ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
பெரியநம்பி மதுராந்தகத்து ஏரிகாத்த பெருமாள் கோயில் திருமகிழ அடியிலே எழுந்தருளியிருந்து 17. “ चक्राधिधारणम पुसंम परसम्भन्दवेदणम ” (சக்ராதிதாரணம் பும்ஸாம் பரஸம்பந்த வேதநம் | பதிவ்ரதாநிமித்தம் ஹி வலயாதி விபூஷணம் || ) என்றும்,
13. “एवम प्रपद्ये देवेचम आचार्य कृपा स्वयम । अध्यापेन मन्त्रार्थम सर्शीछन्धोधी देवताम ॥”
(ஏவம் ப்ரபத்ய தேவேஶம் ஆசார்ய: க்ருபயா ஸ்வயம் | அத்யாபயேந்மந்த்ர ரத்நம் ஸர்ஷிச்சந் தோதி தைவதம் || ) என்றும் சொல்லுகிறபடியே பகவத் ஸம்பந்த பூர்வகமாக உடையவர்க்கு த்வயோபதேஶம் பண்ணியருளி “நாம் உமக்கு ஆசார்யராக வேணுமென்று பெருமைக்கு செய்தோமில்லை. ஆளவந்தார் கணிசித்த விஷயமென்று செய்தோமித்தனை. ஆழ்வார் உம்மைக் கடாக்ஷித்து ‘கலியும் கெடும் கண்டுகொண்மின்’ என்று அருளிச் செய்தாராகையாலே அப்படிப்பட்ட மஹாநுபாவனன்றோ; இவ்வழியாலே தேவரீரோட்டை ஒரு ஸம்பந்தம் வேணுமென்றும் செய்தோம் இத்தனை. “வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி விண்முழுதும் உய்யக்கொண்டவீரன்” என்றும், 19. ஜநகாநாம் குலே கீர்த்திமாஹரிஷ்யதி மே ஸுதா என்றும் சொல்லுகிறபடியே, “தேவரீர் வந்தவரதரிக்கையாலே ப்ரபன்ன குலமாக விளங்கப் போகிறது. தேவரீரே ஸர்வோத்தாரகர். அடியேன் ரஹஸ்யத்திலே நினைத்திருப்பதும் அப்படியே” என்றருளிச் செய்தார். இவ்வார்த்தை ஸம்ப்ரதாயமென்று பிள்ளை அருளிச்செய்வர்.
பெரிய திருமலை நம்பி திருமாளிகையிலே, உடையவர் ஒரு ஸம்வத்ஸரம் எழுந்தருளி இருந்து இதிஹாஸ ஶ்ரேஷ்ட்டமான ஶ்ரீராமாயணம் நம்பி பக்கலிலே கேட்டருளுகிறவளவிலே, 20. “ यस्य रामे न पश्येथू यंच रामो न पश्यती निन्धितस वासेश्लोके स्वथ माप्येन विगर्हथे ” (யஶ்ச ராமம் நபஶ்சயேத்து) என்கிற ஶ்லோகம் வந்தவாறே ஸ்வகதஸ்வீகார பரகதஸ்வீகாரங்கள் இரண்டுமன்றியிலே தானும் பிறரும் தன்னை இகழும்படி வர்த்திக்கிற சேதனனுக்கு தஞ்சமேதென்று கேட்டருளினவளவிலே, “நித்யஸூரிகளில் தலைவரான தேவரீருடைய அபிமானமே அமோகோத்தாரகம்” என்று அருளிச் செய்தார். பின்பு எம்பாரை உதகபூர்வகமாக உடையவர்க்கு ஸமர்ப்பித்து, “நீர் உடையவரை நம்மிலும் அதிகராக நினைத்திரும் ; அவர் திருவடிகளே தஞ்சம்; அவர் ஸர்வோத்தாரகராகத் திரு அவதரித்தவர். ஆகையாலே இவரோட்டை ஸம்பந்தம் நேராகப்பெற்றதில்லை என்று ஶ்ரீராமாயண வ்யாஜத்தாலே ஒரு ஸம்பந்தம் பெற்றோம். ஆளவந்தாரும் இழவோடே எழுந்தருளும் படிகாணும் இவருடைய ஏற்றமிருப்பது. இந்த மஹாநுபாவனோட்டை ஸம்பந்தத்தாலே நீரும் நிழலுமடிதாறுமாயிரும் “ என்றருளிச் செய்தார். இதுவும் ஸம்ப்ரதாயம்.
திருக்கோட்டியூரிலே உடையவர் எழுந்தருளி நம்பி பக்கலிலே சரமஶ்லோகம் கேட்கிறபொது, தஞ்சமான அர்த்த விஶேஷங்களை எல்லாம் அருளிச்செய்து, “தேவரீரைப் பலகாலும் துவளப் பண்ணினத்தைத் திருவுள்ளத்திலே கொள்ளாதேகிடீர். அர்த்தத்தின் சீர்மையை வெளியிடவேண்டிச் செய்தோமித்தனை. தேவரீர் லோக ஸம்ரக்ஷணார்த்தமாகத் திருவவதரித்தருளிற்று. நாதமுனிகளுக்குத் தஞ்சமான விஷயம் தேவரீர். இப்படிப்பட்ட மஹானுபாவனோட்டை ஸம்பந்தமுண்டாகப் பெற்றோம் என்று மார்பிலே கைபொகட்டு உறங்கலாம்படிக்கு உடலாயிருக்கிறது. எங்கள் ஆசார்யரான ஆளவந்தார் ஸ்ரீபாதத்திலே ஆஶ்ரயித்த முதலிகளிலே இத்தர்ஶநத்தை நிர்வஹிக்க ஆளுண்டாயிருக்கவும், தேவரீரே தர்ஶனப்ரவர்த்தகராக வேணுமென்று பேரருளாளன் ஸன்னிதியிலே ப்ரபத்தி பண்ணியருளித் திருநாட்டுக்கு எழுந்தருளுகிற போது, “இந்த மஹாநுபாவனோடே நாலு நாளாகிலும் கலந்து பரிமாறப் பெற்றோமில்லையே” என்று இழவோடே எழுந்தருளினார். ஆகையாலே இத்தர்ஶனம் எம்பெருமானார் தர்ஶநமென்று தேவரீர் திருநாமத்தினால் நாள் தோறும் கொழுந்து விட்டு விளங்கப்போகிறது” என்று அருளிச் செய்தார்.
திருக்கோட்டியூர் நம்பி நியோகத்தாலே உடையவர் திருமாலையாண்டான் பக்கலிலே திருவாய்மொழி நடத்தா நிற்க, இடையிலே ஒரு அர்த்த வ்யத்யாஸத்தாலே வ்யாக்யானம் நடத்தாமல் தவிர, இத்தைத் திருக்கோட்டியூர் நம்பி கேட்டருளிக் கோயிலேற எழுந்தருளினவளவிலே திருமாலையண்டானை அழைத்தருளி “ நீரிவருக்கு அஜ்ஞாத ஜ்ஞாபனம் பண்ணுகிறோமென்று இராதே கொள்ளும். இவர்க்கு ஆளவந்தார்க்குத் தோற்றின அர்த்தமொழிய விபரீதார்த்தம் தோற்றாது. ஸாந்தீபநி பக்கலிலே க்ருஷ்ணன் வேதாத்யயநம் பண்ணினாப்போலே காணும் உம்முடைய பக்கலிலே இவர் திருவாய்மொழி கேட்கிறது” என்றருளிச் செய்து, விட்ட தருவாய் தொடங்கி உடையவர் மடத்திலே திருக்கோட்டியூர் நம்பியும், திருமாலையாண்டானும், பெரிய நம்பியும் கூட எழுந்தருளியிருந்து திருவாய்மொழி வ்யாக்யானம் நடத்துவியாநிற்க, “பொலிக பொலிக” வந்தவாறே, “கலியும் கெடும்” என்கிறவிடத்திலே நம்பியும் உடையவரை ஏறவும் இறங்கவும் பார்க்க, உடையவர் அத்தைக் கண்டருளி இதுக்குப் பொருளேதென்று கேட்க, “ தேவரீர் திருவவதரித்து இதினுடைய அர்த்தத்தை வெளியிட்டுக் கொண்டு எழுந்தருளியிருக்கச் செய்தே கேட்க வேணுமோ? ப்ரபன்ன குலோத்தாரகரான தேவரீரே இதுக்குப் பொருள்; அஸ்மதாதிகளைக் கரையேற்றுகைக்காகவன்றோ நித்ய விபூதியில் நின்றும் இங்கே எழுந்தருளிற்று” என்று அருளிச் செய்தார். இத்தைக் கேட்டிருந்த திருமாலையாண்டானும் ஹர்ஷபுளகிதகாத்ரராய், “இனி நான் ஆளவந்தாரை அறியேன்; எல்லாப் பேறும் தேவரீரே; தேவரீரோடு உண்டான ஸம்பந்தமே அடியேனுடைய பேற்றுக்கு ஸாதனம்” என்றருளிச் செய்தார்.
உடையவர், ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் பக்கலிலே சென்று ஸ்வாநுவர்த்தனத்தாலே அவரை உகப்பித்து பரமரஹஸ்யமான சரமோபாயத்தைப் பெற்று ப்ரீதராய் எழுந்தருளியிருக்க அவ்வளவிலே உடையவரை அழைத்தருளி “நாம் உமக்குச் சரமோபாய ரஹஸ்யத்தைச் சொன்னோமேயாகிலும் இது முக்யமாக விலைச்செல்லுகிறது உம்முடைய பக்கலிலேதானே” என்றருளிச் செய்தார்”. இதுக்கு நிதானம், நாதமுனிகளாகையாலே நீரே ஸர்வோத்தாரகராக குறையில்லை” என்றும் அருளிச் செய்தார்.
இப்படி ஐவரும் கூடி உடையவர்க்கு ஆசார்யர்களாக இருந்தார்களேயாகிலும், தாங்கள் தஞ்சமாக அறுதியிட்டு இருப்பது உடையவரிடத்தில் உத்தாரகத்வத்தையிறே. திருக்கோட்டியூர் நம்பி தம் குமாரத்தியாரை உடையவர் திருவடிகளிலே ஆஶ்ரயிப்பித்தவளவிலே, உடையவர் அப்பெண்பிள்ளையை ஏகாந்தத்திலே அழைத்தருளி தம் திருவடிகள் இரண்டையும் காட்டி, “பெண்ணை! இத்தையே தஞ்சமாக நினைத்திரு” என்றருளிச் செய்தார். அந்தப் பெண்ணும் “மேவினேனவன் பொன்னடி மெய்ம்மையே” என்று, தேவரீர் எங்கே எழுந்தருளியிருந்தாலும், அடியேனுக்கு தேவரீருடைய திருவடிகளே தஞ்சம்; தேவரீருக்கு ஆசார்யரான எங்கள் ஐயர் நினைத்திருக்கும்படி கண்டால் தேவரீருக்கு அநந்யார்ஹசேஷபூதையான அடியேன் நினைத்திருக்கச் சொல்லவேணுமோ” என்று சொன்னாளாகப் பிள்ளை அருளிச்செய்வர். திருக்கோட்டியூர் நம்பி தம்முடைய அந்திம தஶையிலே குமாரத்தியாரை அழைத்தருளி, “பெண்ணே! நம் ப்ராயாணத்தில் நீ நினைத்திருப்பது என்” என்ன , “ஐயரே! எங்களாசார்யரான எம்பெருமானரோடு உண்டான ஸம்பந்தத்தாலே தேவரீருக்குப் பேறு முற்படப் பெற்றதே என்று நினைத்திருக்கின்றேன்” என்ன, அவரும், “ வளர்த்ததனால் பயன் பெற்றேன்” என்று அப்பெண்பிள்ளையை அழைத்தருளி, ஆளவந்தார் ப்ராஸாதலப்தமான விக்ரஹத்தை ஸாதித்து உள்ளிற்கருத்தும் வெளியாம்படி, “எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்” என்று திருநாட்டுக்கு எழுந்தருளினார். இத்தால் எம்பெருமானாரிடத்திலே நிஸ்ஸம்ஶயமாக உத்தாரகத்வத்தை அறுதியிட்டார் என்னுமிடம் ஸித்தமாயிற்றதிறே.
திருக்கச்சி நம்பி ஒரு நாள் ராத்திரி காலத்திலே பேரருளாளன் ஸன்னதியிலே நெடும் போது திருவாலவட்டம் பரிமாற , “நம்பி ! ஒன்று சொல்லுவாரைப் போலே இராநின்றீர், என்?” என்ன, “நாயிந்தே! இளையாழ்வார், ‘சில நினைவுகள் நினைத்தேன் அவை எவை என்று தேவரீரிடத்திலே கேட்டு வந்து சொல்ல வேணும்’ என்றார். அவற்றை அருளிச் செய்ய வேணும்” என்ன, “வாரீர்! அவர் அறியாததோ நாம் சொல்லப் போகிறது. ஸாந்தீபனி பக்கலிலே நாம் அத்யயனம் பண்ணினாப் போலே காணும் அவா இருக்கும்படி ஸகலஶாஸ்த்ரங்களும் ஸகலோபாயங்களும் அறிந்த ஸாரவித்தமராய், நம் முதன்மையிலே அடிமை செய்வாரில் தலைவராய், தம் பக்கலிலே ஸகலார்த்தங்களும் கேட்டு நாடு அடங்க வாழ வேண்டியிருக்க , நாமென்று சொல்லக் கிடக்கிறதோ? பின்னையும் உம்மையிடுவித்து கேட்கிறாரித்தனை” என்றருளிச் செய்தார்.
“உடையவர், பெரிய நம்பி தொடக்கமான ஐவர்களுக்கும் ஶிஷ்யராய், அவர்கள் ஆசார்யர்களாயிருக்க, ஶிஷ்யரான இவரோட்டை ஸம்பந்தத்தாலே அவர்கள் பேறு பெற்றார்கள் என்று சொல்லும்படி எங்ஙனே? ஆசார்ய ஸம்பந்தத்தாலேயன்றோ ஶிஷ்யனுக்குப் பேறு” என்னில் – தஶரதவஸுதேவாதிகளிடத்திலே பிறந்த ராமக்ருஷ்ணாதிகள் வித்யாப்யாஸத்துக்குடலாக விஶ்வாமித்ர ஸாந்தீபனீ ப்ரப்ருத்திகளை ஆசார்யத்வேந வரித்து 21. “किंकरौ समुपस्थितौ ” (கிங்கரௌ ஸமுபஸ்தி தௌ) என்றும் 22. “तत्वम दासभूतोस्मी किमध्य कारवन्निथे” (தவாஹம் தாஸபூதோ ஸ்மி கிமத்ய கரவாணி தே ) என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே தாங்கள் ஶிஷ்யராய் நின்றவிடத்தில் ஶிஷ்ய ஸம்பந்தத்தாலே உபதேஶகத்வேந நின்று குருக்களான விஶ்வாமித்ராதிகளுக்குப் பேறானாப் போலே, ஶிஷ்யரான இவரோடுண்டான ஸம்பந்தத்தாலே ஆசார்யர்களான பெரியநம்பி தொடக்கமானாக்கும் பேறாகக் குறையில்லை.
23. “ विष्णु मनुष्य रूपेण चाचर वासूदैवते ” (விஷ்ணுர் மாநுஷ ரூபேண சாசர வஸுதாதலே ) என்றும், 24. “ इदनमपी गोविन्दा लोकानाम हितकम्य, मानुषम वपुरस्थय,द्वारवत्यम ही तिष्ठसे ” (இதாநீமபி கோவிந்த லோகாநாம் ஹிதகாம்யயா | மாநுஷம் வபுராஸ்தாய த்வாரவத்யாம் ஹி திஷ்டஸி || ) என்றும் சொல்லுகிறபடியே ஸாக்ஷாத் ஸர்வேஶ்வரன் தானே மாநுஷரூபத்தை ஏறிட்டுக் கொண்டு ஶிஷ்யத்வபாவநாமாத்ரமாய், தன்னில் தானான தன்மையாய் இருக்கையாலே, அவர்களும் அடியறிந்தவர்களாகையாலே , உபதேஷ்டருத்வ பாவனை ஒழிய வஸ்துத: அஜ்ஞாதஜ்ஞாபனத்வாரா குருத்வம் தங்களுக்கு இல்லாமையாலே அவர்களுக்குப் பேறு அவராலேயாகக் குறையில்லை. இங்கு அப்படிக் கூடாதே – என்னில் இங்கும் கூடும். எங்ஙனேயென்னில்- 25. ஆசார்யஸ்ஸ ஹரிஸ்ஸாக்ஷாத் சரரூபி ந ஸம்ஶய: என்றும், 26. குருரேவ பரம் ப்ரஹ்ம என்றும், “பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து” என்றும், “திருமாமகள் கொழுனன் தானே குருவாகி” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடி உடையவரும் அவதார விசேஷமாகையாலும், பெரிய நம்பி தொடக்கமானார் இவர்க்கு அஜ்ஞாதஜஞாபனத்வாரா ஆசார்யர்களன்றிக்கே இவரோடே நமக்கொரு ஸம்பந்தம் உண்டாகவேணுமென்னுமதிலே நோக்காய் ஆசார்யத்வத்தை வ்யாஜமாக நினைத்திருக்கையாலும் நாதமுனிகளுடைய ஸம்ப்ரதாய ஶ்ரவணத்தாலும், பேற்றுக்கு உடலாக உத்தாரகத்வத்தை இவரிடத்திலே அறுதியிட்டிருந்தார்கள்.
ப்ரதம குருவான எம்பெருமானுக்கும் இவர் உத்தாரகரானபடி கண்டால், அவாந்தர குருக்களுக்கு இவர் உத்தாரகராகச் சொல்ல வேண்டாவிறே. உத்தாரகராகையாவது – ஸ்வரூபஸத்பாவம் அழிந்து அத:பதிதனானவனை ஸ்வரூபஸத்பாவத்தை உண்டாக்கிக் கரைமரம் சேர்க்கையிறே. பாஹ்ய குத்ருஷ்டிகள் ப்ரஹ்மஸ்வரூபத்தை இல்லை செய்ய, அத்தாலே ஸ்வரூபஸித்தியில்லாமல், அத:பதிதனானவளவிலே, ஸகல வேதாந்தங்களாலும் பரப்ரஹ்மத்தை ஸ்வரூப ஸித்தியுண்டாக்கிக் கரைமரம் சேர்த்தாரிறே. இன்னமும் 27. “गोपालन यादव वंशम, स्वयं मग्नम अभ्यूधरीष्यती” (கோபாலோ யாதவம் வம்ஶம் ஸ்வயம் மக்நம் அப்யுத்தரிஷ்யதி) என்று நாரத பகவான் க்ருஷ்ணாவதாரத்தைக் கடாக்ஷித்து, யதுவம்ஶத்தை ஒரு கோபாலன் வந்து உத்தரிக்கப் போகிறான் என்று சொன்னாப் போலே, ப்ரபன்ன ஜன கூடஸ்தரான ஆழ்வாரும் உடையவருடைய திருவவதாரத்தைக் கடாக்ஷித்து “கலியும் கெடும் கண்டு கொண்மின்” என்று ஒரு மஹானுபாவன் திருவவதரித்து ப்ரபன்ன குலமாக வாழும்படிக்கு ஶ்ரீவைஷ்ணவஶ்ரீ கொழுந்துவிட்டுச் செல்லும்படி பண்ணப்போகிறாரென்று அருளிச் செய்தாரிறே. ஆகையாலே ஆளவந்தார் தொடக்கமான முன்புள்ள முதலிகள் பலரும் தர்ஶந ப்ரவர்த்தகராயிருக்க, இங்கும் அங்கும் இவர் திருநாமத்தாலே தர்ஶனம் பேறு பெற்று – எழுபத்துநாலு ஸிம்ஹாஸனஸ்தாரும், ஜ்ஞாநாதிகரான ஸந்யாஸிகளும், ஶ்ரீவைஷ்ணவர்களும், ஏகாங்கிகளும், ஜ்ஞாநாதிகைகளான அம்மையார்களும் நிரவதிக வைஷ்ணவ ஶ்ரீயோடே வாழ்ந்தது. அந்த ஸம்ருத்தி இன்றளவும் வெள்ளமிட்டுப் பெருகும்படி ராமாநுஜதர்ஶநமென்று கொழுந்து விட்டுச் செல்லுகிறது.
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org
In English – https://granthams.koyil.org/2012/12/charamopaya-nirnayam-ramanujars-acharyas/