ஶ்ருத்யா அவகம்யதே என்றார்.
पीतश्शङ्कः इत्यादौ नयनवर्तिपित्तद्र्व्यसम्भिन्ना नायनरश्मयश्शङ्कादिभिः संयुज्यन्ते । तत्र पित्तगतपीतिमाभिभूतश्शङ्खगतशुक्लिमा न गृह्यते । अतः सुवर्णानुलिप्तशङ्खवत् “पीतश्शङ्खः” इति प्रतीयते । सूक्ष्मत्वात् पीतिमा स्वनयननिष्क्रान्ततया स्वेनैव गृह्यते, नत्वन्यैः ।
பீதஶ்ஶங்க இத்யாதௌ நயநவர்திபித்தத்ரவ்யஸம்பின்னா நாயனரச்மயஶ்ஶங்காதிபி: ஸம்யுஜ்யன்தே: | தத்ர பித்தகதபீதிமாபிபூதச்ஶங்ககதஶுக்லிமா ந க்ருஹ்யதே | அத: ஸுவர்ணானுலிப்தச்ஶங்கவத் “பீதஶ்ஶங்க:” இதி ப்ரதீயதே | ஸுக்ஷ்மத்வாத் பீதிமா ஸ்வநயநநிஷ்க்ராந்ததயா ஸ்வேநைவ க்ருஹ்யதே, நத்வன்யை: |
வெண்மையான ஶங்கம் மஞ்சளாகத் தோற்றுவது இந்த்ரியத்தின் தோஷத்தாலே. கண்ணில் இருக்கும் பித்தத்துடன் கலந்த சக்ஷுரிந்த்ரியத்தின் கிரணங்கள் க்ரஹிப்பதால் அவனுக்கு மாத்திரம் வர்ணம் மஞ்சளாகத் தெரிகிறது.
जपाकुसुमसमीपवर्तिस्फटिकमणिरपि रक्त इति गृह्यते । तत्ज्ञानं सत्यमेव ।
ஜபாகுஸுமஸமீபவர்திஸ்படிகமநிரபி ரக்த இதி க்ருஹ்யதே | தத்ஞானம் ஸத்யமேவ |
செவ்வரத்தம்பூவின் பக்கத்திலுள்ள ஸ்படிகம் சிவப்பாக அறியப்படுவதும் ப்ரமை தான். பூவிலுள்ள சிவப்பு வர்ணம் ஸ்படிகத்தின் வெண்மையை மறைத்துவிடுகிறது
मरीचिकायां जलज्ञानमपि पञ्चीकरणप्रक्रियया पूर्वोक्तवदुपपद्यते । पञ्चीकरणप्रक्रिया तु उत्तरत्र वक्ष्यते ।
மரீசிகாயாம் ஜலஞானமபி பஞ்சீகரணப்ரக்ரியயா பூர்வோக்தவதுபபத்யதே | பஞ்சீகரணப்ரக்ரியா து உத்தரத்ர வக்ஷ்யதே |
கானல் நீர் தோற்றுவதும் முன்பு சொன்ன பஞ்சீகரணத்தாலே. பஞ்சீகரண ப்ரக்ரியை முன்பு விளக்கப்பட்டது.
दिग्भ्रमोपि तथैव. दिशि दिगन्तरस्य विद्यमाणत्वात् अवच्छेदक-मन्तरेण दिगिति द्रव्यान्तरानङ्गीकाराच्च ।
திக்ப்ரமோபி ததைவ. திஷி திகந்தரஸ்ய வித்யமானத்வாத் அவச்சேதக-மன்தரேன திகிதி த்ரவ்யான்தரானங்கீகாராச்ச |
ஒரு திக்கை வேறு திக்காக எண்ணுவதும் அப்படியே. திக்கு என்பது வஸ்துவின் இடத்தைப் பொறுத்து மாறுவதாலும்.
अलातचक्रादौ तु शैघ्र्यादन्तरालाग्रहणात्तत्तद्देशसंयुक्त तत्तद्वस्तुन एव चक्राकारेण ग्रहणम् । तदपि सत्यमेव ।
அலாதசக்ராதௌ து ஶைக்ஹ்ர்யாதன்தராலாக்ரஹநாத்தத்தத்தேஸஸம்யுக்த தத்தத்வஸ்துந ஏவ சக்ராகாரேந க்ரஹணம் | ததபி ஸத்யமேவ |
ஒரு கொள்ளிக்கட்டையை வேகமாகச் சுற்றும் பொழுது இடைவெளி தோன்றாமல் அது சக்ரமாகத் தோன்றுகிறது. அதனாலே ஒரு சக்ரமாகப் பார்க்கப்பட்டதும் உண்மையில் இருப்பது தான்.
दर्पणादिषु निजमुखादिप्रतीतिरपि यथार्था । दर्पणादिप्रतिहतगतयो नायनरश्मयो दर्पणादि ग्रहणपूर्वकं निजमुखादि गृह्णन्ति । तत्राप्यति शैघ्र्यादन्तरालाग्रहणात्तथा प्रतीतिः ।
தர்பணாதிஷு நிஜமுகாதிப்ரதீதிரபி யதார்தா | தர்பணாதிப்ரதிஹதகதயோ நாயநரஷ்மயோ தர்பணாதி க்ரஹநபூர்வகம் நிஜமுகாதி க்ருஹ்ணன்தி | தத்ராப்யதி ஶைக்ஹ்ர்யாதன்தராலாக்ரஹணாத்ததா ப்ரதீதி: |
கண்ணாடி முதலியவற்றில் தெரியும் முகமும் ஸத்யமே. கண்ணாடியில் பட்டு கண்ணில் இருந்து வரும் கிரணங்கள் திரும்பி வருகின்றன. முதலில் கண்ணாடியைப் பார்த்துப் பின் முகத்தைப் பார்க்கின்றன. இவை அனைத்தும் வேகமாக நடப்பதால் நம்மால் பிரித்து உணர முடியவில்லை. எனவே கண்ணாடியில் முகம் இருப்பது போன்று தோன்றுகிறது.
द्विचन्द्रज्ञानादावपि अङ्गुल्यवष्डम्भ तिमिरादिभिर्नयनतेजोगतिभेदात् सामग्रीद्वयमन्योन्यनिरपेक्षं द्विचन्द्रग्रहणहेतुर्भवति । सामग्रीद्वयं पारमार्थिकम् । तेन द्विचन्द्रज्ञानं भवति । अतस्सर्वं ज्ञानं सत्यं सविशेषविषयं च; निर्विशेषवस्तुनोSग्रहणात् ॥
த்விசந்த்ரஞானதாவபி அங்குல்யவஷ்டம்ப திமிராதிபிர்நயனதேஜோகதிபேதாத் ஸாமக்ரீத்வயமந்யோந்யநிரபேக்ஷம் த்விசந்த்ரக்ரஹநஹேதுர்பவதி | ஸாமக்ரீத்வயம் பாரமார்திகம் | தேன த்விசந்த்ரஞானம் பவதி | அதஸ்ஸர்வம் ஞானம் ஸத்யம் ஸவிசேஷவிஷயம் ச; நிர்விஶேஷவஸ்துநோSக்ரஹணாத் ||
கண்ணில் விரலை வைத்துப் பார்த்தால் சந்த்ரன் இரண்டாகத் தெரிவது – கண்ணில் இருந்து புறப்படும் கிரணங்கள் இரண்டாகப் பிரிந்து தனித்தனியே போய் சந்த்ரனுடன் ஸம்பந்தப்படுகின்றன. ஆகையால் சந்த்ரன் இரண்டாகத் தெரிகிறது.
ஆகையால் எல்லா ஜ்ஞானங்களும் ஸத்யமாகவும், விசேஷணங்களுடன் கூடியே தான் இருக்கும் என்பது காட்டப்பட்டது. நிர்விசேஷ க்ரஹணம் என்பது ஸம்பவிக்காது.
அடியேன் ஸுதர்சன ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org