யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் – எளிய தமிழாக்கம் – பகுதி 2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் – எளிய தமிழாக்கம்

<< பகுதி 1

ஒரு நாள் நம்பிள்ளை அன்றைய தினத்தின் காலக்ஷேபத்தை முடித்து தனியாக இளைப்பாறுகையில் அவருடைய சிஷ்யரான வடக்குத் திருவீதிப்பிள்ளையின் தாயாரான அம்மீ அவர் திருவடிகளில் பணிந்து நின்றார். பரிவோடு நோக்கிய ஸ்வாமி அவரின் குடும்ப க்ஷேமங்களை விசாரித்தார். அவர்கள் உரையாடல் கீழ்க்கண்டவாறு:

“நான் தங்களிடம் கேட்கப் போவது தான் என்ன? என் மகனை வழிப்படுத்த முடியவில்லை”

அது ஏன்?

“நீர் அவனுக்கு ஒரு பெண்ணை மணம் செய்து வைத்தீர், நினைவிருக்கிறதா ? அவள் பருவம் அடைந்து விட்டாள். அவர்கள் இல்லற வாழ்வுக்கான ஏற்பாடுகள் செய்து வைத்தோம். அவன் கூக்குரல் கேட்டு சென்று பார்த்தோம் உள்ளே அவன் வேர்வை மேலிட அழுத வண்ணம் இருந்தான். என்ன நடந்தது என்று வினவ அவன் கூறினான் ‘அம்மா இந்த பெண் ஒரு பாம்பாக எனக்குத் தோன்றுகிறாள். நான் பயந்து போனேன். அவள் இப்பொழுதும் அவ்வாறு தான் இருக்கிறாள்’. அதிர்ச்சியடைந்து நான் அவளை அங்கிருந்து போகுமாறு சொன்னேன். இவ்வாறு மற்றோர் முறையும் நடந்தது.”

மனம் விட்டு சிரித்த பிள்ளை “அதனால் உங்களுக்கு என்ன” என்று கேட்டார்.

“நீங்கள் இவ்வாறு சொல்லலாமா ? அந்தப் பெண் சுகமாக வாழ வேண்டாமா? குலம் தழைக்க அவர்களுக்கு ஒரு ஆண் பிள்ளை வேண்டுமே? ” இதைக் கேட்ட அவள் அவர் திருவடிகளில் மீண்டும் பணிந்து கவலையுடன் நின்றாள்.

பிள்ளை அவளிடம் பரிவோடு கூறினார் “அம்மீ! எழுந்திரும். சோகப்படாதீர். தக்க தருணத்தில் உங்கள் மருமகளை அழைத்து வாருங்கள்” அம்மீயும் அப்பெண்ணை கோஷ்டிக்கு ஒரு நாள் அழைத்து வந்தாள். நம்பிள்ளை தம் திருக்கரங்களால் அந்தப் பெண்ணின் வயிற்றைத் தடவி “நீ என் போன்ற பிள்ளையை பெறுவாய்” என்று கூறினார்.  வடக்குத் திருவிதிப்பிள்ளையை அழைத்து “உமது பயம் தீர்ந்தது. நம் ஶாஸ்திரங்கள் தள்ளத்தக்கவை என்று ஏற்படுத்தியவற்றில் உமக்குள்ள வைராக்யத்திற்கு ஒரு குறைபாடும் நேராது. எம் சொல்படி நீர் இன்றிரவு அவளுடன் இரும்” என்று கூறினார்.

நாட்கள் செல்ல அந்தப் பெண் கருவுற்று ஐப்பசி மாதத்தில் ஸ்ரவண நக்ஷத்திரத் திருநாளில் ஒரு ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள். குழந்தை பிறந்த பன்னிரண்டு நாட்கள் கழித்து நம்பிள்ளையின் (லோகாச்சாரியர்) தனித்திரு நாமத்திற்கு இணங்க அந்த குழந்தைக்கு லோகாச்சாரியர் பிள்ளை என்று நாமம் சூட்டினர். குழந்தைக்கு ஒரு வயது பூர்த்தி ஆனவுடன் நம்பெருமாளை சேவிப்பதற்காக பல்லக்கு நாதஸ்வரம் முதலான கொண்டாட்டங்களுடன் குழந்தையை அழைத்து சென்றனர்.

குழந்தையைக் கண்டு மகிழ்ச்சியுற்று தம் தீர்த்தம், ஸ்ரீ சடகோபம், சந்தனக்குழம்பு, மாலைகளை ப்ரசாதித்த நம்பெருமாள் அர்ச்சகர் மீது அவேசித்து “உம் போன்ற பிள்ளையை அருளினீர்; இப்போது நம் போன்ற பிள்ளையை அருளும்” என்று நம்பிள்ளையிடம் ஆணையிட, அவரும் அவ்வண்ணமே ஒத்து அவர் அனுக்கிரஹத்தினால் அழகிய மணவாள பெருமாள் நாயனார் பிறந்தார்.

இப்படி நம்பிள்ளையின் அனுக்கிரகத்தினால் அவதரித்த பிள்ளை லோகாச்சார்யரும் பிள்ளை லோகாச்சார்யரின் பரிவோடு அவர் தம்பியும் ஒன்றாக வளர்ந்தனர். அவர்கள் இருவரும் நடந்து செல்லும் பொழுது ஸ்ரீரங்கத்துவாசிகள் ஒன்றாக நடந்து செல்வது ராம லக்ஷ்மணரோ அன்றி கண்ணனும் பலராமனுமோ என்று வியப்பர். இந்தக் கருத்தை பிள்ளை லோகம் ஜீயர் கீழ்க்கண்ட வெண்பாவில் தெரிவிக்கிறார்.

தம்பியுடன் தாசரதியானும் சங்கவண்ண
நம்பியுடன் பின்னடந்து வந்தானும் – பொங்குபுனல்
ஓங்கு முடும்பை உலகாரியனும் அறம்
தாங்கு மணவாளனுமே தான்

[உயர்ந்த முடும்பை வம்சத்தில் உதித்த பிள்ளை லோகாசார்யரும் அவருடைய தம்பி அழகிய மணவாள பெருமாள் நாயனாரும் ராமரும் லக்ஷ்மணரும் போன்றும் சங்கு நிறம் கொண்ட பலராமனும் கண்ணனும் போன்றும் நடந்து சென்றனர்).

ஆதாரம் – https://granthams.koyil.org/2021/07/17/yathindhra-pravana-prabhavam-2-english/

அடியேன் கீதா ராமானுஜ தாஸ்யை

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org

1 thought on “யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் – எளிய தமிழாக்கம் – பகுதி 2”

Leave a Comment