ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்
<< பரமபதத்துக்குத் திரும்புதல்
நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் “கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர்! எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே” என்று அருளிச்செய்கிறார். அதாவது, கண்ணனின் திருவடிகளை அடைய விரும்புமவர்கள் நாராயண நாமத்தை அவச்யம் நினைக்க வேண்டும் என்கிறார்.
நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் நாராயண நாமத்துக்கும் அதை உட்கொண்டுள்ள அஷ்டாக்ஷர மந்த்ரத்துக்கும் பெரிய முக்யத்வம் உள்ளது. இந்த அஷ்டாக்ஷர மந்த்ரமே திருமந்த்ரம் என்று கொண்டாடப்படுகிறது. ஒரு ஆசார்யன், ஒருவனைப் பஞ்ச ஸம்ஸ்காரம் மூலம் சிஷ்யனாக ஆக்கிக்கொள்ளும்போது, இம்மந்த்ரத்தை உபதேசிப்பது வழக்கம். இந்தத் திருமந்த்ரத்தை வேதங்களும், ரிஷிகளும், ஆழ்வார்களும், ஆசார்யர்களும் மிகவும் கொண்டாடியுள்ளார்கள். இந்தத் திருமந்த்ரத்தின் மூலம் நம் வாழ்க்கைக்குத் தேவையான அர்த்த பஞ்சகத்தை அறிகிறோம். ஜீவாத்ம ஸ்வரூபம் (நம்முடைய இயற்கைத் தன்மை), பரமாத்ம ஸ்வரூபம் (பகவானுடைய இயற்கைத் தன்மை), உபாய ஸ்வரூபம் (பகவானை நாம் அடைவதற்கான வழி), உபேய ஸ்வரூபம் (அவனை அடைந்ததற்குப் பிறகு நமது குறிக்கோள்) மற்றும் விரோதி ஸ்வரூபம் (நமக்கு அவனை அடைவதற்கு இத்தனை நாள் தடையாக இருந்தவை) ஆகிய இவையே அர்த்த பஞ்சகம் என்று சொல்லப்படும்.
இப்படிப்பட்ட உயர்ந்த விஷயங்களைத் தெரிந்து கொண்டு பூர்வாசார்யர்கள் காட்டிய வழியில் வாழ்வதே நமக்கு இவ்வுலகத்தில் செய்யவேண்டியது. பிறகு, எம்பெருமானை அடைந்து அவனுக்கு எப்போதும் தொண்டு செய்ய வேண்டும்.
எம்பெருமானுடைய குணங்களையும் லீலைகளையும் எப்போதும் அனுபவித்துக் கொண்டிருந்தால் நம் பூர்வர்கள் காட்டிய வழியில் வாழ்வது ஸுலபமாக இருக்கும். அந்த விதத்தில் கண்ணன் எம்பெருமானின் லீலைகளை அவற்றின் தாத்பர்யங்களோடு சேர்த்து ஓரளவுக்கு இங்கே அனுபவித்துள்ளோம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஜீயர் திருவடிகளே சரணம்
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org