ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்
ஆழ்வார்களும் பகவத் ராமாநுஜரும்
மணவாள மாமுநிகள், நம்பெருமாள் சாதித்தபடி இதுவே எம்பெருமானார் தரிசனம்
“எம்பெருமானார் தரிசனம் என்றே நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார்”. ஸ்ரீவைஷ்ணவ உலகுக்கு வெளியிலும், இப்போது உலகெங்கிலும், பக்தி இயக்கம் தொடங்க வித்திட்டவர் சுவாமியே என்பது யாவரும் அறிந்த ஒன்று. ஆகவே, த்ரமிடோபநிஷத்தின் பெருமையை இப்பேராசிரியரின் க்ரந்தங்களிலிருந்து அறியவேண்டியது அவஸ்யமாகிறது.
முற்பகுதிகளில் ஸ்வாமியை திவ்யப்ரபந்த ஆசிரியர்/மாணாக்கர், ஆழ்வாரின் பக்தர் , தமது சிஷ்யர்கள் பலரின்மூலம் அக்கருத்துகளைப் பரப்பியவர் என்கிற நோக்கில் பார்த்தோம்.
அடுத்து மேல் வரும் கட்டுரைகளில் பகவத் பாஷ்யகாரரின் க்ராந்தங்களுக்கும் ஆழ்வார்களின் திருவாக்குகளுக்கும் உள்ள நேரடித் தொடர்பை உணர்வோம்.
சுவாமியின் க்ரந்தங்கள், அவரது வ்யாக்யைகளு க்கு ஒரு தனிப் பாணி உண்டு. எங்கெல்லாம் பரமாத்மாவைப் பற்றிய குறிப்பு வருகிறதோ,அங்கு சுவாமி ஆழ்வார்களை யே பின்பற்றி பெருமானின் தனி மேன்மை, பரம ஸ்வரூபம், உயர்வற உயர்நலன்கள் , திருக்கல்யாண குணங்கள், சுபாஸ்ரயமும் திவ்யமுமான இயல்புகள், மநோஹரமான திவ்ய ரூபம்,திவ்ய சேஷ்டி தங்கள் ஆகியவற்றில் அமிழ்கிறார். சுவாமி ராமாநுஜர் ஒரே ஓரிடத்தில்கூட இவ்வாய்ப்பினை நழுவ விட்டதில்லை.எம்பெருமானின்அநுபவத்தை அவர் தாம் இடைவிடாது உணர்ந்து, வாசிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் மனதில் அந்தப் பேரானந்தத்தை அவர் அருளுகிறார். ஆழ்வார்களின் பக்திப் பள்ளியில் பயின்று தெரிய சுவாமி ராமானுஜரால் பரமாத்மானுபவம் ஏற்படும் ஒரு வாய்ப்பையும் நழுவ விடமுடியாது.
இந்த ஆத்மாநுபவத்தை சுவைக்க விரும்புபவர்கள் குறைந்த பக்ஷம் ஸ்ரீ பாஷ்யம், கீதா பாஷ்யம், கத்யத்ரயம் ஆகியவற்றை சேவிக்க வேண்டும்.
மன்மனா பவ!
பகவத் கீதை ஒன்பதாம் அத்யாயத்தில் பகவான் கிருஷ்ணன் சொல்கிறார்:
மன்மனா பவ மத பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யசி யுக்த்வைவமாத்மானம் மத்பராயணா:
இதன் எளிதான பொருளாவது:”உன் மனத்தை என்னிடம் நிலை நிறுத்து, என் பக்தனாய் இரு,என்னை உபாசி,என்னை வணங்கு , என்னை உயர்ந்த அடைக்கலமாக எய்து. உன் மனத்தை இப்படிப் பழக்கிக் கொண்டால் நீ என்னையே அடைவாய்”.
“மன் மனா பவ” என்றால் உன் மனத்தை என் மீது நிலை நிறுத்து என்பதாகும்.இச்சொற்கள் மிக எளிதாக விளக்கப் படக் கூடியவை…எவ்வளவு எளிதென்றால், ஸ்ரீ மத்வாசார்யர் இதைத் தொடவுமில்லை. ஸ்ரீ சங்கராசார்யர் मयि वसुदेवो मन: यस्य तव स त्व मन्मना भव (மயி வசுதேவோ மன: யஸ்ய தவ ஸ தவ மன் மனா பவ) என்று வ்யாக்யாநித்தார்.இதில் நேரடிப் பொருள் நீங்கலாகத் தரப்படும் ஒரே கூடுதல் விசேஷார்த்தம் “என்னை” என்பதற்கு “வாசுதேவ”= உன் மனத்தை வாசுதேவன் ஆகிய என்னிடம் நிலை நிறுத்து என்பது.இந்தச் சொற்களுக்கு இந்தளவு எளிய விளக்கமே போதுமானதாய் இருக்க வேண்டும்.
சுவாமியின் பாஷ்யமோ என்னில், கல்நெஞ்சினரையும் கண்ணீர் விடச் செய்யும்…मन्मना भव – मयि सर्वेश्वरे निखिलहेयप्रत्यनीककल्याणैकताने सर्वज्ञे सत्यसङ्कल्पे निखिलजगदेककारणे परस्मिन् ब्रह्मणि पुरुषोत्तमे पुण्डरीकदलामलायतेक्षणे स्वच्छनीलजीमूतसंकाशे युगपदुदितदिनकरसहस्रसदृशतेजसि लावण्यामृतमहोदधौ उदारपीवरचतुर्बाहौ अत्युज्ज्वलपीताम्बरे अमलकिरीटमकरकुण्डलहारकेयूरकटकभूषिते अपारकारुण्यसौशील्यसौन्दर्यमाधुर्यगाम्भीर्यौदार्यवात्सल्यजलधौ अनालोचितविशेषाशेषलोकशरण्ये सर्वस्वामिनि तैलधारावदविच्छेदेन निविष्टमना भव! (மன் மனா பவ – மயி ஸர்வேச்வரே நிகில ஹேயப்ரத்யநீக கல்யாணைகதாந ஸர்வஞ்ஞே ஸத்யஸங்கல்பே நிகிலஜதேககாரணே பரஸ்மிந் ப்ரம்மணி பு௫ஷோத்தமே புண்டரீகதலாமலாயதேக்ஷணே ஸ்வச்சநீலஜீமுதஸங்காக்ஷே யுகபதுதிததினகரஸஹஸ்ர ஸத்ருசதேஜஸி லாவண்யாம்௫தமஹோததே உதாரபீவரசதுர்பாஹோ அத்யுஜ்ஜவலபீதாம்பரே அமலகிரீடமகரகுண்டலஹாரகேயுரகடகபூஷிதே அபரகா௫ண்யஸெளசீல்யஸெளந்தர்யமாதுர்ய காம்பீர்ய ஔதார்ய வாத்ஸல்யஜலதௌ அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யே ஸர்வஸ்வாமினி தைலதாராவதவிச்சேதேன நிவிஷ்டமநா பவ)
கண்ணன் எம்பெருமான் அர்ஜுனனை எப்பொழுதும் தன்னையே நினத்திருக்கும்படியும், தன் பக்தனாகும்படியும், தன்னை விரும்பி நேசித்து பக்தியுடன் தொழும்படியும் உபதேசிக்கிறான். இப்படிச் செய்வதன் மூலம் அர்ஜுனன் தந்து மிக உயர்ந்த இலக்கை அதாவது எம்பெருமானையே அடைவான் என்றும் கூறுகிறான். இவ்விடத்தில் ஓர் உரையாசிரியருக்கு இந்தச் சொற்களை அப்படியே சொல்வது தவிர வேறு என்ன ஆவச்யகதை உண்டு?ஸ்வாமி ராமானுஜரோ எனில் இவ்வெல்லைக் கோட்டைத் தாண்டி, ஈஸ்வரனின் எண்ணிறந்த அனந்த கல்யாண குணங்கள் அனைத்தையும் விவரிக்கிறார். எம்பெருமான் அர்ஜுனனை இயந்திர கதியில் சில சுவையற்ற செயல்களைச் செய்யவா சொல்கிறான்?அவன் இவனைத் தன்னை அன்போடு நேசிக்கவும், முழுவதாக மனத்தை அர்ப்பணிக்கவும் அன்றோ சொல்கிறான்?கண்ணன் யார்?அவன் ஒரு மாணாக்கனைச் சில கார்யங்கள் செய்ய வற்புறுத்தும் ஒரு சாதாரண மனிதனா? அவன் தானே ஸ்வயம் தேவாதிதேவன், பரப்ரம்மம்,மிக உயர்ந்த மேன்மை படைத்த அழகிய மனங்கவரும் சிந்தித்தார் தம்மைப் பேரின்பத்தில் ஆழ்த்தும் நிகரில் பெரியோன்.அவன் எவர்க்கும் தலைவன், ஒப்பாரும்மிக்காரும் இல்லாத ஈஸ்வரேஸ்வரன் ஆகிலும் எவர்க்கும் எளியனாய் அருள் செய்பவன். எங்ஙனம் நோக்கினாலும், எம்பெருமானைத் தவிர அன்புக்கும் வந்தனைக்குக் உரியவர் யார் உளர்?
அர்ஜுனனுக்கும் இது தெளிவாகத் தெரியும். எனினும் ஸ்வாமி ராமாநுஜர் இவ்விஷயத்தை மிக விளக்கமாக விவரிக்க விரும்புகிறார். ஆழ்வார்கள் வழி வந்தவராதலால், ஸ்வாமி எம்பெருமான் மீது ஆராக் காதல் கொண்டு அவனை நேசிப்பவர், தம் மனம் முழுவதாக அவனைச் சார்ந்திருப்பவர். கூரத்தாழ்வான் இதையே नित्य्म्च्युत पदाम्बुज व्युक्मरुक्म व्यमोह (நித்யமச்யுத பதாம்புஜயுகம௫க்ம வ்யாமோஹ) என்று அருளிச்செய்தார். ஆகவேதான் இந்தச் சொற்களைச் சொன்ன மாத்திரத்தில் மடை திறந்த வெள்ளம் போல் சுவாமியின் பக்திப்ரவாஹம் எம்பெருமானின் ஆழ்ந்த அனுபவமாக வெளிவருகிறது. இவ்வெளிப்பாடே கேட்போர் , வாசிப்போர் மனங்களிலும் பக்தியுணர்வை உண்டாக்குகிறது, இதுவே எம்பெருமானின் திருவுள்ளமும்! ஏக காலத்தில் ஸ்வாமி ஓர் அசாதாரண வ்யாக்யாதா, கடைத்தேற்றும் ஆச்சார்யர், ஆழ்ந்த பக்தர் எனப் பல பரிமாணங்களை நமக்கு மிக இலகுவாகக் காட்டுகிறார். ஆழ்வார்களின் ஈரச் சொற்களில் நனைந்த ஆசார்யர் எம்பெருமானின் சொற்களைக் கேட்கும்போது அவற்றுக்கு ஏற்படும் பரிமாணங்கள் அசாத்தியமானவை.
ஸர்வேச்வரேச்வரனான என் மேல் மனதை வை, என் மேல் = ஒரு குறையுமில்லாத, எல்லா மங்கலங்களும் விரும்பத்தக்க கல்யாண குணங்களும் மிக்க, ஸர்வ வியாபி ஸத்ய சங்கல்பன், ஸர்வ காரணன், பரப்ரம்மம், அப்போதலர்ந்த அரவிந்தம் போன்ற செந்தாமரைக்கண்ணன், காள மேகம்போலும் கவின் மிகு கருணைத் தோற்றமுள்ளவன் , கதிராயிரம் இரவி கலந்தெரித் தாற் போல் தேஜோமயன், வண்ணப் பீதகவாடை தரித்தவன், பலபலவே ஆபரணமும் முடியும் குண்டலமும் ஆரமும் கங்கணமும் தோள்வளையும் பூண்டு கருணையும் அன்பும் உடையனாய் எளிவரும் இயல்வினனாய் சுலபனாய் எவர்க்கும் புகலாய் உள்ள என் மேல் அர்ஜுனா உன் அன்பை இடையீடின்றி வை என்கிறான்.
இந்த விளக்கத்தினால் சுவாமி ராமாநுஜர் பக்தி செய்ய வேண்டியதன் காரணங்களை மிக அழகாக எடுத்துக் காட்டிவிட்டார். அவனது மனோஹர திவ்ய ரூபம், அவனது பெருமேன்மை அவனது ஆனந்தமய திருக் கல்யாண குணங்கள் ,அடியார்களின் நெஞ்சை ஈர்க்கின்றன. அவன் அவர்களை உவகைப் பெருவெள்ளத்தில் ஆழ்த்தி கிருஷ்ண திரிஷ்ணையில் ஆழ்ந்து அவனை நேசித்து வணங்கி அவனுக்குக் கைங்கர்யம் செய்யும் ஆசை அவர்களுக்குக் கிளர்ந்தெழுகிறது. இந்தப் பங்க்தி களை சேவிக்கும்போதோ கேட்கும்போதோ அடியார் மனம் தானே கண்ணன் எம்பெருமானிடம் ஈடுபட்டு, அவனது கீதா மெய்மைப் பெருவார்த்தையில் பதிவர் எனும் சுவாமியின் திருவுள்ளம் நிறைவு பெறும்.
பக்திப் பெருஞ்செல்வமே சுவாமி ராமாநுஜர் ஆழ்வார்களிடமிருந்து பெற்ற பெரும் தனம் என்பது சொல்லவே வேண்டாவிரே. அமுதனாரும் இதைத்தானே
பண்டருமாறன் பசுந்தமிழ்ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்களிராமானுசமுனி வேழம் ….என்றும்
கலிமிக்க செந்நெற்கழனிக்குறையல் கலைப்பெருமான் ஒலிமிக்க பாடலையுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலிமிக்க சீயம் இராமானுசன் ….என்றும் போற்றினார்
அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்
ஆதாரம்: https://granthams.koyil.org/2018/02/03/dramidopanishat-prabhava-sarvasvam-5-english/
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org