சரமோபாய நிர்ணயம் 2 – திருமுடி ஸம்பந்தம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: சரமோபாய நிர்ணயம் << 1 – தனியன்கள், தொடக்கம் நாதமுனிகளுக்கு ஆழ்வார் திருத்திரை வளைத்துத் திருவாய்மொழி ப்ரஸாதித்து அருளுகிற அளவிலே “பொலிக பொலிக” வந்தவாறே பூதபவிஷ்யத்வர்த்தமான காலத்ரயபர்யவஸாயி ஜ்ஞாநமுடையராகையாலே உடையவருடைய திரு அவதாரத்தைக் கடாக்ஷித்தருளி “கலியும் கெடும் கண்டு கொண்மின்” என்று “இந்த ப்ரபந்ந குலத்திலே ஒரு மஹானுபாவர் திரு அவதரிக்க போகிறார். அவாராலே நாடு அடங்க வாழப்போகிறது” என்று நாதமுனிக்கு அருளிச் … Read more

சரமோபாய நிர்ணயம் 1 – தனியன்கள், தொடக்கம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: சரமோபாய நிர்ணயம் நாயனாராச்சான் பிள்ளையின் தனியன்௧ள் ஸ்ருத்யர்த்த ஸாரஜநகம் ஸ்ம்ருதிபாலமித்ரம் பத்மோல்லஸத் ப௧வதங்௧ரி புராணபந்தும் | ஜ்ஞாநாதி ராஜம் அபயப்ரத ராஐபுத்ரம் அஸ்மத் குரும் பரமகாருணிகம் நமாமி || श्रुत्यर्थ सारजनकं स्मृतीबालमित्रम पद्मोंल्लसद् भगवदङ्ग्रि पूराण बन्धुम | ज्ञानाधिराजम अभयप्रदराज पुत्रम अस्मदगुरुम परमकारुणिकं नमामी || (வேதப்பொருள்களின் ஸாரத்தைக் கடைந்து எடுப்பவராய் ஸ்ம்ருதி௧ளாகிற தாமரைகளுக்கு இளஞ்சூரியனாய், ஶ்ரீய:பதியின் திருவடிகளுக்குப் … Read more

வரதன் வந்த கதை 15-2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 15-1 திருவத்தி மாமலையில் என்றென்றும் நின்று “பின்னானார் வணங்கும்  சோதியாய்” பேரருளாளன் திகழ்ந்திட வேண்டும் என்று பிரமன் இறைஞ்சிடவும், அப்படியே ஆகட்டும் என்று திருவாய் மலர்ந்தருளினான் பகவான் ! பிரமனுக்குக் காஞ்சியிலேயே தங்கிவிட ஆசை ! இந்த ஆரமுதைப் பருகிக் களித்தவன்; மீண்டும் ஸத்யலோகம் செல்ல மனமில்லாதவனாய்,  “வேழமலை வேந்தனிடம் ” நித்தியமும் கைங்கர்யங்களைச் செய்து … Read more

வரதன் வந்த கதை 15-1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 14-3 அத்திகிரி அமலன் அயன் முகம் நோக்கிப் பேசத் தொடங்கினான் !! பிள்ளாய் பிரமனே, பற்பல சிரமங்களை அனுபவித்தும் மனம் தளராமல் வேள்வியை நன்கு நடத்தி முடித்தாய் ! உன் தளராத உள்ளமும் உறுதியும் கண்டு பூரிப்படைந்தேன் நான்! என்ன வரம் வேண்டுமோ கேட்டுப் பெற்றுக் கொள் ! தருவதற்கு நான் தயாராய் இருக்கிறேன் என்றான் … Read more

வரதன் வந்த கதை 14-3

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 14-2 பெருவிசும்பருளும் பேரருளாளன் புன்முறுவல் பூத்தபடி பிரமனுடைய தோத்திரங்களை ஏற்றுக் கொண்டிருந்தான் ! பெருமானுடைய பெருங்கருணையை எண்ணியபடி பிரமனும் அவனைப் போற்றிக் கொண்டிருந்தான் ! இறைவா! ஆமுதல்வனே! உன்னை நம்புபவர்களை நீயே வழி நடத்துகின்றாய் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி விட்டது! தனி நின்ற சார்விலா மூர்த்தீ! அடியார்களிடம் உனக்குத்தான் எத்தனை அன்பு. பக்த … Read more

வரதன் வந்த கதை 14-2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 14-1 பொன்மலை உதித்தாற் போல் , புண்ணிய கோடி விமானம் தோன்ற,  அதனுள் (ஒளியில்) ஸூர்யனும் தோற்றுப் போகக் கூடிய அளவிற்கு; ஒளி வெள்ளமாய் வரதன் வந்துதித்தான் !! “சைத்ர மாஸி ஸிதே பக்ஷே சதுர்தச்யாம் திதௌ முனே: சோபனே ஹஸ்த நக்ஷத்ரே ரவிவார ஸமந்விதே | வபாஹோமே ப்ரவ்ருத்தே து ப்ராதஸ் ஸவந காலிகே … Read more

வரதன் வந்த கதை 14-1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 13 உன்னுடைய வடகரையில் நான் நித்தியமாக வாஸம் செய்யப் போகிறேன் என்று வேகாஸேதுப் பெருமான் சொன்னதை கவனமுடன் கேட்டான் பிரமன் ! மேலும் உனக்கான பரிசு விரைவில் என்று அவன் திருவாய் மலர்ந்தருளியதும் அவன் ( பிரமன் ) நெஞ்சில் நிழலாடின ! தேவர்களுக்கும் ரிஷி முனிவர்களுக்கும் ஏற்பட்ட (யாக பச ) பிரச்சினையும், தான் … Read more

வரதன் வந்த கதை 13

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 12-2 இதோ காஞ்சியை நோக்கிப் பாய்ந்து வருகின்றாள் வேகவதி .. இரண்டிடத்தில் அணையாய்க் கிடந்து, இறைவன் ; தன்னைக் காட்டிடக் கண்ட கலைமகள் மீண்டுமொரு முறை அவனைத் தரிசித்திட ஆசைப்பட்டாள். அவனைத் தரிசிக்க இச்சை (ஆசை) தானே தகுதி ! “கூடுமனமுடையீர்கள் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ” என்றும் “போதுவீர் போதுமினோ” என்றும் தமப்பனாரும் திருமகளாரும் (பெரியாழ்வாரும், … Read more

வரதன் வந்த கதை 12-2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 12-1 பிரமனுடைய வேள்வியைக் குலைத்திட, ஸரஸ்வதி வேகவதியாய் உருமாறி, கடுங்கோபத்துடன் விரைந்து வந்து கொண்டிருந்தாள் ! சுக்திகா, கநகா, ஸ்ருப்ரா, கம்பா, பேயா, மஞ்சுளா, சண்டவேகா என்கிற ஏழு ப்ரவாஹங்களுடன் (பெருக்குகளுடன்) அந்நதி பாய்ந்து வந்தது ! கங்கையை விட வேகமாகப் பெருகினபடியால் “வேகவதி” என்று இந்நதி பெயர் பெற்றதாம் ! அனைவரும் கலக்கமுற்று என்ன … Read more

வரதன் வந்த கதை 12-1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரதன் வந்த கதை << பகுதி 11-3 எம்பெருமான் வேள்வியினால் மகிழ்ச்சியடைகிறான் ! யஜ்ஞம் என்றால் அவனுக்கு அத்தனை இட்டமாம் ! அவ்வளவு ஏன் ?! அவனுக்கே “யஜ்ஞ:” என்று திருநாமம் உண்டு! – தானே யஜ்ஞமாயுள்ளவன் என்பது பொருள் .. “அஹம் க்ரதுரஹம் யஜ்ஞ: ஸ்வதாஹம் அஹமௌஷதம் | மந்த்ரோஹம் அஹமேவாஜ்யம் அஹமக்நிரஹம் ஹுதம் || ” ( கீதை 9-16 … Read more