ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
தத்வ த்ரயம் ஐப்பசி மாத அநுபவம்
<< பிள்ளை லோகாசார்யர் – முமுக்ஷுப்படி அனுபவம்
ஐப்பசியில் அவதரித்த ஆழ்வார்கள் ஆசார்யர்கள் அனுபவம் நமக்குத் ப்ராப்தமாகிறது. ஐப்பசியில் அவதரித்தோரில் மிகப் பெருங்கருணையாளரான உலகாசிரியர் அருளிய தத்வ த்ரயத்தை அதற்கு மாமுனிகள் அருளிய வ்யாக்யான அவதாரிகை மூலமாகச் சிறிதே அநுபவிப்போம் .
எம்பெருமானார், உலகாசிரியர், மணவாள மாமுனிகள் – திருப்பவளவண்ணம், காஞ்சி
”அநாதி மாயயா ஸுப்த” என்றதில் சொன்னபடி ஜீவாத்மாக்கள் அநாதி காலமாக ஆத்மாவும் வஸ்துக்களும் வேறு என்று உணராமல் அஞ்ஞான இருளில் மூழ்கி உள்ளதால் ஆத்ம வஸ்து எம்பெருமானுக்கே உரியது அவன் அநுபவத்துக்கே ஏற்பட்டது என்று அறிகிலர்.
தெளிவான ஞானமில்லாமையால்,
- ஜீவாத்மா “தேவோஹம் மனுஷ்யோஹம்” (நானே தேவன் நானே மநுஷ்யன்) இந்த அஸ்திர சரீரமே நான் என நினைக்கிறான்.
- தான் சரீரத்தினின்றும் வேறுபட்டவன் என்றுணர்ந்தாலும் நானே ஈச்வரன் என்றும் நானே அநுபவிப்பவன் என்றும் ஸ்வாதந்த்ர்யம் கொண்டாடுகிறான்.
- தான் பகவானின் தொண்டன் என்று உணர்ந்தாலும் பகவத் கைங்கர்யத்தில் எப்போதும் இல்லாமல் உலக அநுபவங்களில் தன்னை இழக்கிறான்.
இதையெல்லாம் தீர்க்கமாக எண்ணிப் பார்த்து அளவற்ற கருணையினால் பிள்ளை லோகாசார்யர் ஜீவர்களுக்கு எளிதில் விளங்கும்படியாக சித் அசித் ஈச்வரன் எனும் மூன்று உறுதிப் பொருள்களை தத்வ த்ரயம் எனும் ப்ரபந்த முகேன அருளிச்செய்தார்.
நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர், பெரியவாச்சான் பிள்ளை போன்ற பூர்வாசார்யர்கள் கிரந்த நிர்மாணம் செய்ததும் இதற்காகவேயாம்.
இங்கே சில கேள்விகள்.
நம் பூர்வாசார்யர்கள்,
- அஹங்காரம் அறவே அற்றவர்கள்
- எப்போதும் சேதனர் நலனையே நினைப்பவர்கள்
- தம் சுய லாபம் க்யாதி பற்றி நினையாதவர்கள்
இவ்வாறு ஆகில் ஏன் மிகப் பலர் ஒரே விஷயம் பற்றி எழுத வேண்டும்? முதல் ஒரு கிரந்தம் ஏற்று அதையே பின்னும் விளக்கிப் போந்தால் போதாதோ? (இதற்கு மாமுனிகளின் அழகிய விளக்கத்தைக் கண்டு களிக்கவும்.)
- ஆழ்வார்கள் அனைவரும் பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள் (ஒரே கழுத்தை உடையவர்கள்). பல ஆழ்வார்களும் ஒரே விஷயத்தைப் பற்றிப் பாடினாலும் அவர்களின் ப்ராமாணிகத்வத்தால் விஷயம் கெளரவம் பெற்றது. அதேபோல ஆசார்யர்களும் பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள். ஆசார்யர்கள் பலரும் ஒரே விஷயத்தைப் பற்றிச் சொன்னால் கேட்போருக்கு விசுவாசமுண்டாகும்.
- மேலும் ஒரு க்ரந்தம் சுருங்கச் சொல்வதை மற்றொன்று விரித்துரைக்கும் ஆகவே இவை ஒன்றுக்கொன்று துணை நூல்கள் போலாம்.
ஒரே விஷயத்தை விளக்க ஒரே ஆசார்யர் பல க்ரந்தங்கள் எழுதும் விஷயத்திலும் இதே கொள்கை ஏற்புடையதாக இருக்கும். விஷயங்கள் தெளிவாக நிர்ணயிக்கப்படும் மேலும் நூல்கள் ஒன்றுக்கொன்று துணையாக இருக்கும்.
இவ்வாறு தத்வ த்ரயத்துக்கு மாமுனிகள் முன்னுரை அழகாக மற்றும் சுருக்கமாக நமக்கு நெஞ்சில் தேக்கலாம் செல்வமாக நின்றது. இந்த க்ரந்தம் அறிதற்கரிய விசிஷ்டாத்வைதக் கொள்கைகளை எளிய முறையில் விளக்குவதாகக் கொண்டாடப் படுகிறது. இந்த க்ரந்தம் ஓர் ஆசார்யர் திருவடிக்கீழ் கேட்டு அவரால் ஆசீர்வதிக்கப் படல் நன்றாம்.
அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்
ஆதாரம்: https://granthams.koyil.org/2013/10/aippasi-anubhavam-pillai-lokacharyar-tattva-trayam/
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org
Sir, is the original version (mani pravaham) of tatva thrayam available? If so, pl mail me that. I serached in all your links, im not able to download. my email is thirumalairaja@gmail.com. Thank you.