ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
உத்தாரகத்வந்தான் வ்யக்தித்ரயகதமாயிருப்பது, ஈஶ்வரனிடத்திலும், ஆழ்வாரிடத்திலும், உடையவரிடத்திலுமிறேயுள்ளது. உபயவிபூதிக்கும் கடவனிறே உத்தாரகனாவான். 14. “अस्य ममश शेषम ही विभूतिरुभयात्मिका ” (அஸ்யா மம ச சேஷம் ஹி விபூதிருபயாத்மிகா) என்று உபயவிபூதிக்கும் கடவனான ஶ்ரீமான் தானென்னுமிடத்தைத் தானே அருளிச் செய்தான்.
ஆழ்வார் “பொன்னுலகாளீரோ புவனிமுழுதாளிரோ“ என்று உபயவிபூதியும் தாமிட்ட வழக்காய் இருக்கிமென்னிடத்தை தாமே அருளிச் செய்தார். பெரிய பெருமாள் உபய விபூதியும் கொடுக்கப் பெற்று உடையவரானாரிறே இவர். ஆகையாலே இது வ்யவஸ்தித விஷயமாயிருக்கும்.. அவ்யக்தித்ரயத்திலும் உடையவரிடத்திலே உத்தாரகத்வம் உறைத்திருக்கும். ஈஶ்வரன் ஆழ்வாரை இவ்விபூதியிலே நெடுநாள் இட்டுவைத்து ஜகத்தைத் திருத்துவதாக நினைத்தளவிலே, முப்பத்திரண்டு திருநக்ஷத்ரத்துக்குள்ளே, “கூவிக்கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ” என்றும், “எந்நாள் யானுன்னை இனி வந்து கூடுவனே” என்றும், “மங்கவொட்டுன் மாமாயை” என்றும் அறப்பதறி வீடு பெற்றாரிறே.
அந்த இழவெல்லாம் தீர உடையவரை நூற்றிருபது திருநக்ஷத்ரமிட்டு வைத்து ஜகத்தை வாழ்வித்தானிறே; ஆழ்வார் காலத்தில் இல்லாத வைஷ்ணவ ஸம்ருத்தி இவர் காலத்தில் பொலிந்ததிறே. இதுக்கு நிதாநம் – உத்தாரகத்வத்தினுடைய உறைப்பாய்த்து.
ஆழ்வார் தாமும் “கடல் வண்ணன் பூதங்கள் மண்மேல் மலியப் புகுந்து இசை பாடியாடி உழிதரக் கண்டோம்” என்று நிஶ்சயித்து அருளிச் செய்தாரிறே.
ஆகையாலே, இவரே ஸர்வோத்தாரகர். ஆசார்யத்வத்திலே வந்தால் க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யத்வத்தை முக்யமாக கொள்வது இவர் பக்கலிலே ஆயித்து. அநர்த்தங்கண்டால் ஆற்றாமையும், மிக்க க்ருபையும் உடையவராயிறே இவரிருப்பது. இது தான் வ்யவஸ்தித விஷயமாகையாலே துர்லபமாயிருக்கும் . ஆகையிறே ஆசார்யத்வத்தை ஆசைப்பட்டு ஶ்ரீகீதையை உபதேசிக்குமளவிலே.
15. (யச்ச்ரேயஸ் ஸ்யாந் நிஶ்சிதம் ப்ரூஹி தந்மே ஶிஷ்யஸ் தேஹம் ஶாதி மாம் த்வாம் ப்ரபந்நம் )
என்று தானும் ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யனாய்,
16. (தத் வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஶ்நேந ஸேவயா| உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்வதர்சின: ||) என்று ஸ்வவ்யதிரிக்த விஷயத்திலும் ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யத்வத்தையிறே சொல்லிற்று. ஆகையாலே, ஆழ்வாரிடத்திலும், அவரடியாக வந்த இவரிடத்திலும் க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யத்வம் வ்யவஸ்திதம்.
இன்னமும் இவருடைய உத்தாரகத்வ ஸாதகங்களான ஆசார்ய திவ்யஸூக்திகள் பலவும் சொல்லப்படுகிறது.
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org
In English – https://granthams.koyil.org/2012/12/charamopaya-nirnayam-uththaraka-acharyas/