ஆழ்வார்திருநகரி வைபவம் – உத்ஸவங்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஆழ்வார்திருநகரி வைபவம்

<< ஸந்நிதிகள்

120188497.0p9mnWFF

தினமும் ஆழ்வாருக்குத் தாமிரபரணி தீர்த்தம் எழுந்தருளப்பண்ணிக் கொண்டு வந்து திருமஞ்சனம் நடக்கும். பெருமாள், தாயார்கள், ஆழ்வார், ஆசார்யர்கள் ஆகியோர் ஆண்டு முழுவதும் பல உத்ஸவங்களை அனுபவிக்கிறார்கள்.

மாதந்தோறும் நடக்கும் புறப்பாடுகள்

  1. அமாவாஸ்யை – பெருமாள்
  2. ஏகாதசி – பெருமாள் மற்றும் தாயார்
  3. த்வாதசி – ஆழ்வார்
  4. பௌர்ணமி – ஆழ்வார்
  5. வெள்ளிக்கிழமை – பெருமாள் மற்றும் தாயார்கள்
  6. ரோஹிணி – கண்ணன்
  7. புனர்பூசம் – ஸ்ரீராமர்
  8. உத்ரம் – பெருமாள் மற்றும் ஆழ்வார்
  9. திருவிசாகம் – பெருமாள் மற்றும் ஆழ்வார்
  10. திருவோணம் – பெருமாள்

4000 திவ்யப்ரபந்த ஸேவாகால க்ரமம்

ஆழ்வார் ஸந்நிதியில் மாதந்தோறும் 4000 திவ்யப்ரபந்த ஸேவாகால க்ரமம் அந்தந்த ஆழ்வார்களின் திருநக்ஷத்ரத்தன்று அவரவர்கள் ப்ரபந்தம் சாற்றுமறை ஆகும் க்ரமத்தில் அமைக்கப்பட்டுள்ளது:

  • ரோஹிணி – அமலனாதிபிரான்
  • ம்ருகசீர்ஷம் –
  • திருவாதிரை – இராமானுச நூற்றந்தாதி
  • புனர்பூசம் – பெருமாள் திருமொழி, திருவாய்மொழி 1ஆம் பத்து
  • பூசம் – திருவாய்மொழி 2ஆம் பத்து
  • ஆயில்யம் – நான்முகன் திருவந்தாதி, திருவாய்மொழி 3ஆம் பத்து
  • மகம் – திருச்சந்தவிருத்தம், திருவாய்மொழி 4ஆம் பத்து
  • பூரம் – நாச்சியார் திருமொழி, திருவாய்மொழி 5ஆம் பத்து
  • உத்ரம் – திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி 1ஆம் பத்து, திருவாய்மொழி 6ஆம் பத்து
  • ஹஸ்தம் – பெரியாழ்வார் திருமொழி 2ஆம் பத்து, திருவாய்மொழி 7ஆம் பத்து
  • சித்திரை – பெரியாழ்வார் திருமொழி 3ஆம் பத்து, திருவாய்மொழி 8ஆம் பத்து
  • ஸ்வாதி – பெரியாழ்வார் திருமொழி 4ஆம் மற்றும் 5ஆம் பத்துக்கள், திருவாய்மொழி 9ஆம் பத்து
  • திருவிசாகம் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி 10ஆம் பத்து
  • அனுஷம் –
  • கேட்டை – திருமாலை, திருப்பள்ளியெழுச்சி
  • திருமூலம் – உபதேசரத்தினமாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி
  • பூராடம் – பெரிய திருமொழி 1ஆம் பத்து
  • உத்ராடம் – பெரிய திருமொழி 2ஆம் பத்து
  • திருவோணம் – பெரிய திருமொழி 3ஆம் பத்து, முதல் திருவந்தாதி
  • அவிட்டம் – பெரிய திருமொழி 4ஆம் பத்து, இரண்டாம் திருவந்தாதி
  • சதயம் – பெரிய திருமொழி 5ஆம் பத்து, மூன்றாம் திருவந்தாதி
  • பூரட்டாதி – பெரிய திருமொழி 6ஆம் பத்து
  • உத்ரட்டாதி – பெரிய திருமொழி 7ஆம் பத்து
  • ரேவதி – பெரிய திருமொழி 8ஆம் பத்து
  • அஸ்வினி – பெரிய திருமொழி 9ஆம் பத்து, திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல்
  • பரணி – பெரிய திருமொழி 10ஆம் பத்து, பெரிய திருமடல்
  • கார்த்திகை – பெரிய திருமொழி 11ஆம் பத்து, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம்

குறிப்பு

  • நித்யப்படி ஸேவாகாலம் –
    • பெருமாள் ஸந்நிதியில் – இரவு – திருப்பல்லாண்டு, சென்னியோங்கு முதலியவை
    • ஆழ்வார் ஸந்நிதியில் – காலை – தினமும் கண்ணிநுண்சிறுத்தாம்பு, திருப்பாவை முதலில் ஸேவிக்கப்படும். பிறகு அந்தந்த நக்ஷத்ரத்துக்கான பாசுரங்கள்.
    • ஆழ்வார் ஸந்நிதியில் – இரவு – கண்ணிநுண்சிறுத்தாம்பு, ஏழை ஏதலன், ஆழியெழ .
  • அநத்யயன காலத்தில் நித்யப்படியில்
    • பெருமாள் ஸந்நிதியில் – 4000 தனியன்கள்
    • ஆழ்வார் ஸந்நிதியில் – காலை – உபதேசரத்தினமாலை, இரவு – திருவாய்மொழி நூற்றந்தாதி
  • தனுர் மாஸம் பெருமாள் மற்றும் ஆழ்வார் ஸந்நிதிகளில் தனித்தனியே திருப்பள்ளியெழுச்சி மற்றும் திருப்பாவை .

உத்ஸவங்கள்

சித்திரை

  • பெருமாள் ப்ரஹ்மோத்ஸவம் – 10 நாட்கள் – சித்திரைத் திருவாதிரை அன்று இரவு புறப்பாட்டில் எம்பெருமானாருக்கு எதிர் ஸேவை. சித்திரைப் புனர்பூசம் அன்று இரவு இராமர் மாடவீதிப் புறப்பாடு. 9ஆம் நாள் – சித்திரைத் திருத்தேர். 10ஆம் நாள் – சித்திரை உத்ரம் – மிக்க ஆதிப்பிரான் தீர்த்தவாரி .
  • மதுரகவி ஆழ்வார் திருநக்ஷத்ரம் – சித்திரை சித்திரை
  • எம்பெருமானார் திருவவதார உத்ஸவம் – 11 நாட்கள் – 10ஆம் நாள் திருவாதிரை (பவிஷ்யதாசார்யன் ஸந்நிதி). உடையவர் ஆதிநாதர்/ஆழ்வார் திருக்கோயிலுக்கு எழுந்தருளி மங்களாசாஸனம்.
  • சித்ரா பௌர்ணமி – 2 நாட்கள் – பௌர்ணமி – பெருமாள் புறப்பாடு, ப்ரதமை – ஆழ்வார் எல்லைக்கல் புறப்பாடு
  • ஸ்ரீவைகுண்டம் பெருமாள் ப்ரஹ்மோத்ஸவம் 5ஆம் நாள் – பொலிந்து நின்ற பிரான், ஆழ்வார் ஸ்ரீவைகுண்டம் புறப்பாடு

வைகாசி

  • நம்மாழ்வார் திருவவதார உத்ஸவம் – 10 நாட்கள் – 5ஆம் நாள் நவதிருப்பதிப் பெருமாள்கள் கருட ஸேவை, நம்மாழ்வார் ஹம்ஸ வாஹனம், மதுரகவி ஆழ்வார் பரங்கி நாற்காலி. 7ஆம் நாள் ஆழ்வார் எம்பெருமானார் சேர்த்தி திருமஞ்சனம் (பவிஷ்யதாசார்யன் ஸந்நிதியில்). 8ஆம் நாள் – அப்பன் கோயிலில் (அவதார ஸ்தலம்) தவழ்ந்த க்ருஷ்ணன் திருக்கோலம். 9ஆம் நாள் – வைகாசித் திருத்தேர். 10ஆம் நாள் – வைகாசித் திருவிசாகம் ஆழ்வார் ஸ்வயம் திருமேனி தீர்த்தவாரி. தொடர்ந்து 5 நாட்கள் விடாயாற்றி.
  • வைகாசி உத்ரட்டாதி – வருஷாபிஷேகம்.

ஆனி

  • முதல் நாள் – முப்பழம் (கோடை பூர்த்தி)
  • வஸந்தோத்ஸவம் – 10 நாட்கள் – ஆனி உத்ரம் சாற்றுமறை
  • ஆனி ஸ்வாதி – பெரியாழ்வார்
  • ஆனி அனுஷம் – ஸ்ரீமந் நாதமுனிகள்
  • ஆனி கேட்டை – ஜ்யேஷ்டாபிஷேகம் – ஏழு திரைகள் போட்டு நடக்கும்.
  • ஆனி திருமூலம் – திருப்புளியாழ்வார் திருநக்ஷத்ரம்.

ஆடி

  • திருவாடிப்பூரம் – குருகூர் நாச்சியார் உடையவர் கோயில் எழுந்தருளுதல்
  • பக்ஷிராஜர் உத்ஸவம் – 10 நாட்கள் – சாற்றுமறை ஆடி ஸ்வாதி
  • ஆடி உத்ராடம் – அழகர்

ஆவணி

  • திருப்பவித்ரோத்ஸவம் – 9 நாட்கள் – ஆவணி சுக்ல பக்ஷ ஏகாதசி தொடக்கம். 9ஆம் நாள் மிக்க ஆதிப்பிரான் தீர்த்தவாரி
  • ஸ்ரீபாஞ்சராத்ர ஸ்ரீஜயந்தி – புராண படனம், கண்ணன் உள் புறப்பாடு, மறுநாள் – உரியடி – பெருமாள் தாயார் ஆழ்வார் கண்ணன் வீதிப்புறப்பாடு
  • திருக்கோளூர் வைத்தமாநிதிப் பெருமாள் ப்ரஹ்மோத்ஸவம் – 9ஆம் நாள் – ஆழ்வார் திருக்கோளூர் புறப்பாடு – தேர்க்கடாக்ஷம்

புரட்டாசி

  • நவராத்ரி உத்ஸவம் – 9 நாட்கள்
  • விஜய தசமி – பரிவேட்டை
  • புரட்டாசி திருவோணம் – ஞானப்பிரான், திருவேங்கடமுடையான்
  • புரட்டாசி திருவோணம் – வேதாந்தாசார்யர் – ஆதிநாதர்/ஆழ்வார் திருக்கோயிலுக்கு எழுந்தருளி மங்களாசாஸனம்

ஐப்பசி

  • முதல் நாள் – வெந்நீர்க்காப்பு தொடக்கம்
  • ஊஞ்சல் உத்ஸவம் – 10 நாட்கள் – ஐப்பசி உத்ரம் சாற்றுமறை
  • மணவாள மாமுனிகள் உத்ஸவம் – 12 நாட்கள் – ஐப்பசி திருமூலம் அன்று ஆதிநாதர்/ஆழ்வார் திருக்கோயிலுக்கு ஆழ்வாருடைய பல்லக்கில் எழுந்தருளி மங்களாசாஸனம்
  • ஐப்பசி பூராடம் – ஸேனை முதலியார்
  • ஐப்பசி திருவோணம் – பொய்கை ஆழ்வார்
  • பிள்ளை லோகாசார்யர் – 11 நாட்கள் – ஐப்பசி திருவோணம் அன்று ஆதிநாதர்/ஆழ்வார் திருக்கோயிலுக்கு எழுந்தருளி மங்களாசாஸனம்
  • ஐப்பசி அவிட்டம் – பூதத்தாழ்வார்
  • ஐப்பசி சதயம் – பேயாழ்வார்
  • தீபாவளி – ஆழ்வார் ஆசார்யர்கள்,  ஆதிநாதர்/ஆழ்வார் திருக்கோயிலுக்கு எழுந்தருளல்

கார்த்திகை

  • கார்த்திகை கார்த்திகை – திருமங்கை ஆழ்வார்
  • கார்த்திகை ரோஹிணி – திருப்பாணாழ்வார்
  • ஸ்ரீபாஞ்சராத்ர திருக்கார்த்திகை தீபம் – சொர்க்கப்பனை, திருத்தொண்டைக்கு எண்ணெய் சாற்றுதல். மறுநாள் தொடங்கி அநத்யயன காலம்.
  • சுக்ல பக்ஷ ஏகாதசி – கைசிக ஏகாதசி – ஆழ்வார் ஆசார்யர்கள்,  ஆதிநாதர்/ஆழ்வார் திருக்கோயிலுக்கு எழுந்தருளல்
  • கைசிக த்வாதசி – கைசிக புராணம் வாசித்தல், அண்ணவியார் ப்ரஹ்மரதம். பெருமாள் கருடஸேவை, ஆழ்வார் ஹம்ஸ வாஹனம்

மார்கழி

  • மாஸப் பிறப்பு – திருப்பள்ளியெழுச்சி தொடக்கம். தனுர் மாஸ க்ரமம்.
  • அமாவாசைக்கு மறுநாள் தொடக்கம் (பிச்சத்திலும் ஆரம்பிக்கும்) – திருவத்யயன உத்ஸவம் தொடக்கம். 21 நாட்கள். திருவத்யயன உத்ஸவம் பகல் பத்து 9 அல்லது 10 அல்லது 11 நாட்கள் வரும்.  பகல் பத்தில் – தினமும் இரவு ஆழ்வாருக்கு இரண்டு திருக்கோலம், தசமி அன்று – ஆழ்வார் சயனம், எம்பெருமானாருக்கு நாச்சியார் திருக்கோலம்.
  • சுக்ல பக்ஷ ஏகாதசி – வைகுண்ட ஏகாதசி. பொலிந்து நின்ற பிரான் சயனம் – திருவாய்மொழித் திருநாள் நியமனம் கேட்டல்
  • இராப்பத்தில் – தினமும் திருமுடி ஸேவை. திருவாதிரை அன்று ஆழ்வார் எம்பெருமானார் சேர்த்தி திருமஞ்சனம், 8ஆம் நாள் திருவேடுபறி. 10ஆம் நாள் நம்மாழ்வார் மோக்ஷம், 11ஆம் நாள் வீடு விடை திருமஞ்சனம்.
  • அடுத்து வரும் முதல் திருவிசாகம் – அநத்யயன காலம் முடிவு
  • மார்கழி கேட்டை – தொண்டரடிப்பொடி ஆழ்வார்

தை

  • சங்கராந்தி – வங்கக் கடல் – திருப்பள்ளியெழுச்சி சாற்றுமறை
  • கனு – தாயார்கள் தீர்த்தவாரி
  • தை மகம் – திருமழிசை ஆழ்வார்
  • தை ஹஸ்தம் – கூரத்தாழ்வான் ஆதிநாதர்/ஆழ்வார் திருக்கோயிலுக்கு எழுந்தருளி மங்களாசாஸனம்

மாசி

  • மாசி உத்ஸவம் முதல் நாள் – வெந்நீர்க்காப்பு முடிவு
  • ப்லவோத்ஸவம் (தெப்போத்ஸவம்) – ஆழ்வார் திருமேனி ப்ரதிஷ்டோத்ஸவம் – 13 நாட்கள் – 7ஆம் நாள் ஆழ்வார் எம்பெருமானார் சேர்த்தி திருமஞ்சனம் (பவிஷ்யதாசார்யன் ஸந்நிதியில்), 9ஆம் நாள் – மாசித் திருத்தேர், 10 (பெருமாள்) மற்றும் 11ஆம் (ஆழ்வார்/ஆசார்யர்கள்) நாட்கள் தெப்போத்ஸவம், 12ஆம் நாள் மாசித் திருவிசாகம் – ஆழ்வார் ஸ்வயம் திருமேனி தீர்த்தவாரி, 13ஆம் நாள் ஆழ்வார் திருத்தொலைவில்லிமங்கலம் எழுந்தருளி சாற்றுமறை – திருத்தொலைவில்லிமங்கலம் அத்யயன உத்ஸவம் சாற்றுமறை.
  • குலசேகராழ்வார் – மாசிப் புனர்பூசம்
  • திருக்கச்சி நம்பி – மாசி ம்ருகஸீர்ஷம். பவிஷ்யதாசார்யன் ஸந்நிதியிலிருந்து திருக்கச்சி நம்பி ஆதிநாதர்/ஆழ்வார் திருக்கோயிலுக்கு எழுந்தருளி மங்களாசாஸனம்

பங்குனி

  • பெருமாள் ப்ரஹ்மோத்ஸவம் – 10 நாட்கள் – 9ஆம் நாள் – பங்குனித் திருத்தேர், 10ஆம் நாள் – பங்குனி உத்ரம் – மிக்க ஆதிப்பிரான் தீர்த்தவாரி
  • பங்குனி உத்ரம் – ஆதி நாச்சியார் உடையவர் கோயில் எழுந்தருளுதல்
  • யுகாதி – ஆழ்வார் ஆசார்யர்கள்,  ஆதிநாதர்/ஆழ்வார் திருக்கோயிலுக்கு எழுந்தருளல். புதுப் பஞ்சாங்கம் வாசித்தல்.

குறிப்பு

  • பொதுவாக இங்கு முக்ய உத்ஸவங்களில் 5ஆம் நாள் பெருமாள் கருட ஸேவை, ஆழ்வார் ஹம்ஸ வாஹனம்.
  • நான்கு உத்ஸவங்களிலும் கொடியேற்றம்
  • நான்கு உத்ஸவங்களிலும் (தனித்தனி) திருத்தேர்
  • ஆதிநாதர்/ஆழ்வார் திருக்கோயிலில் யாருக்குத் தீர்த்தவாரி நடந்தாலும் பவிஷ்யதாசார்யன் ஸந்நிதியில் எழுந்தருளி திருமண்காப்பு

ஆதாரம் – காரிமாறன் கலைக் காப்பகம் – நாட்குறிப்பு

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment