ஆழ்வார்திருநகரி வைபவம் – ஸந்நிதிகள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஆழ்வார்திருநகரி வைபவம்

<< மணவாள மாமுனிகள் சரித்ரமும் வைபவமும்

ஆழ்வார்திருநகரியில் ப்ரதக்ஷிணமாக ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயிலுக்குள் இருக்கும் ஸந்நிதிகளையும், வெளியில் அமைந்திருக்கும் ஸந்நிதிகளையும், மடங்களையும், திருமாளிகைகளையும் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

முதலில் ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில் ஸந்நிதிகள்.

  1. பெரிய பெருமாள் ஸந்நிதி – ஸ்ரீதேவி பூமிதேவி ஸமேத ஆதிநாதப் பெருமாள் – மூலவர். ஆதி நாயிகா, குருகூர் நாயிகா, ஸ்ரீதேவி, பூமிதேவி, நீளா தேவி ஸமேத பொலிந்து நின்ற பிரான் – உத்ஸவர், நவபேரர்கள்.
  2. த்வாரபாலர்கள், அனந்த கருட விஷ்வக்ஸேனர்கள்
  3. பொன் ஈன்ற பிரான் ஸந்நிதி
  4. ஸ்ரீ ராமர், கண்ணன் ஸந்நிதி
  5. ஸந்நிதி கருடன்
  6. ருக்மிணி ஸத்யபாமா ஸமேத ஸ்ரீவேணுகோபாலன் ஸந்நிதி
  7. ஞானப்பிரான் ஸந்நிதி – பூமிப்பிராட்டி ஸமேத வராஹப் பெருமாள் (ஸந்நிதி கருடனுடன்)
  8. ஆதி நாச்சியார் ஸந்நிதி
  9. பரமபதநாதன் ஸந்நிதி
  10. சக்கரத்தாழ்வார் ஸந்நிதி
  11. தசாவதார ஸந்நிதி
  12. குருகா நாச்சியார் ஸந்நிதி
  13. திருப்புளியாழ்வார் ஸந்நிதி (ஆழ்வார் வாழ்ந்த புளிய மரம்)
  14. ஸ்ரீமந்நாதமுனி ஸந்நிதி
  15. பன்னிரு ஆழ்வார்கள் ஸந்நிதி
  16. நரஸிம்ஹப் பெருமாள் ஸந்நிதி
  17. திருவேங்கடமுடையான் ஸந்நிதி
  18. நம்மாழ்வார் ஸந்நிதி (த்வஜ ஸ்தம்பத்துடன்)
  19. திருவடி (ஆஞ்சனேயர் ஸந்நிதி)
  20. க்ருஷ்ணன் ஸந்நிதி (யானைச் சாலை)
  21. பக்ஷிராஜர் ஸந்நிதி

ஏனைய ஸந்நிதிகள்

  1. தெற்குத் திருவேங்கடமுடையான் ஸந்நிதி (தெற்கு மாட வீதி)
  2. ஸ்ரீரங்கநாதர் ஸந்நிதி (தெற்கு மாட வீதி)
  3. பிள்ளை லோகாசார்யர் ஸந்நிதி (வடக்கு மாட வீதி)
  4. அழகர்/ஸ்ரீராமர் ஸந்நிதி (வடக்கு மாட வீதி)
  5. வேதாந்த தேசிகன் ஸந்நிதி (வடக்கு மாட வீதி)
  6. ஆண்டாள் ஸந்நிதி (வடக்கு மாட வீதி)
  7. மணவாள மாமுனிகள் ஸந்நிதி (வடக்கு மாட வீதி)
  8. கூரத்தாழ்வான்/பட்டர் ஸந்நிதி (ராமானுஜ சதுர்வேதி மங்கலம்)
  9. திருக்கச்சி நம்பி ஸந்நிதி (ராமானுஜ சதுர்வேதி மங்கலம்)
  10. உய்யக்கொண்டார்/திருவாய்மொழிப் பிள்ளை ஸந்நிதி (ராமானுஜ சதுர்வேதி மங்கலம்)
  11. பெரிய நம்பி ஸந்நிதி (ராமானுஜ சதுர்வேதி மங்கலம்)
  12. எம்பெருமானார்/உடையவர் ஸந்நிதி (ராமானுஜ சதுர்வேதி மங்கலம்)
  13. க்ருஷ்ணன் ஸந்நிதி (ராமானுஜ சதுர்வேதி மங்கலம்)
  14. சிங்கப் பெருமாள் ஸந்நிதி (திருச்சங்கணி துறை – தீர்த்தவாரி மண்டபம் – வடக்கு ரத வீதி)
  15. நம்பிள்ளை ஸந்நிதி (வடக்கு ரத வீதி)
  16. வடக்குத் திருவேங்கடமுடையான் ஸந்நிதி (வடக்கு ரத வீதி)
  17. ஸ்ரீராமர் ஸந்நிதி (பராங்குச/நாயக்கர் மண்டபம்)
  18. அப்பன் கோயில் (திருவேங்கடமுடையான் ஸந்நிதி – ஆழ்வார் அவதாரஸ்தலம்)

ஸ்ரீ மடங்கள்

  1. ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் மடம் (ராமானுஜ சதுர்வேதி மங்கலம்)
  2. ஸ்ரீ வானமாமலை மடம் (வடக்கு ரத வீதி)
  3. ஸ்ரீ திருக்குறுங்குடி மடம் (வடக்கு ரத வீதி)
  4. ஸ்ரீ அஹோபில மடம் (ராமானுஜ சதுர்வேதி மங்கலம்)

ஆச்ரமங்கள்/ஸ்ரீவைஷ்ணவ ஸ்தாபனங்கள்

  1. ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமம் (வடக்கு ரத வீதி)
  2. உத்ராதி மடம் (தெற்கு ரத வீதி)

திருமாளிகைகள்/ஆசார்ய புருஷர்கள்

  1. அரையர் திருமாளிகை (ஸ்ரீமந்நாதமுனி திருவம்சம்) (கிழக்கு மாட வீதி)
  2. அண்ணாவியார் திருமாளிகைகள் (மதுரகவி ஆழ்வார் திருவம்சம்) (தெற்கு மாட வீதி)
  3. திருவாய்மொழிப் பிள்ளை திருமாளிகைகள் (ராமானுஜ சதுர்வேதி மங்கலம்)
  4. ஆத்தான் திருமாளிகைகள் (முடும்பை நம்பி திருவம்சம்) (வடக்கு ரத வீதி)
  5. கற்குளம் திருமாளிகை (கொமாண்டூர் இளையவில்லி ஆச்சான் திருவம்சம்) (வடக்கு ரத வீதி)

இன்றளவும் பல ஆசார்ய புருஷர்கள் இங்கே நித்யவாஸம் செய்துகொண்டு கைங்கர்யங்களைச் செய்து வருகின்றனர். மேலும் பல தீர்த்தகாரர்கள், ஸ்தலத்தார்கள் இங்கே இன்றளவும் விடாமல் கைங்கர்யம் செய்து வருகின்றனர். உத்ஸவ ஸமயங்களில் பல ஜீயர் ஸ்வாமிகள் இங்கே எழுந்தருளி மங்களாசாஸனம் செய்வார்கள்.

அடுத்த பகுதியில் இங்கு நடக்கக் கூடிய உத்ஸவங்களைப் பற்றி அனுபவிக்கலாம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment