பங்குனி உத்ரமும் எம்பெருமானாரும்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவர்களுக்குப் பங்குனி உத்ரம் பலவகைகளில் ஒரு மிகச்சிறந்த தினம். அதுவே பெரியபிராட்டியார் ஸ்ரீரங்கநாயகி அவதரித்த திருநாள். இந்நன்னாளில் நம்பெருமாள் தாயார் ஸந்நிதிக்கு எழுந்தருளி, தாயாருடன் மிக விஸ்தாரமாகத் திருமஞ்சனம் கண்டருளுகிறார். இந்நன்னாளே பெருமாள் சீதாப்பிராட்டியை மணம் புரிந்தநாள். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரங்கமன்னார் திருமணமும் இந்நாளே. பட்டரின் பேரன்பிற்குரிய சிஷ்யர் மற்றும் நம்பிள்ளையின் ஆசார்யர், நஞ்சீயர் திருவவதரித்ததும் இந்நாளே. … Read more