க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 31 – தேவகி மற்றும் வஸுதேவரை சிறையிலிருந்து விடுவித்தல்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும்

<< கம்ஸ வதம்

WhatsApp Image 2023-10-07 at 9.26.57 PM

கண்ணன் எம்பெருமான் கம்ஸனை வீழ்த்திய பிறகு நேராகத் தன் தாய் தந்தையரான தேவகி மற்றும் வஸுதேவரிடத்திலே சென்றான். அவர்கள் இருவருக்கும் கண்ணனைக் கண்டவுடன் மிகவும் ஆனந்தம் ஏற்பட்டது. கண்ணனும் அவர்களுடைய விலங்குகளை அறுத்து அவர்கள் துன்பத்தைப் போக்கினான். கண்ணனும் பலராமனும் தங்கள் தாய் தந்தையரை வணங்கினார்கள்.

தேவகிப் பிராட்டிக்குக் கண்ணனை இத்தனை காலம் பிரிந்து இருந்ததை நினைத்து மிகவும் வருத்தம் ஏற்பட்டது. அந்த வருத்தம் எல்லாம் தீரும்படி கண்ணன் அவளிடத்தில் பேரன்பைக் காட்டினான். அப்பொழுது தேவகிக்குத் தாயன்பினால் தன்னடையே பால் சுரக்க, அதை கண்ணன் எம்பெருமானும் பருகினான் என்று பெரியோர்கள் காட்டுவார்கள். இந்த விஷயத்தை நஞ்சீயருக்கு பட்டர் விளக்கும் விதத்தில் குருபரம்பரா ப்ரபாவத்தில் காட்டப்பட்டுள்ளது.

இதற்குப் பிறகு கண்ணன் எம்பெர்மான் உக்ரஸேனருக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்தான்.

ஆழ்வார்கள் பல பாசுரங்களில் கண்ணன் எம்பெருமான் தன் பெற்றோர்களின் துன்பத்தைப் போக்குவதை அனுபவித்துள்ளார்கள். திருமங்கை ஆழ்வார் தன் பெரிய திருமொழியில் “தந்தை காலில் பெரு விலங்கு தாள் அவிழ நள்ளிருட்கண் வந்த எந்தை பெருமானார்” என்றும் “தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல்” என்றும் அனுபவித்துள்ளார். குலசேகர ஆழ்வார் தன் பெருமாள் திருமொழியில் “ஆலை நீள் கரும்பு” என்கிற பதிகம் முழுக்க கண்ணன் எம்பெருமானின் சிறு வயது லீலைகளை இழந்த தேவகி புலம்பிய புலம்பலாக அருளிச்செய்துள்ளார்.

இதில் உள்ள தாத்பர்யங்கள்:

  • எம்பெருமானுடைய தாய் தந்தையராக இருந்தாலும் இந்த ஸம்ஸாரத்தில் துன்பங்களைத் தவிர்க்க முடியாது. அவர்களுக்கும் துன்பத்தைப் போக்குபவன் அந்த எம்பெருமானே என்பதும் உணரத்தக்கது.
  • எம்பெருமான் அடியார்களுக்கு உதவி செய்வதற்குச் சற்று கால தாமதம் ஆனாலும், தக்க ஸமயத்தில் அவர்களைக் கண்டிப்பாக ரக்ஷிப்பான்,

இது போன்ற பல ஆச்சர்யச் செயல்களை மேலே தொடர்ந்து அனுபவிப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment