யதீந்த்ரமத தீபிகை – பகுதி – 7

ஸ்ரீ:  ஸ்ரீமத்யை கோதாயை நம:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம:

யதீந்த்ரமத தீபிகை

<< பகுதி – 6

एवं भूतं प्रत्यक्षं प्रथमतो भेदमेव गृह्णाति । भेद इति व्यवहारो तु प्रतियोग्यपेक्षा; न तु स्वरूपे । तेनानवस्थायोन्योन्याश्रयदोषोSपि नास्ति । उपर्युपरि त्वपेक्षा अनवस्था । परस्परापेक्षा अन्योन्याश्रयः ॥

ஏவம் பூதம் ப்ரத்யக்ஷம் ப்ரதமதோ பேதமேவ க்ருஹ்ணாதி | பேத இதி வ்யவஹாரே து ப்ரதியோக்யபேக்ஷா, ந து ஸ்வரூபே | தேநாவஸ்தான்யோந்யாஶ்ரயதோஷோSபி நாஸ்தி | உபர்யுபரி த்வபேக்ஷா அநவஸ்தா | பரஸ்பராபேக்ஷா அந்யோந்யாஶ்ரய: ||

வஸ்துக்களை க்ரஹிக்கும் பொழுது விஶேஷணங்களுடன் சேர்ந்தே க்ரஹிக்கப்படுகிறது என்று சொல்லப்பட்டது. இந்த விஶேஷணம் அந்த வஸ்துவின் தர்மமாகவே இருக்கிறது. இதனை நையாயிகர்கள், அந்த வஸ்துவின் ஜாதியைக் காட்டிலும் வேறான பேதமாகக் கொண்டார்கள். உதாரணத்திற்கு ஒரு பசு மாட்டினை பார்க்கும் பொழுது அதன் ஜாதியான கோத்வம் (பசுவாயிருக்கும் தன்மை) என்பது விஶேஷணம். இதனை அவர்கள் வேறு பேதம் என்று கொள்கிறார்கள். அப்படிக் கொண்டால் அந்யோந்யாஶ்ரயணம், அநவஸ்தா என்கிற தோஷங்கள் வரும். எனவே அது கூடாது.

அந்யோந்யாஶ்ரயணம் – பசுமாட்டையும், வேறு ஒரு விலங்கு – ஆட்டினையும் எடுத்துக் கொள்வோம். இப்பொழுது அந்த விஶேஷணம் பேதம் என்று கொண்டால், அது ஆட்டில் இருந்து வேறுபட்டது என்று தெரிய ஆட்டின் விஶேஷணம் அறிய வேண்டும். ஆட்டின் விஶேஷணம் அறிய, அது மாட்டின் விஶேஷணத்தில் இருந்து வேறுபட்டது என்று அறிய மாட்டின் விஶேஷணம் அறிய வேண்டும். இப்பொழுது அறிந்து கொள்ள ஆரம்பித்ததே மாட்டின் விஶேஷணத்தைத் தான்!

அநவஸ்தா – ஆட்டின் விஶேஷணம் மாட்டைக் காட்டில் வேறாகில், அது மாட்டின் விஶேஷணத்தை காட்டிலும் வேறு என்றறிவதற்கு ஒரு பேதத்தையும், அதை மாட்டில் இருந்து வேறுபடுத்திக் காட ஒரு பேதத்தையும் கொள்ள வேண்டும். இது முடிவே இல்லாமல் போகும்

ननु “दशमस्त्वमसि” इत्येतदपि प्रत्यक्षं किं न् स्यादिति चेन्न; त्वमित्येतस्य प्रत्यक्षत्वेSपि दशमोषमित्येतस्य वाक्यजन्यत्वाट् । यदि दशमोषमित्येतस्य प्रत्यक्षविषयत्वं तर्हि धर्मवांस्त्वमित्येतस्यापि प्रत्यक्षत्वं स्यात् । अङ्गीकारोSतिप्रसङ्गात् । अत एव तत्वमसि इति वाक्यस्य नापरोक्षज्ञानजनकत्वम् ।

நநு தஶதத்வமஸி இத்யேததபி ப்ரத்யக்ஷம் கிம் நஸ்யாதிதி சேந்ந; த்வமிதேதஸ்ய ப்ரத்யக்ஷத்வேSபி தஶமோSஹமித்யேதஸ்ய வாக்யஜன்யத்வாத் | யதி தஶமோஹமித்யேதஸ்ய ப்ரத்யக்ஷவிஷயத்வம் தர்ஹி தர்மவாம்ஸ்த்வமித்யேத்ஸ்யாபி ப்ரத்யக்ஷத்வம் ஸ்யாத் | அங்கீகாரேSதிப்ரஸங்காத் | அத ஏவ தத்வமஸி இதி வாக்யஸ்ய நாபரோக்ஷஞானஜனகத்வம் ||

வாக்ய ஜன்ய ஜ்ஞானம் ப்ரத்யக்ஷம் என்று கூறும் அத்வைதிகள் பக்ஷத்தினைக் கண்டிக்கிறார். தன்னை மறந்த 10 மூடர்கள் கதை எனப்படும் – அதாவது ஒரு ஆற்றினை பத்துப் பேர் கடக்கிறார்கள். ஆற்றினை கடந்த பின்பு அனைவரும் கடந்து விட்டோமா என்று பார்ப்பதற்க்காக அனைவரையும் எண்ணுகிறார்கள். ஒவ்வொருவரும் தன்னை எண்ணாமல் மற்ற 9 பேர்களை எண்ணி, ஒருவனைக் காணவில்லை என்று துக்கிக்கும் பொழுது – ஒரு அறிவாளி அதனைப் பார்த்து – நீ தான் அந்த பத்தாவது நபர் என்று அறிவுரை கூறியவுடன். நாம் பத்துப் பேர்கள் என்கிற ஜ்ஞானம் வந்து மகிழ்ச்சியடைகிறார்கள்.

அதுபோன்று தன்னையொழிந்த பதார்த்தங்கள் அனைத்தும் மித்யை என்று தெரியாத ப்ரஹ்மமானது, ஒரு ஆசாரியன் “தத்வமஸி” என்று உபதேசம் பெற்றவுடன் அந்த மித்யை நீங்கி, மோக்ஷம் அடைகிறான் எனவும், தத்வமஸி என்னும் வாக்ய ஜன்ய ஜ்ஞானம் ப்ரத்யக்ஷம் என்றும் கூறுகிறார்கள்.

வாக்ய ஜன்ய ஜ்ஞானம் என்றுமே ப்ரத்யக்ஷம் ஆக முடியாது. அப்படிக் கொண்டால் ப்ரமாணத்தின் வரைமுறையே போய்விடும். தனது வருங்காலத்தை தெரிந்து கொள்வதில் ஆசையுடைய ஒருவன் ஒரு ஜோஸ்யனிடம் சென்று பார்க்கிறான். அந்த ஜோஸ்யன் அவனை நோக்கி “நீ தர்மவானாக இருக்கிறாய்” என்றால் – இவர்கள் கொள்கைப்படி – தர்மவான் என்பது ப்ரத்யக்ஷம் ஆகிவிடும்!

एतेन – प्रत्यक्षप्रमाकरणं प्रत्यक्षप्रमाणं । प्रमा चात्मचैतन्यमेव, चैतन्यं च त्रिविधम् – अन्तः करणावच्छिन्नचैतन्यम्, वृत्त्यवच्छिन्न चैतन्यं, विषयावच्छिन्न चैतन्यं चेति । यदा त्रयाणामैक्यं तदा साक्षात्कारः । सोSपि निर्विशेषविषय एव, अभेदमेव गृह्णाति-इत्यादि कुदृष्टिकल्पना निरस्ता । निर्विकल्पकं नाम जात्यादियोजनाहीनं वस्तुमात्रावगाहि किञ्चिदिदमिति ज्ञानमिति नैयायिकानां मतमपि निरस्तम् ।

ஏதேந ப்ரத்யக்ஷப்ரமாகரணம் ப்ரத்யக்ஷப்ரமாணம் | ப்ரமா சாத்மசைதன்யமேவ, சைதன்யம் ச த்ரிவிதம் – அந்த:கரணாவச்சிந்ந சைதன்யம், வ்ருத்த்யவச்சிந்ந சைதன்யம், விஷயாவச்சிந்ந சைதன்யம் சேதி | யதா த்ரயாணாமைக்யம் தா ஸாக்ஷாத்கார: | ஸோSபி நிர்விஶேஷவிஷய ஏவ, அபேதமேவ க்ருஹ்ணாதி-இத்யாதி குத்ருஷ்டிகல்பநா நிரஸ்தா | நிர்விகல்பகம் நாம ஜாத்யாதியோஜனாஹீனம் வஸ்துமாத்ராவகாஹி கிஞ்சிதிதமிதி ஞானமிதி நையாயிகாநாம் மதமபி நிரஸ்தம் |

இனி அத்வைதிகள், ப்ரமையாவது ஆத்மசைதந்யமாகும். அதுவும் மூன்று வகைப்படும்.
1) அந்த:கரணத்தோடு சேர்ந்த சைதந்யம்,
2) செயல்படும் சைதந்யம்,
3) விஷயத்தோடு சேர்ந்த சைதந்யம்

எப்போது இந்த மூன்றும் ஒன்று சேருகின்றதோ, அப்போது ஸாக்ஷாத்காரம் உண்டாகிறது. அவ்வறிவும் பேதமின்மையே காட்டுகிறது. அதற்கு விஷயம் நிர்விஶேஷ ஜ்ஞானமாத்திரமான ப்ரஹ்மமேயாகும். என்பது அவர்கள் பக்ஷமாகும்.  இவையனைத்தும் ப்ரமாணத்திற்கு விருத்தமாகயாலே பொருந்தாது.

இவ்விடத்தில், ப்ரமாண விருத்தம் என்றதற்கு

  • इन्द्रियाणां हि चरतां यन्मनोSनुविधीयते ।
    तदस्य हरति प्रज्ञां वायुर्नावमिवाम्भसि ॥ (गी – 2-67) [இந்த்ரியாணாம் ஹி சரதாம் யந்மநோSநுவிதீயதே – ததஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர்நாவமிவாம்பஸி] விஷயங்களில் ஈடுபடும் இந்த்ரியங்களை எந்த மனமானது பின்பற்றும்படி செய்யப்படுகிறதோ, அந்த மனம்  (சைதந்ய திரிவிதமோ அந்த:கரணமோ இங்கு அருளவில்லை என்பது )- என்கிற பகவத் கீதா வாக்யமும்,
  • ஸ்ரீ பாஷ்ய ஜிஜ்ஞாஸாதிகரணத்தில் மஹா ஸித்தாந்தத்தில் ஸ்வாமி பாஷ்யகாரர் ஸ்ரீஸுக்திகளையும்

திருவுள்ளம் பற்றி ப்ரமாணத்திற்கு விருத்தம் என்று அருளுகிறார்.

  • ஆத்மா வஸ்துக்களை க்ரஹிக்கிற விதம் கீழேயே அருளப்பட்டது.

இனி நையாகிகர்கள் (தார்க்கிகர்கள்) பக்ஷம் விலக்கப்படுகிறது. அவர்கள் பக்ஷத்தில் “நிர்விகல்பக ப்ரத்யக்ஷம் என்பது ஜாதி (ஜாதி என்றால் பசு மாடுகள் அனைத்தும் ஒரு ஜாதி, ஆடுகள் அனைத்தும் ஒரு ஜாதி என்பன போன்று) முதலான விசேஷணங்கள் இல்லாமல் வஸ்து மாத்திரத்தைத் தெரிவிக்கிறது” என்பதாகும். அதுவும் தள்ளப்பட்டது. நிர்விகல்பக/ஸவிகல்பக ஞானங்கள் கீழே விளக்கப்பட்டது காண்க.

ननु “काणादं पाणिनीयञ्च सर्वशास्त्रोपकारत्वकम्” इत्युक्त्वात् कथं गौतममतनिरास इति चेत्; उच्यते – नास्माभिः कार्त्स्न्येनास्य मतस्य निरासः क्रियते, यावदिह यावदिह युक्तियुक्तं, तावत् स्वीक्रियते; परकल्पिततटाकोपजीवनवत् । न खलु तटाकस्थः पङ्कोSपि स्वीक्रीयते । अतः परमाणुकारणत्वं, वेदपौरुषेयत्वं, ईश्वरानुमानिकत्वं, जीवविभुत्वं, सामान्यविशेषसमावायानां पदार्थत्वेन स्वीकारः, उपमानादेः प्रमाणात्वकल्पनम्, संङ्ख्यापरिमाणपृथक्त्व परत्वापरत्वगुरुत्वद्रवत्वादीनां पृथग्गुणत्व कल्पनम्, दिशोSपि द्रव्यत्वकल्पनम् इत्यादिसूत्रकारादिविरुध्दा प्रक्रिया नास्माभिः स्वीक्रियते । अविरुध्दानि स्वीक्रियन्ते इति विरोधः ।

நநு “காணாதம் பானிணீயஞ்ச ஸர்வஸாஸ்த்ரோபகாரத்வகம்” இத்யுக்த்வாத் கதம் கௌதமமதநிராஸ இதி சேத்; உச்யதே – நாஸ்மாபி: கார்த்ஸ்ன்யேனாஸ்ய மதஸ்ய நிராஸ: க்ரியதே, யாவதிஹ யுக்தியுக்தம், தாவத் ஸ்வீக்ரீயதே; பரகல்பிததடாகோபஜீவனவத் | ந கலு தடாகஸ்த: பங்கோSபி ஸ்வீக்ரீயதே | அத: பரமாணுகாரணத்வம், வேதபௌருஷேயத்வம், ஈஶ்வரானுமானிகத்வம், ஜீவவிபுத்வம், ஸாமான்யவிசேஷஸமாவாயானாம் பதார்தத்வேன ஸ்வீகார:, உபமானாதே: ப்ரமாணாத்வகல்பனம், ஸங்க்யாபரிமாநப்ருதக்த்வ பரத்வாபரத்வகுருத்வத்ரவத்வாதீனாம் ப்ருதக்குணத்வ கல்பனம், திஶோSபி த்ரவ்யத்வகல்பனம் இத்யாதிஸூத்ரகாராதிவிருத்தா ப்ரக்ரியா நாஸ்மாBஹி: ஸ்வீக்ரியதே | அவிருத்தானி ஸ்வீக்ரியந்தே இதி விரோத: |

காணாதரால் ப்ரவர்த்திப்பிக்கப்பட்ட தர்க்கமும், பாணினியை முதல்வராகக் கொண்ட வையாகரண மதமும் எல்லா ஶாஸ்த்ரங்களுக்கும் உபகாரம் செய்கின்றன என்று சொல்லி இருக்க – அம் மதங்களைத் தள்ளலாமா என்று கேள்வியை அனுவாதம் (அனுமதித்து) செய்து, அதற்கு உத்தரம் அருளுகிறார்.

வேதவிருத்தமான விஷயங்கள் அம்மதங்களில் இருப்பதினால் வைதிகர்கள் அம்மதங்களைக் கொள்ளமாட்டார்கள். அவைகளாவன,

  1. ஸாமான்யம், விசேஷம், ஸமவாயம் என்று பொருட்களைக் கற்பிப்பது,
  2. ஸங்க்யை, பரிமாணம், ப்ருதக்த்வம், பரத்வம், அபரத்வம், குருத்வம், த்ரவத்வம் – என்ற ஏழும் தனிக்குணங்கள்
  3. வேதம் பரமபுருஷனால் செய்யப்பட்டது
  4. பரமாணுக்கள் ஜகத் காரணம் என்பது
  5. ஜீவனை விபு என்பது
  6. உபமானம் முதலானவற்றை தனிப் ப்ரமாணம் என்பது
  7. திக்கை தனி த்ரவ்யமாகக் கொள்வது

முதலான கொள்கைகளால் வேத விருத்தமானவற்றை ஆதரிப்பதால், வைதிகர்கள் அவற்றைக் கைக்கொள்ளார்கள். குளத்தில் இருந்து நீர் எடுத்துக் கொள்ளத் தக்கதாயிருந்தாலும், அதில் உள்ள சேறு உபயோகப்படாதாப் போலே, அவர்கள் மதத்தில் உள்ள வேத விருத்தமில்லாதவற்றைக் கைகொள்ளலாம் என்பதே “ஸர்வஶாஸ்த்ரோபகாரகம்” என்பதின் விஷயமாகும்.

அடியேன் ஸுதர்சன ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment