த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 28

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 27 சந்தமிகு தமிழ் மறையோன், வேதாந்த குரு (த்ரமிடோபநிஷத் ப்ரபாவ  ஸர்வஸ்வம் , இறுதிப் பகுதி) ஸம்ஸ்க்ருத வேதங்களைப் பயில அருளிச்செயலை அறிந்துகொள்வது அத்தியாவசியம் என வேதாந்த தேசிகன் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறார். வேதாப்யாசம் செய்யாதவர்களுக்கு மட்டும் அருளிச்செயல் மற்றொரு வாய்ப்பு மட்டுமன்று. வேதங்களை பயில விரும்புமவர்களுக்கு அருளிச்செயல் அறிவின்றி வேதங்களின் பொருள்  அறிவதென்பது எளிதன்று. … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 27

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 26 பட்டரும் ஆழ்வார்களும் ஸ்ரீ பராசர பட்டர் ஸ்ரீவைஷ்ணவ மரபில் ஈடிணையற்ற மஹா மேதாவியாவார். ஸம்ப்ரதாயம் பற்றிய அவரது தெளிவு இணையற்றது, ஸித்தாந்தத்தில் அவரது ஞானம் ஸ்வாமியுடையதோடு மட்டுமே ஒப்பிடப்படக் கூடியது. ஆகவேதான் ஸ்வாமி ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்துக்கு அவரைக்கொண்டு பாஷ்யம் இடுவித்தது. இந்த பாஷ்யத்துக்கு பகவத் குண தர்ப்பணம் என்று பெயர். இவ்வுரை முழவதும் ஆழ்வார்களின் … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 26

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 25 ஆழ்வாரும் ஆழ்வானும் அதிமானுஷ்ஸ்தவத்தில்  மூன்றாம் ச்லோகமும் ஆழ்வானுக்கு ஆழ்வாரிடமுள்ள பக்தியைக் காட்டுகிறது: ஸ்ரீமத்-பராங்குச-முநீந்த்ர-மநோவிலாஸாத் தஜ்ஜாநுராகரஸமஜ்ஜநம் அஞ்ஜஸாப்ய I அத்யாப்யநாரதததுத்தித-ராகயோகம் ஸ்ரீரங்கராஜசரணாம்புஜம் உந்நயாம: I I    இந்த ச்லோகத்தின் உயிர்நாடியான பகுதி “ஸ்ரீரங்கராஜசரணாம்புஜம் உந்நயாம:” என்பது ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளைக் குறிக்கிறது. ஸாதாரண லௌகிகக் கவிகள் திருவடித் தாமரைகள் சிவந்ததன் காரணம் அவற்றின் மென்மை … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 25

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 24 பராங்குச பயோதி = நம்மாழ்வார் எனும் பாற்கடல் ஸ்வாமியின் திவ்ய க்ரந்தங்களில் ஆழ்வாரின் திருவாக்குப் ப்ரபாவம் எவ்வளவென அநுபவிக்கப் பல விஷயங்கள் பார்த்தோம்.ஸ்வாமி ஆழ்வாரிடம் எவ்வளவு பக்தியோடிருந்தார் என்றும் பார்த்தோம். இனி, பெரும்பாலும் வடமொழியில் க்ரந்தங்கள் சாதித்தருளிய மற்ற ஆசார்யர்களின் மீது ஆழ்வார் ப்ரபாவத்தை நாம் அனுபவிப்போம். ஆழ்வான் எனப் ப்ரசித்தரான  ஸ்வாமியின் சிஷ்யர் … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 24

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 23 அடிப்படை ஸித்தாந்தங்களை அருளிச்செயல் கொண்டு நிரூபித்தல் உபநிஷதங்கள் வெவ்வேறு பொருள்களைத் தருவது போலத் தோற்றும் வெவ்வேறு கூற்றுகளால் தொகுக்கப்பெற்றுள்ளன. பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் வேறுபாடில்லை எனத் தோற்றும் சில கூற்றுகள்  உள. பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உண்மையில் வேறுபாடு உண்டு எனும் கூற்றுகளும் உள. வேதாந்தத் தத்வவாதி எவருமே ஜீவாத்மக் கோட்பாடே தவறு எனக் கூறத்துணியார். அந்தத் … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 23

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 22   ஸ்ரீ ராமாநுஜரின் க்ரந்தங்களை ஆழ்ந்து கற்றல் ஸ்ரீ ராமாநுஜரின் க்ரந்தங்களைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவற்றை ஆழ்ந்து வாசிக்க வேண்டும். அவரது சொற்களின் உட்பொருளை மேலோட்டமான வாசிப்பில் தெரிந்துகொள்ள முடியாது.  ஆளவந்தார், ஆழ்வான், பட்டர், வேதாந்த தேசிகர் போன்றோரோடு ஒப்புநோக்கும்போது இது தெளியலாகும். வேறுபாடு நடை (சைலி), உட்கருத்து இரண்டிலுமுண்டு. இராமானுசரின் க்ரந்தங்களைச் சேவிக்கும் … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 22

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 21 ஸ்ரீ பாஷ்யத்தின் மூலம் ஆழ்வார் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறார் பாஷ்யத்தின் மங்கலச்லோகம் ஸ்ரீநிவாசனுக்கான  மங்களாசாசனம் மட்டுமன்று, அது நம்மாழ்வாருக்கான மங்களாசாசனமும் ஆகும். அதே மங்கலச்லோகம் நம்மாழ்வாரையும் எப்படிக்  குறிக்கிறது என்பதைப் பார்ப்போம். அகில-புவன -ஜந்ம -ஸ்தேம -பங்காதி -லீலே   அகிலபுவன ஸ் தேம  பங்காதியாய் இருப்பவன் எம்பெருமான். “தேன ஸஹ லீலா யஸ்ய” இந்த … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 21

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 20   தொடர்ந்து ஸ்ரீபாஷ்யத்தின் மங்கள ச்லோகத்துக்கு அருளிச்செயல் எவ்வாறு அடியானது என்று பார்ப்போம். வினத-விவித- பூத-வ்ராத- ரக்ஷைக-தீக்ஷே இந்த கூட்டுச்சொல்லின் நேர்பட்ட பொருள்தான் என்ன? வினத=சமர்ப்பிக்கப்பட்ட விவித=வெவ்வேறுபட்ட பூத=உயிர்வாழிகள்/ஆத்மாக்கள் வ்ராத=குழுக்கள் ரக்ஷைக தீக்ஷா=இவற்றின் ரக்ஷணம் ஒன்றே குறிக்கோளாய் உள்ளவன் இது எம்பெருமானுக்கேற்பட்ட வசனம், வெவ்வேறு வகைப்பட்ட ஆத்மாக்களை ரக்ஷிப்பதொன்றே லக்ஷ்யமானவன் என்று பொருள்படும். ஆயினும் இது … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 20

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 19 ஸ்ரீபாஷ்யம் மங்கலச்லோக அநுபவம் – முதல் பகுதி ஸ்வாமி ராமாநுசர் ஸ்ரீபாஷ்யத்தை இந்த அத்புத மங்கலச்லோகத்தொடு தொடங்குகிறார்: அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே                    விநத-விவித -பூத-வ்ராத-ரக்ஷைக-தீக்ஷே ச்ருதி -சிரஸி-விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே                 பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்திரூபா   பெரும் பேராசிரியராகிய இராமானுசர் அருளிச் செய்த இந்த ச்லோகம் அடியார் அனைவர்க்கும் ஸதா ஸர்வதா போக்ய … Read more

த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 19

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:   த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 18 வழிபாட்டில் அருளிச்செயல் அருளிச்செயல்களில் ஆழ்வார்களுக்கும் ஆசார்யர்களுக்கும் உள்ள ஈடுபாட்டைக் காட்ட எத்தனையோ சொல்லலாமாயினும். பண்டிதரோடு பாமரரோடு வாசியற ஸந்நிதிகளில் அவற்றை சேவித்தபடி எம்பெருமான் புறப்பாட்டுக்கு முன்கோஷ்டியாகப் போகும் சுவையை நன்கு அறிந்தேயிருப்பர். அருளிச்செயல் வல்லார் செவிக்கினிய அவற்றை ஓதியபடி வரும் பேரின்பக் காட்சி கண்கொள்ளாக் காட்சி. ஆழ்வார்களின் பாசுரங்களே எம்பெருமான் செவிக்கு மிக்க … Read more