வேதார்த்த ஸங்க்ரஹம் 13

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வேதார்த்த ஸங்க்ரஹம்

<< பகுதி 12

வேதங்களின் உட்பொருள் உணர்தல்

அத்வைத விமர்சம்

பத்தி 45

ப்ரதிவாதி பேசுகிறார்

அஸத்கார்யவாத மறுப்பு மாயை ஓர் அடித்தளமின்றி இராது எனக் காட்ட மட்டுமே அமைகிறது. ஒரே ஓர் உண்மை மட்டுமே உள்ளது: சுத்த ப்ரஞ்ஞை. அதில் அவித்யையால் பிறழ்வு ஏற்பட்டு ப்ரபஞ்சமாகக் காட்சி அளிக்கிறது. அஸத்கார்ய வாத மறுப்பு அடிப்படையாய் இயங்கும் அஞ்ஞானமே காரணம் என அறிவதே.   

இதற்கு நம் பதில்:

இது அவ்வாறன்று. ஒன்றை அறிவது அனைத்தையும் அறிய வழி என்பது அஸத்கார்யவாதத்தை மறுத்து ஸத்கார்ய வாதத்தை நிலைநிறுத்தவேயாம்!

பத்தி 46

மேலும் உங்கள் கோட்பாட்டில் மாயை என்பது ஓர் அடித்தளம் இன்றி அமையாது என்பதை நிலைநாட்டுவதே வீண்.

நீங்கள் மாயையை உருவாக்கும் குறை (உபாதி) உண்மை என்பதை ஒப்புக்கொண்டாலே அந்தக் குறையின் அடித்தளம் உண்மை என்பது ஒப்புக்கொண்டதாகிவிடும். அப்போதுதான் உண்மையற்ற பொய்மை உருவாகிறது என்பதை ஸ்தாபித்தவராவீர்கள்.

ஆனால் உங்களுக்கோ குறைகள் பொய்யானவை, அக்குறைகளின் அடித்தளங்களே பொய்யானவை ஆகவே பொய்யான அடிப்படையில் பொய்யான ப்ரஞ்ஞையை நிரூபிக்கிறீர்கள். ஆகில், அடித்தளமற்ற பொய்மையை நீங்கள் மறுதலிக்க வேண்டுமே!

கருத்துரை

இருதரப்பினரும் அஸத்கார்யவாதம் மறுக்கப்படுவதை ஒப்புக்கொள்கிறார்கள்; ஆனால் அதை மறுப்பதன் மூலம் ஸ்தாபிக்கப் படுவதை ஏற்பதில் முரண்படுகிறார்கள். அத்வைதி விவர்த்த  வாதம் செய்கிறார், விசிஷ்டாத்வைதி ஸத்கார்ய வாதத்தை ஸ்தாபிப்பதே இப்பத்தியின் நோக்கம் என்கிறார்.

அத்வைதி மாயையாகிய இப்ரபஞ்சத்தை சுத்த ப்ரஞ்ஞையில் வந்த ஒரு பொய்மை என்கிறார். அவர், அடித்தளமில்லாமல் ஒரு மாயை நிற்காது என ஸ்தாபிப்பதற்காக அஸத்கார்ய வாதத்தை எடுத்தாள்கிறார்.

விசிஷ்டாத்வைதி இதை இரு படிகளால் மறுத்துரைக்கிறார்:

  1. இந்த வேத வாக்கியம் ஒன்றை அறிவதால் அனைத்தும் அறியப்பட்டதாகிறது என்று தொடங்கியது. பொய், உண்மையற்றது என்பன இந்தப்பிரகரணத்துக்குச் சேராது. பிறகு உதாஹரிக்கப்படும் களி மண், பானை உதாஹரணமும் சேராது  ஏனெனில் அடித்தளம் பொய் என இது காட்டவில்லை.
  2. ஒரு பொய்க்கு அடித்தளம் வேணும் என நிரூபிப்பது அத்வைதிக்குத் தேவையற்றது. அவர் கோட்பாட்டில் ப்ரஞ்ஞை என்பது மாயையின் அடித்தளமன்று. அத்வைதி இதைத்தான் நிரூபிக்க வேண்டும். இதன் எதிர்மறையை அவர் ஸ்தாபித்தால், சுத்த ப்ரஞ்ஞை அல்லது ப்ரஹ்மம் குறைகளுக்குட்பட்டது என்றாகிவிடும்! ஆகவேதான் ஆசிரியர் தொடக்கத்திலேயே ப்ரஹ்மத்துக்கே அஞ்ஞானம் ஏற்படுகிறது என்கிறார்.

பத்தி 47

உரிச்சொற்கள் போன்றவற்றால் “ப்ரஹ்மம் என்பது ஸத்யம், ஞானம், ஆனந்தம்” என்பனவற்றால் ப்ரஹ்மத்துக்குப் பல இயல்புகள் காட்டப்படுகின்றன. இவற்றைப் புரிந்துகொள்ளும் விதம் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதில் மாறாட்டமில்லை.

கருத்துரை

வேத வாக்யங்கள் “நேதி நேதி” என்பன போன்றவற்றால் “இப்படி இல்லை, இப்படி இல்லை” என்பதனால் எதை மறுக்கின்றன என்பது தெளிய வேண்டும். “ஒன்று வடிவுள்ளது, மற்றொன்று வடிவமில்லாதது” என்பன போலும் வாக்யங்களைக் கூறக்கூடும். வேதங்கள் முதலில் ப்ரபஞ்சம் முழுதும் ப்ரஹ்மத்தின் வடிவம் என்று சொல்லி, பின்னர் அது வடிவமற்றது எனச் சொல்லும் என்பது அஸம்பாவிதம், முறையற்றது. முன்னால்  தெரியாததை அது சொல்லாது. அல்லது சொல்லி, முற்றாக மறுக்காது. அழுக்குப் போகத் துவைப்பதைவிடக் கறை படியாமல் இருப்பது நன்றன்றோ!

ஆசிரியர் வேதம் ஒன்றை உபதேசித்துவிட்டு அதன்பின் ஒவ்வொன்றையும் மறுக்கிறது என்பது பகுத்தறிவுக்கு முரணானது என்கிறார். இவ்வாறு அவர் அத்வைதியின் “நேதி நேதி”க்கான விளக்கத்தை மறுக்கிறார்.

பத்தி 48

ஆகில், “நேதி நேதி”யின் பொருள்தான் என்ன?

வேதாந்த ஸூத்ரகாரர் 3.2.22ல் “நேதி நேதி” என்பது முந்தைய ஸூத்ரங்களில் சொன்னவற்றோடு ப்ரஹ்மம் அடங்கிவிட்டது என்பதில்லை என வலியுறுத்துவதே என்கிறார். இதுவே சரியான பொருள் ஏனெனில் மேலே ஸூத்ரங்களே ‘ப்ரஹ்மனே உண்மைகளில் எல்லாம் உண்மை, அதிலிருந்தே ஸத்யமான  வாழ்வாதாரங்கள் வருகின்றன அவை யாவுமே ஸத்யம்’ எனது தொடர்ந்து ஓதுகின்றன.

பத்தி 49

ப்ரதிவாதி, ‘இதோ இங்கே பல என்பதில்லை’ என்பது பன்மையை மறுப்பதன்றோ என்பாராகில் நாம் சொல்வோம்:

இப்படி இவ்வாக்கியம் அமைந்திருப்பினும், அதே வேதப்பகுதி ‘அவனே யாவற்றுக்கும் அரசன், அவனே யாவற்றுக்கும் நியந்தா’ என ப்ரஹ்மமே யாவற்றுக்கும் ஸ்வாமி, யாவும் அவன் சரீரமே, அவன் யாவற்றிலும் எல்லா நிலைகளிலும் உளன் என்கிறது. இந்த யாவர்க்கும் ப்ரபுவானவன் ஒருவனே. வேதங்கள் ப்ரஹ்மத்தைத் தம் ஆத்மாவாக அடையாத எந்த ஒரு வஸ்துவும் உண்டு என ஏற்கவில்லை. இந்த மறுப்பு உங்களுக்கு ஸாதகமன்றே! ப்ரஹ்மத்துக்குத் தனித்தனி வெவ்வேறு இயல்புகள் உண்டென்பதை மறுக்கும் ஒரு வேத வாக்யமும் இல்லையே.

பத்தி 50

ஓரியல்பும் அற்றதாய், வெறும் ப்ரஞ்ஞா ரூபமாய் அஞ்ஞானத்தால் தன்னைத் தானே வேறாகப் பார்க்கும் ப்ரஹ்மத்தை எங்கும் ஓதவில்லை. ப்ரஹ்மத்துக்கு ஞானம் ஓர் இயல்பு என்று இல்லாமல், அதுவே ஞானம் எனில் அது தன்னை எவ்வாறு இயல்பின் வேறாய்க் காட்டும்? இதன் தனித்த தன்மையை மறுப்பது இதை அழிப்பதே யாகும்.

ப்ரஞ்ஞை என்பது  ஒளி ஆகில், உண்மை ஆகில், அது அஞ்ஞானத்தால் மறைக்கப் படுகிறது என்பது குழந்தைத்தனமானது. அஞ்ஞானம் எப்படி அதனை இருட்டடித்து அல்லது அணைக்க முடியும்?

ஒளி நித்யமானது என்று அறுதியிடப்படுகிறது என்பதால்  அஞ்ஞானம் ப்ரஹ்மத்தை மறைக்க முடியாது. ப்ரஹ்மம் பன்மையைப் பார்க்கிறது. இந்த விசித்திரக் கோட்பாடு அறிவாளிகளின் அகராதியைத் தாண்டுகிறது!

கருத்துரைகள்

ஆசிரியர் பன்மையின் அடிப்படையை ஆய்கிறார். அத்வைதி சுத்த ப்ரஞ்ஞை அஞ்ஞானத்தால் மறைக்கப்பட்டு மாயையான பன்மையைக் காண்கிறது என்கிறார்.

ஆனால் முன் பகுதிகளில் விளக்கியதுபோல் மறைக்கப்படும்போது மாயை ஆகும் இயல்பு ப்ரஹ்மத்துக்கு இருந்தால் மட்டுமே இக்கோட்பாடு நிற்கும். ஆனால் அத்வைதியின் ப்ரஹ்மம் இயல்பு அற்றவன் என்பதால் இப்படிப் பட்ட மறைப்பு ப்ரஹ்மத்துக்கே அழிவாகும். ப்ரஹ்மத்துக்கு வெளியே அவனை அழிக்க எதுவுமில்லை அவன் நித்யன் என்பதால் அழிவும் இல்லை. ப்ரஹ்மம் நித்யன், சுத்த ப்ரஞ்ஞன் ஆகவே ஒளிர்பவன். இவனை மறைக்க முடியாது. ஆனால் அத்வைதி இவனை அஞ்ஞானம் மறைக்கிறது என்கிறார். ஒன்று ப்ரஹ்மம் அழிக்கப் படக் கூடியவன், பன்மை இயல்வினன் அல்லது அஞ்ஞானம் முக்கியம் பெறுகிறது. இதனால் பன்மை நிகழ்கிறது. இது மேலும் முரண்பாடுகளையே விளைக்கும்.  

ஆதாரம்: https://granthams.koyil.org/2018/03/12/vedartha-sangraham-13-english/

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment