க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 5 – த்ருணாவர்த்தாஸுர வதம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< 4 – சகடாஸுர வதம்

Salvation of Trnavarta -- Krsna, The Supreme Personality of Godhead

க்ருஷ்ணாவதாரத்தில், எம்பெருமான் தவழ்ந்த பருவத்திலிருந்து மெதுவாக எழுந்து அமரக்கூடிய பருவத்தில் நடந்த ஒரு சரித்ரத்தை இங்கே அனுபவிக்கலாம்.

ஒரு முறை திருவாய்ப்பாடியில் கண்ணன் தரையில் வீற்றிருந்தபொழுது கம்ஸனால் ஏவப்பட்ட த்ருணாவர்த்தன் என்னும் அஸுரன் அஙே வந்து சேர்ந்தான். அவன் ஒரு பெரிய புயல் காற்றின் வடிவிலே வந்து தோன்றி எம்பெருமானை அழித்து விடலாம் என்று நினைத்திருந்தான்.

முதலிலே அங்கே ஒரு பெரிய சூறாவளிக் காற்றை ஏற்படுத்தி எல்லா இடங்களிலும் புழுதி கிளம்பும்படிப் பண்ணி, கண்ணனைத் தூக்கிக்கொண்டு ஆகாசத்தை அடைந்து, அவ்வூரில் இருந்த அனைவரின் கண்களையும் தூசியால் மறைத்தான். மேலும் பெரிய ஓசையும் ஏற்படுத்தி எல்லாரும் நடுங்கும்படிப் பண்ணினான்.

அப்பொழுது அங்கே இருந்த யசோதைப் பிராட்டி, கண்ணனைக் காண முடியாமல், நடப்பது ஒன்றும் தெரியாமல் திகைத்து, கீழே விழுந்து அழத் தொடங்கினாள். அங்கிருந்த கோபியரும் அதே போல யசோதையுடன் சேர்ந்து அழத் தொடங்கினார்கள்.

மேலே சென்ற த்ருணாவர்த்தன், கண்ணனைக் கொல்லலாம் என்று பார்த்தான். ஆனால் கண்ணனோ, தன்னை மிகவும் கனமாக ஆக்கிக் கொண்டு அந்த அஸுரனாலே தன்னைத் தாங்க முடியாமல் செய்தான். அதன் பிறகு அந்த அஸுரன் கண்ணனுடைய கனத்தைப் பொறுக்க முடியாமல் மூச்சு முட்டி மாண்டு பெருத்த ஓசையுடன் கீழே வந்து விழுந்தான். அங்கிருந்த அனைவரும் அதைக் கண்டு மிகவும் பயந்தார்கள். அங்கிருந்த கோபியர்கள் எந்த ஆபத்தும் இல்லாமல் நன்றாகச் சிரித்துக்கொண்டு அந்த அஸுரன் உடம்பின் மீது இருந்த கண்ணனை எடுத்து யசோதையிடத்தில் அளித்தார்கள்.

இதில் இருக்கும் தாத்பர்யங்கள்,

  • எதிரிகள் எத்தனை பெரிய சக்தியுடன் எம்பெருமானை எதிர்க்க வந்தாலும் எம்பெருமான் எளிதில் எதிரிகளை வீழ்த்தி விடுவான்.
  • ஒவ்வொரு ஸமயமும் ஆபத்து வரும்பொழுது தன்னையும் ரக்ஷித்துக் கொண்டு இவ்வுலகையும் ரக்ஷிப்பவன் எம்பெருமானே. அதனால் நாமும் எப்பொழுதும் அவனையே தஞ்சமாகப் பற்ற வேண்டும்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment