ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
ஸ்ரீவைஷ்ணவர்கள் ஒழுக்கமான மற்றும் முறையான செயல்களை தங்கள் தினசரி வாழ்க்கையில் கொள்ளவேண்டும். ஒவ்வொரு செயலும் நம் ஸம்ப்ரதாயத்தில் நோக்குடையதாகவே இருக்க வேண்டும்.
- விழித்தெழுதல்
- அதிகாலை 4.30 மணி அளவில் எழுந்திருக்க வேண்டும்
- குருபரம்பரை மந்த்ரத்தையும் ஏழு முறை “ஹரி:” என்பதையும் சொல்ல வேண்டும்
- கை கால்களைக் கழுவிக்கொண்டு, வாயைக் கொப்பளிக்க வேண்டும்
- பரத்வாதி பஞ்சகம், பரமார்த்த ஶ்லோக த்வயம், கஜேந்த்ர மோக்ஷ ஶ்லோக த்வயம் ஆகியவற்றைச் சொல்ல வேண்டும்.
- குருபரம்பரை மந்த்ரம் மற்றும் த்வய மஹா மந்த்ரம் ஆகியவற்றைச் சில நிமிடங்களாவது த்யானிக்கவும்.
- காலை அனுஷ்டானங்கள்
- காலைக் கடன்களை முடிக்கவும் (பல் விளக்குதல் முதலியவை)
- ஸ்நானம் – கங்கையில் புனிதமாய, நின்ற வண் கீர்த்தி, கதா புநஶ்சங்க, ஆசார்யன் தனியன் ஆகியவற்றைச் சேவிக்கவும்
- ஊர்த்வ புண்ட்ரம் – பகவானின் கேஶவ முதலிய 12 திருநாமங்கள், தாயாரின் ஸ்ரீ: முதலிய 12 திருநாமங்கள் ஆகியவற்றைச் சொல்லவும்.
- குரு பரம்பரை மந்த்ரம், திருமந்த்ரம், த்வயம், சரம ஶ்லோகம் ஆகியவற்றைச் சேவிக்கவும்
- ஓராண் வழி ஆசார்ய தனியன்கள் மற்றும் நம்முடைய ஆசார்ய பரம்பரைத் தனியன்கள் ஆகியவற்றைச் சேவிக்கவும்
- ஸந்த்யா வந்தனம் (யஜ்ஞோபவீதம் அணிந்துள்ளவர்களுக்கு)
- திருவாராதனம் – பகுதி 1
- மலர்கள், தூபம், தீபம், தீர்த்தப் பரிமளம், தீர்த்தம் ஆகியவற்றைத் தயார் செய்யவும்.
- வையம் தகளியா, அன்பே தகளியா, திருக்கண்டேன், மங்குல் தோய் சென்னி பாசுரங்கள் ஆகியவற்றைச் சேவித்துத் திருவிளக்கு ஏற்றவும்.
- ஆசார்ய ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தயார் செய்து அதை எடுத்துக்கொள்ளவும்.
- ஸந்நிதிக்கு முன்னால் ஸாஷ்டாங்க ப்ரணாமம் செய்யவும்
- கைகளை மூன்று முறை தட்டி, திருக்காப்பு நீக்கவும் (கதவைத் திறக்கவும்). நாயகனாய் நின்ற, திருப்பள்ளியெழுச்சி, மாரி மாலை முழைஞ்சில், அன்று இவ்வுலகம், அங்கண்மா ஞாலத்து ஆகிய பாசுரங்களைச் சேவிக்கவும்.
- மந்த்ராஸனம் செய்யவும்
- தளிகைப் பண்ணவும்.
- ஸந்தை கற்றல், பாசுரங்கள்/ஸ்தோத்ரங்கள்/ரஹஸ்ய க்ரந்தங்கள் பயிற்சி செய்தல், காலக்ஷேபங்கள்/உபந்யாஸங்கள் கேட்பது போன்றவற்றைச் செய்யலாம்.
- மதியம்/பிற்பகல் அனுஷ்டானங்கள்
- மாத்யாஹ்நிகம் (யஜ்ஞோபவீதம் அணிந்துள்ளவர்களுக்கு)
- திருவாராதனம் – பகுதி 2
- ஸ்நாநாஸனம் – பஞ்ச ஸூக்தங்களை முடிந்தவரை சேவிக்கவும் (யஜ்ஞோபவீதம் அணிந்துள்ளவர்கள்), வெண்ணெய் அளைந்த குணுங்கும் சேவிக்கவும்.
- அலங்காராஸனம் – தூபம், தீபம், வேத ஆரம்பம் (யஜ்ஞோபவீதம் அணிந்துள்ளவர்கள்), அர்ச்சனை
- நித்யானுஸந்தானம் சேவித்தல் அல்லது ஆழ்வார்திருநகரி க்ரமத்தின்படி 4000 திவ்யப்ரபந்தம் சேவித்தல்
- போஜ்யாஸனம்
- புனர் மந்த்ராஸனம்
- மங்கள ஹாரத்தி
- ஸாற்றுமுறை, தீர்த்த விநியோகம்
- அனுயாகம் – விருந்தினர்களுக்கான ததீயாராதனம்
- குடும்பத்துடன் ப்ரஸாதம் ஏற்றுக்கொள்வது
- ஸந்தை கற்றல், பாசுரங்கள்/ஸ்தோத்ரங்கள்/ரஹஸ்ய க்ரந்தங்கள் பயிற்சி செய்தல், காலக்ஷேபங்கள்/உபந்யாஸங்கள் கேட்பது போன்றவற்றைச் செய்யலாம்.
- மாலை அனுஷ்டானங்கள்
- ஸாயம் ஸந்த்யாவந்தனம் (யஜ்ஞோபவீதம் அணிந்துள்ளவர்களுக்கு)
- திருவாராதனம் – பகுதி 3
- வையம் தகளியா, அன்பே தகளியா, திருக்கண்டேன், மங்குல் தோய் சென்னி பாசுரங்கள் ஆகியவற்றைச் சேவித்துத் திருவிளக்கு ஏற்றவும்.
- ஸஹஸ்ரநாமம், பூர்வாசார்ய ஸ்தோத்ரங்களைச் சேவித்து ஸாற்றுமுறை செய்யவும்
- பர்யங்காஸனம் (ஶயனம்)
- திருக்காப்பு சேர்க்கவும் (ஸந்நிதிக் கதவை மூடவும்)
- குடும்பத்துடன் ப்ரஸாதம் ஏற்றுக்கொள்வது
- ஸந்தை கற்றல், பாசுரங்கள்/ஸ்தோத்ரங்கள்/ரஹஸ்ய க்ரந்தங்கள் பயிற்சி செய்தல், காலக்ஷேபங்கள்/உபந்யாஸங்கள் கேட்பது போன்றவற்றைச் செய்யலாம்.
- முடிந்தால், ஒத்த எண்ணம் கொண்ட பக்தர்களுடன் ஸத்ஸங்கத்தில் ஈடுபடுங்கள்.
- இரவு
- குடும்ப உறுப்பினர்களுடன் ஸம்ப்ரதாய விஷயங்கள் குறித்துக் கலந்துரையாடுதல்.
- அதிகபட்சம் இரவு 10 மணிக்குள் ஓய்வெடுக்க/உறங்கச் செல்லவும்
குறிப்புகள்:
- யஜ்ஞோபவீதம் அணியாதவர்கள், திவ்யப்ரபந்த பாசுரங்கள், பூர்வாசார்ய ஸ்தோத்ரங்கள் மற்றும் ரஹஸ்ய க்ரந்தங்களைக் கற்பது மற்றும் சேவிப்பதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால், இது விஷயமாகப் பெரியோர்களிடம் மேலும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்
- அநத்யயன காலத்தில், திவ்யப்ரபந்தங்களைத் தவிர்க்க வேண்டும். பூர்வாசார்ய ஸ்தோத்ரங்கள் மற்றும் ரஹஸ்ய க்ரந்தங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
- இந்தத் தொகுப்பு, பொதுவாக ஆண் பக்தர்களின் பார்வையில் செய்யப்பட்டாலும், பெண் பக்தர்களும் கைங்கர்யங்களுக்குத் தேவையான தங்கள் வீட்டுப் பொறுப்புகளை நிறைவேற்றி, இந்தக் கைங்கர்யங்களில் உதவ வேண்டும்.
- ஆஹார நியமம் மிகவும் முக்கியமானது. நமக்கு அனுமதிக்கப்பட்ட உணவுப் பொருட்களை மட்டுமே நாம் உண்ண வேண்டும். தண்ணீர் உட்பட எல்லாவற்றையும், பகவான், ஆழ்வார்கள் மற்றும் ஆசார்யர்களுக்கு ஸமர்ப்பித்து, அவர்களின் ப்ரசாதமாகவே நாம் உண்ண வேண்டும்.
- ஒவ்வொருவரின் கோயில் ஈடுபாடு, ஆசார்யரின் ஸ்ரீமடம்/திருமாளிகை ஆகியவற்றில் உள்ள ஈடுபாட்டைப் பொறுத்து, தேவைக்கேற்பக் கைங்கர்யங்களில் பங்குபெற வேண்டும்.
- முடிந்தவரை ஶாஸ்த்ரத்தின் எல்லைகளை மீறாமல், பணம் சம்பாதிக்கும் செயல்களில் ஈடுபடலாம். அன்றாட அனுஷ்டானங்களில் முக்ய அம்ஶங்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு, தேவைக்கேற்ப லௌகிக விஷயங்களுக்கு நேரத்தை ஒதுக்க வேண்டும்
- பகவத் விஷயத்தை (ஆன்மீக விஷயங்களை) கற்று, அதன்படி நடந்து, பொருத்தமான வகையில் மற்றவர்களுடன், குறிப்பாகக் குடும்ப உறுப்பினர்களுடன் அவ்விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
மேற்கோள்கள்/கட்டுரைகள்:
- குருபரம்பரை மந்த்ரம், திருவாராதன ப்ரமாநங்கள் முதலியவை இங்கே உள்ளன – https://granthams.koyil.org/2014/12/29/srivaishnava-thiruvaradhanam-pramanams-tamil/
- பரத்வாதி பஞ்சகம் – https://pillai.koyil.org/index.php/2024/11/learn-parathvadhi-panchakam/
- பரமார்த்த ஶ்லோக த்வயம் – https://pillai.koyil.org/index.php/2024/11/learn-paramartha-sloka-dhvayam/
- கஜேந்த்ர மோக்ஷ ஶ்லோக த்வயம் – https://pillai.koyil.org/index.php/2024/11/learn-gajendhra-moksha-sloka-dhvayam/
- பாசுரங்கள், ஸ்தோத்ரங்கள், ரஹஸ்ய க்ரந்தங்கள் மற்றும் ஸம்ப்ரதாய காலக்ஷேப க்ரந்தங்களைக் கற்றுக்கொள்வதற்கான இணைப்புகள் – https://pillai.koyil.org/index.php/2017/11/learners-series/
- ஊர்த்வ புண்ட்ரத்தை எப்படி அணிந்துகொள்வது? https://pillai.koyil.org/index.php/learn-urdhva-pundra-dharanam/
- திருவாராதனம் செய்வது எப்படி? https://pillai.koyil.org/index.php/learn-thiruvaradhanam/
- ஆஹார நியமம் – https://granthams.koyil.org/2012/07/29/srivaishnava-aahaara-niyamam/
- ஆழ்வார்திருநகரி 4000 திவ்யப்ரபந்த க்ரமம் – https://granthams.koyil.org/2021/12/15/azhwarthirunagari-vaibhavam-6-tamil/
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org