ஐப்பசி மாத அநுபவம் – பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி அனுபவம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஐப்பசி மாத அநுபவம்

<< பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி அனுபவம்

நம்பிள்ளை அருளிய மூன்றாம் திருவந்தாதி வ்யாக்யானத்திற்கு அவரது அவதாரிகையின் இந்த நேரடித் தமிழாக்கம் ஸ்ரீ உவே எம் ஏ வேங்கட க்ருஷ்ணன் ஸ்வாமியின் அத்புதப் பதிப்பைத் தழுவியது. நம்பிள்ளையின் வ்யாக்யான ரஸாநுபவத்துக்கு இப்பதிப்பே பெருந்துணை.

நம்பிள்ளைதிருவல்லிக்கேணி

பொய்கை ஆழ்வார் பூதத்தாழ்வார் இருவரின் க்ருபா கடாக்ஷத்தால் பெரியபிராட்டியார் கேள்வனான எம்பெருமானின் திவ்ய தர்சனம் தமக்குக் கிட்டிட்டென்கிறார் பேயாழ்வார். எம்பெருமான் ரத்நாகரம் போலுளான், அதாவது பல நன் மணிகளும் முத்தும் பவழமும் நிறைந்த கடல் போல் எல்லா கல்யாண குணங்களும் நிறைந்துள்ளவன், இவ்வாறு எம்பெருமான் மற்றும் பிராட்டியின் தர்சனத்தால் வந்த ஆனந்த மிகுதியால், தம் மனம் நினைந்ததைச் சொன்னதால் அவர் பேயர் எனப்பட்டார்.  குலசேகர பெருமாளும் தம்மை, “பேயரே எனக்கு யாவரும் யானுமோர் பேயனே எவர்க்கும்…பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே ” என்று லௌகிக நோக்குள்ளோர்க்குத் தாம் எம்பெருமானையே நினைத்திருப்பதால் வித்யாசமாகத் தெரிவதைச் சொன்னார்.

புஷ்பவல்லித் தாயார் – தேஹளீசப் பெருமாள் (திவ்ய தம்பதி)

பொய்கை ஆழ்வாரின் முதல் திருவந்தாதி எம்பெருமான் அருளிய மாசற்ற ஞானம் கனிந்த பக்தி வெளிப்பாடு. இது பர பக்தி. பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி இறுதி பாசுரத்தில் அருளியது போல் “என்றன் அளவன்றால் யானுடைய அன்பு” என பரபக்தியின் இறுதி நிலை அது பரஜ்ஞானம் தொடங்கும் நிலை. இதன் அடுத்த நிலையே பரமபக்தி மூலம் பகவானை நேராகக் காணும் பகவத் ஸாக்ஷாத்காரம். பேயாழ்வார் இங்கே தான் எம்பெருமானைப் பிராட்டியுடன் சேர்ந்து அவனே காட்டக் கண்டு தரிசித்ததை விளக்குகிறார்.

பொய்கை ஆழ்வார் எம்பெருமானே நித்ய விபூதி லீலா விபூதி எனும் இரு விபூதிகளுக்கும் நாதன்  என நிறுவினார். பூதத்தாழ்வார் இந்த உடைமைகளை உடையவன் நாராயணனே என்றார். பேயாழ்வார் இத்தோடு அவனுக்கு ஸ்ரீ ஸம்பந்தமும் உள்ளதைக் காட்டினார்.  .

“வையம் தகளியா” என முதல் திருவந்தாதி ஞானத்தைக் காட்டியது. “அன்பே தகளியா” என இரண்டாம் திருவந்தாதி முதிர்ந்த ஞானத்தை, பரபக்தியைக் காட்டியது.  இந்த மூன்றாம் திருவந்தாதி அடுத்த நிலையான பகவத் ஸாக்ஷாத்காரத்தை விளக்குகிறது.

பொய்கை ஆழ்வார் சேஷி எம்பெருமான், அவனே நியந்தா எனக் காட்டினார். பூதத்தாழ்வார் சேஷன் எம்பெருமானிடம் கைங்கர்யம் பூண்டவன் என்ற தொண்டனின் நிலை காட்டினார். பேயாழ்வார் எம்பெருமானின் காக்கும் தன்மைக்கும் ஆத்மாவின் அடிமைத் தன்மைக்கும் காரணமான பிராட்டி ஸம்பந்தத்தை விளக்குகிறார். அதாவது, பிராட்டியே எம்பெருமானின் காக்கும் தன்மையை அவனுக்கு உணர்த்தியும் ஆத்மாவை எம்பெருமானிடத்தில் சரணடையச் செய்தும், இருவர் ஸ்வரூபத்தையும் நிலை நாட்டுகிறாள்.

தேவர்களுக்கு எம்பெருமான் கடலைக் கடைந்தபோது அவர்களுக்கு அமுது கிடைத்தாற்போல் பொய்கையார் பூதத்தார் முயற்சியில் விளக்கெரிய அமுதம் போன்ற திருமகளோடு கூடிய திவ்ய தம்பதி சேவை பேயாழ்வாருக்குக் கிடைத்தது.

இப்படி மூன்றாம் திருவந்தாதிக்கு வ்யாக்யான அவதாரிகை அமைந்துள்ளது.

மூன்றாம் திருவந்தாதிக்குக் குருகைக் காவலப்பன் அருளிய தனியனும் அதற்கு எளிய விவரணமும்:

பேயாழ்வார் – மயிலாப்பூர்

சீராரும் மாடத் திருக்கோவலூர் அதனுள்
காரார் கருமுகிலைக் காணப் புக்கு
ஓராத் திருக்கண்டேன் என்று உரைத்த சீரான் கழலே
உரைக் கண்டாய் நெஞ்சே உகந்து

என் நெஞ்சே! “அழகிய மாடங்கள் அமைந்த திருக்கோவிலூரில் கருமுகிலைக் காணச் சென்றேன். அளப்பரிய அழகுள்ள திருமகளோடு திருமாலைக் கண்டேன்” எனப் பாடிய சீர் பொருந்திய பேயாழ்வார் திருவடிகளையே நினைத்து உரைப்பாயாக.

இந்த அவதாரிகைகளின் சுருக்கம் – பரபக்தி, பரஜ்ஞானம், பரமபக்தி இவையே இம்மூன்று நிலைகள். நம்பிள்ளை அருளியபடி ஆழ்வார்கள் எல்லார்க்கும் இந்த எல்லா நிலைகளுமுண்டு எனினும் அருளிச் செயலின் முதல் மூன்று திவ்ய ப்ரபந்தங்களில் இந்நிலைகள் தெளிவாகின்றன.  நம்மாழ்வார் ஒவ்வொரு திவ்ய தேசத்தில் அர்ச்சாவதாரத்தில் ஓரொரு கல்யாண குணத்தை அனுபவித்தாலும் எல்லா அர்ச்சைகளிலும் இவ்வெல்லாக் குணங்களும் உண்டன்றோ!

நம்மாழ்வார் (காஞ்சி), நாயனார் (ஓவியம்), மாமுனிகள் (காஞ்சி)

அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் தம் “ஆசார்ய ஹ்ருதயம்” என்னும் அத்புத க்ரந்தத்தில் இம்மூன்று நிலைகளையும் சூர்ணிகை 233ல் மிக அழகாகக் காட்டுகிறார்:

இவை ஞான தர்சன ப்ராப்தி அவஸ்தைகள்.

பரபக்தி, பரஜ்ஞானம், பரமபக்தி  என்பது ஞானம் (எம்பெருமான் பற்றி சுத்த அறிவு), தர்சனம் , ப்ராப்தி (பிரிவு தரியாமை) என்னும் நிலைகள்.

மாமுனிகள் இதை  எம்பெருமானாரின் ப்ரார்த்தனையையும் அதற்கு எம்பெருமானின் பதிலையும் கொண்டு அழகாக விளக்கியுள்ளார். இதை சரணாகதி கத்யத்தில் எம்பெருமானார் “பரபக்தி, பரஜ்ஞான, பரமபக்தி ஏக ஸ்வபாவம் மாம் குருஷ்வ” – அடியேனுக்கு பர பக்தி , பர ஞானம்,பரம பக்தி நிறைய அருள்வாய்! என்று விண்ணப்பிக்கிறார்.

எம்பெருமான் அதற்கு “மத்ஜ்ஞான தர்சன ப்ராப்திஷு நிஸ்ஸம்சயஸ்ஸுகமாஸ்வ”  (ஒரு ஸந்தேஹமும் இல்லாமல் என்னைப் பற்றிய ஞானம், என் தர்சனம், என்னை அடையும் ப்ராப்தி இவற்றுடன் ஸ்ரீரங்கத்தில் ஸுகமாக இருப்பீராக) என்று பதிலளிக்கிறான்.

மாமுனிகள் மேலும் இந்த மூன்று நிலைகளைத் தெளிவாக விளக்கியுள்ளார்.

  • பரபக்தி – ஞானம் – எம்பெருமானோடிருக்கும்போது மகிழ்ச்சி, பிரிவில் துக்கம்.
  • பரஜ்ஞானம் – எம்பெருமானின் ஸ்வரூபம், குணம் இவற்றையே எப்போதும் உட்கண்ணால் கண்டு, நிலைத்திருப்பது.
  • பரமபக்தி – இந்த உள்மனக் காட்சியில் எப்போதும் இருந்து, பிரிவில் தரியாமல் அவனை உடனே அடைய விரும்புவது/த்வரிப்பது.

இவ்வாறு நம்பிள்ளை க்ருபையில் முதலாழ்வார்கள் அநுபவம் பெற்றோம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம் : https://granthams.koyil.org/2013/10/aippasi-anubhavam-peyazhwar/

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

Leave a Comment