ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – அன்றாடம் அனுஷ்டிக்கவேண்டியவை

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி

<<  தவிர்க்கப்படவேண்டிய அபசாரங்கள்

ஸ்ரீவைஷ்ணவர்கள் அறிந்து கொண்டு அனுஷ்டிக்க வேண்டிய நித்யானுஷ்டான க்ரமங்கள்:

 

  1. வர்ண, ஆச்ரம, ஞான பேதமின்றி ஸ்ரீவைஷ்ணவர்கள் யாவரையும் மதிப்போடு நடத்த வேண்டும். இதுவே எம்பெருமான் நம்மிடம் முதன்மையாக எதிர்பார்ப்பது,
  2. அஹங்கார மமகாரங்களோ பொருள்கள் மீது ஆசையோ இன்றி எளிமையாக வாழ்தல் அவசியம். நம் ஆத்மா அணு அளவில் உள்ளது. ஆனால் எம்பெருமான் விஷயங்கள் யாவும் அளவிறந்தன! நாம் எம்மாத்திரம்!
  3. ஸ்வாசார்யரோடு எப்போதும் தொடர்பில் இருத்தல் அவச்யம். இயன்ற அளவு ஆசார்யரின் திருமேனி, நிதி, லௌகிகத் தேவைகளைப் பூர்த்தி செய்வது சிஷ்யர் கடமை.
  4. ஸ்நானம், ஊர்த்வ புண்ட்ர தாரணம், ஸந்த்யா வந்தனம் இத்யாதி வர்ண, ஆச்ரமத்துக்குப் பொருந்திய நித்ய கர்மங்களை விடாது செய்ய வேண்டும். இதுவே அந்தர்/பஹிர் சுத்தி தந்து, மனோ திடமும் ஞான விகாசமும் தரும்.
  5. வெட்கமோ அச்சமோ இன்றி எப்போதும் ஊர்த்வ புண்ட்ர தாரணம் (திருமண்/ஸ்ரீ சூர்ணம்) அவச்யம் செய்யவேண்டும். நம் பகவானுக்கு நாம் அடிமை என்பதான இதில் துணிவு மற்றும் பெருமை அடைய வேண்டும்.
  6. பெருப்பெருத்த ஆசார்யர்களின் மரபில் வந்த நாம் சிறிதும் லஜ்ஜை இன்றி, நம் மரபு, வர்ணம் மற்றும் ஆச்ரமத்துக்குத் தக்க வேஷ்டி (கச்சம்), புடைவை (மடிசார்) அணிய வேண்டும்..
  7. எப்போதும் எம்பெருமான் ஆழ்வார் ஆசார்யர்களையே தொழுது, இந்த்ர, ருத்ரபரிவார, அக்னி, வருணன், நவக்ரஹாதிகளைத் தொழுவதை விட வேண்டும். எம்பெருமானுக்கும் ஜீவனுக்கும் பதி/பத்னி ஸம்பந்தமாதலால் ஆசார்யர்கள் தேவதாந்தர பஜனம் அறவே கூடாதென்றனர்.
  8. எம்பெருமான் பரம க்ருபையோடு அல்பர்களாகிய நம் இல்லங்களில் வந்து வசிப்பதால் நித்ய திருவாராதனம் அவசியம் என்று பூர்வர்கள் நமக்குக் காட்டினர். இல்லத்துப் பெருமாளைத் திருவாராதனம் செய்யாதிருப்பது அவனை உதாசீனம் செய்வதாம். இது மிகப் பெரும்பாவம், நம்மை நாசத்தில் தள்ளும். நாம் யாத்திரை செய்யும்போதும் எம்பெருமானை உடனே எழுந்தருளப்பண்ணிக் கொண்டு செல்ல வேண்டும், அப்படி இயலாவிடில் அவன் திருவாராதனம் தடை இன்றி விடாமல் நடக்க, தக்க ஏற்பாடாவது செய்தே தீர வேண்டும். இதை இந்த இணைய தலத்தில் விரிவாகப் பார்க்கவும்: https://granthams.koyil.org/2012/07/srivaishnava-thiruvaaraadhanam/.
  9. வர்ண, ஆச்ரம விதிக்குட்பட்ட சாஸ்த்ர மர்யாதையான ஆகாரமே உட்கொள்ள வேண்டும். அதுவும் எம்பெருமானுக்குக் கண்டருளப் பட்ட பிரசாதமாய் இருக்க வேண்டும். பிரசாதமல்லாதவற்றை ஏற்கலாகாது. இந்த இணைய தளத்தில் ஆகார நியமங்கள் பற்றிப் பார்க்கவும்: https://granthams.koyil.org/2012/07/srivaishnava-aahaara-niyamam_28/ , https://granthams.koyil.org/2012/08/srivaishnava-ahara-niyamam-q-a/.
  10. ஸ்ரீ வைஷ்ணவ ஸஹவாஸத்தை நாடவும்.அவர்களோடு அர்த்தமுள்ள பகவத் விஷயமான ஸம்பாஷணைகள் நல்வாழ்சிக்கு உதவும்.
  11. திவ்ய தேசங்கள், ஆழ்வார்/ஆசார்யர்கள் அவதார ஸ்தலங்கள், அபிமான ஸ்தலங்கள் நமக்கு மிக முக்யம். அங்கு கைங்கர்யம் செய்ய ப்ராப்தம் இல்லையேல் அடிக்கடி சென்று சேவித்து வருதலும் பிற்காலத்தில் அவ்வாறு வாழ்வதற்கு முயற்சி செய்தலும் நன்மை பயக்கும்.
  12. ஸ்ரீவைஷ்ணவருக்கு திவ்ய ப்ரபந்தங்கள் உயிர்நாடி. பாசுரங்களைக் கற்றலும், பூர்வாசார்ய வ்யாக்யானங்களை அறிதலும்,  அறிந்து அதன்படி வாழ்வில் நடத்தலும் மிக முக்கியம். இத்தால் லௌகிக வாழ்வில் பற்றின்மை வரும், எம்பெருமானிடமும் அவன் அடியாரிடமும்  ஆசை வளரும்.
  13. நமக்கு நம் பூர்வாசார்யர்களின் வாழ்க்கை வைபவங்களே வழிகாட்டியும் ஆதர்சமும் ஆகும். எல்லாப் பொருள்களிடத்தும் எவ்வாறு கருணையோடும் மரியாதையோடும் வாழவேண்டும் என அவர்கள் காட்டியுள்ளனர். இன்றைய வாழ்வியல் குழப்பங்களுக்கு அங்கே விடைகள் உண்டு.
  14. பூர்வாசார்ய க்ரந்தங்களை அடிக்கடி சேவிப்பது அவச்யம். இவையே நமக்குக் கிடைத்துள்ள அழியாப் பெருநிதி. வேதாந்தம், திவ்யப்ரபந்தம் , ஸ்தோத்ர க்ரந்தங்கள், சரித்ரங்கள் என்னும் பல வடிவில் உள்ள  இவற்றில் ஒருமுறை அவகாஹித்தால் நம்மால் மீண்டு எழ முடியாத இனிமை இவற்றிலுண்டு. மேலும் விவரங்களுக்கு நம் இணைய தளம் பார்க்கவும்: https://koyil.org/index.php/portal/ .
  15. மூலமும் வ்யாக்யானங்களுமான காலக்ஷேபங்கள்/சொற்பொழிவுகள் கேட்டல் அவசியம். அப்போதுதான் பூர்வாசார்யர்கள் திருவுளக் கருத்து நமக்குத் தெளிவாகும். இப்போது இவை குறுந்தகடுகளாகக் கிடைக்கின்றன. இணைய தளங்களில் உள்ளன. குறுந்தகடுகளிலோ, இணைய தளத்திலோ கேட்டாலும் க்ரமமான ஆடை அணிந்து பணிவுடன் (நேரில் கேட்பது போல) இவற்றைக் கேட்கவேண்டும்.
  16. “கைங்கர்யம் இன்றேல் கிங்கரத்வம் இல்லை” என்னும் சாஸ்த்ரம் கூறுகிறது. ஆகவே ஸ்ரீமந் நாராயணன், ஆழ்வார்கள், ஆசார்யகள் விஷயமாக ஏதாவதொரு கைங்கர்யம் சரீரத்தால்/பணத்தால்/புத்தியால் அவசியம் நடக்க வேண்டும். இதுவே பகவான், பாகவதர் இருவரிடமும் நம்மை வைக்கும்.
  17. எம்பெருமான், ஆழ்வார், ஆசார்யர்கள் பற்றிய விஷயங்களை ஸஹ ஸ்ரீ வைஷ்ணவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். இவ்வாறு பகிர்வது கேட்பவர்களுக்கும் சொல்லுபவர்களுக்கும் ஆனந்தத்தைக் கொடுக்கும். நம் பூர்வர்களும் தங்களின் பல உபதேச க்ரந்தங்களின் வாயிலாக இவ்வாறு ஞானத்தைப் பகிர வேண்டியதின் அவச்யத்தை எடுத்துக் காட்டியுள்ளார்கள். இவற்றைத் தக்கார் துணையோடு பயிலவேண்டும்.
  18. இறுதியாக, ஆத்மாவுக்கு ஸ்வரூபானுகுணமான பரமபத ப்ராப்திக்கு மிக்க ஆசையோடிருக்க வேண்டும். ஆழ்வார்களும் ஆசார்யர்களும் இருக்கும் நாள் வரை எம்பெருமானுக்கும் அடியார்க்கும் இங்கே தொண்டு செய்து, பின்பு பரமபதத்திலும் கைங்கர்யம் அன்றோ விரும்பி வேண்டிப் பெற்றார்கள்!

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://granthams.koyil.org/2016/01/simple-guide-to-srivaishnavam-important-points/

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

2 thoughts on “ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – அன்றாடம் அனுஷ்டிக்கவேண்டியவை”

  1. திருவாராதனம் துடங்கும் போது ஸேவிக்கும் 22-ஆவது ஸ்தோத்ர ரத்னம் “ந தர்ம நிஷ்டோஸ்மி”. நிலைபெற கர்ம நிஷ்டை நின்றிலேன், ஞானமில்லேன் இத்யாதி. தலைவா நின் பாத மூலம் சரண் எனப்பற்றினேனே.

    Reply

Leave a Comment