4000 திவ்ய ப்ரபந்தம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீமந் நாராயணன் இவ்வுலகில் குறிப்பிட்ட சில ஆத்மாக்களைத் தேர்ந்தெடுத்து தன் விஷயத்தில் மயர்வற மதிநலம் அருளி அவர்களை ஆழ்வார்கள் ஆக்கினான்.

ஆழ்வார்கள் ஸ்ரீமன் நாராயணனின் திவ்ய கல்யாண குணங்களைத் தீந்தமிழில் பாடினர். இவை சுமார் நான்காயிரம் பாசுரங்களாகும். இப்பாசுரங்களின் தொகுப்பே நாலாயிர திவ்யப் ப்ரபந்தம் எனப் போற்றப்படுகிறது. திவ்யம் எனில் தெய்வீகத் தன்மை பொருந்தியது, ப்ரபந்தம் எனில் இலக்கியம். ஆக எம்பெருமானின் திவ்ய குணங்களைப் பாடுவது திவ்யப்ரபந்தம். இவை எம்பெருமான் எழுந்தருளியுள்ள 108 திவ்ய தேசங்களைப் பாடுகின்றன. பாடியவர்கள் திவ்ய சூரிகள், பாட்டு திவ்ய ப்ரபந்தம், பாடப்பெற்ற திருவரங்கம் திருமலை காஞ்சீபுரம், திருவல்லிக்கேணி, ஆழ்வார் திருநகரி போன்ற தலங்கள் திவ்ய தேசங்கள். இவற்றில் ராம க்ருஷ்ணாத்யவதாரப் பெருமைகளும், பரம பதத்தில் உள்ள பரத்வப் பெருமையும், க்ஷீராப்தியிலுள்ள வ்யூஹப் பெருமையும் அவரவர் உள்ளே அந்தராத்மாவாய் இருந்து ரக்ஷிக்கும் அந்தர்யாமிப் பெருமையும் சேர்த்தே பாடப் பெற்றுள்ளன. இவற்றில் எல்லாவற்றையும்விட நம் கண் காண வந்து நம்மை ரக்ஷிக்கும் திவ்ய தேசத்து அர்ச்சா விக்ரஹங்களே நம் ஆழ்வார்களுக்குப் பெருவிருந்தானது, அதுவே நம் ஆசார்யர்களின் உயிர்நாடியாயும் இருந்தது.

திவ்ய ப்ரபந்தம் வேத/வேதாந்தச் செம்பொருளை எளிய இனிய தீந்தமிழில் நமக்குக் கொடுக்கிறது. ஆழ்வார்கள் இவற்றை அருளிச் செய்த பல நூற்றாண்டுகளுக்குப் பின், ஸ்ரீமன் நாதமுனிகள் தொடக்கமாக மணவாள மாமுனிகள் ஈறான நம் ஆசார்யர்கள் இவற்றில் தோய்ந்தும் ஆய்ந்தும் ஸ்ரீமன் நாராயணனின் பரத்வத்தையும் ரக்ஷகத்வத்தையும் நமக்கு மிகத் தெளிவாகக் காட்ட இவைபோன்று வேறில்லை என்று அறுதியிட்டு நமக்காக இவற்றை ப்ரசாரம் செய்தும் வ்யாக்யானித்தும் நமக்குப் பேருபகாரம் செய்தனர். அவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதையும் திவ்யப்ரபந்தங்களை அவற்றின் அர்த்தங்களோடு கற்பது மற்றும் கற்பிப்பதிலேயே செலவிட்டனர்.

ப்ரபந்தம் இயற்றியவர் எண்ணிக்கை 
முதலாயிரம்
திருப்பல்லாண்டு

பெரியாழ்வார்

12
பெரியாழ்வார் திருமொழி

பெரியாழ்வார்

461
திருப்பாவை ஆண்டாள் 30
நாச்சியார் திருமொழி ஆண்டாள் 143
கண்ணிநுண் சிறுத்தாம்பு மதுரகவியாழ்வார் 11
பெருமாள் திருமொழி குலசேகராழ்வார் 105
திருச்சந்த விருத்தம் திருமழிசைப்பிரான் 120
திருமாலை தொண்டரடிப்பொடி

ஆழ்வார்

45
திருப்பள்ளியெழுச்சி தொண்டரடிப்பொடி

ஆழ்வார்

10
அமலனாதிபிரான் திருப்பாணாழ்வார் 10
இரண்டாமாயிரம்
பெரிய திருமொழி திருமங்கையாழ்வார் 1084
திருக்குறுந்தாண்டகம் திருமங்கையாழ்வார் 20
திருநெடுந்தாண்டகம் திருமங்கையாழ்வார் 30
இயற்பா
முதல் திருவந்தாதி பொய்கையாழ்வார் 100
இரண்டாம் திருவந்தாதி பூதத்தாழ்வார் 100
மூன்றாம் திருவந்தாதி பேயாழ்வார் 100
நான்முகன் திருவந்தாதி திருமழிசைப்பிரான் 96
திருவிருத்தம் நம்மாழ்வார் 100
திருவாசிரியம் நம்மாழ்வார் 7
பெரிய திருவந்தாதி நம்மாழ்வார் 87
திருவெழுகூற்றிருக்கை திருமங்கையாழ்வார் 1
சிறிய திருமடல் திருமங்கையாழ்வார் 1
பெரிய திருமடல்) திருமங்கையாழ்வார் 1
இராமானுச நூற்றந்தாதி திருவரங்கத்தமுதனார் 108
நான்காமாயிரம்

திருவாய்மொழி

நம்மாழ்வார் 1102

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment