வேதார்த்த ஸங்க்ரஹம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

வேதங்களின் உட்பொருள் அறிதல்

வேதார்த்த ஸங்க்ரஹம்” எனும் தமது முதல் நூலில் ஸ்வாமி எம்பெருமானார் வேதங்களின் உட்பொருளை அறிந்துகொள்வது பற்றி ஓர் உபன்யாசம் அருளியுள்ளார். வேதங்களின் உட்பொருளைப் பற்றிய ஸ்வாமியின்  விளக்கங்கள் இதில் உள்ளன. மிகத் தெளிவான சுருக்கமான முறையில் வேதக் கோட்பாடுகள், தத்வம், மதம் முதலியவற்றை இதில் காட்டியுள்ளார். வேதத்தின் விவாதாஸ்பதமாகவுள்ள, பரஸ்பரம் முரண்பட்டுள்ளன போலத் தோன்றுமவற்றை மாறுபாடுகளும் முரண்களுமின்றிப் பொருந்தவிட்டுச் சரியாகப் புரிந்துகொள்ள வழி காட்டுகிறார். ஆகவே, இந்நூல் வேதம் அறிய விரும்புமவர்க்குப் பெரிய அளவில் முக்யமானதாகும். இந்நூல் திருவேங்கடமுடையானின் திருமலையில் அருளிச் செய்யப் பட்டது என்பது வைணவ மரபு.

எம்பெருமானாரைத் துதித்து, இதை நாம் தொடங்குவோம்.

 

இராமானுச வணக்கம்

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்மருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேனே|
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ: ராமானுஜஸ்ய  சரணௌ சரணம் ப்ரபத்யே ||

இதன் பொருளாவது:  யாரொருவர் எனது ஆசார்யரோ, எல்லாத் தெய்வீக குணங்களும் நிறைந்தவரோ, கருணைக்கடலோ, யாரொருவர் அச்யுதனின் திருவடித்   தாமரைகளில் கொண்ட பக்தியால் வேறு எல்லாவற்றிலும் பொன்னைக் கண்டவர் புல்லை விடுவதுபோல் விருப்பமற்றவரோ அந்த இராமாநுசரின் திருவடிகளைப் புகலாக அடைந்தேன்.

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம் : https://granthams.koyil.org/vedartha-sangraham-english/

வலைத்தளம் – https://granthams.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org