ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
“அஜாயமான: பஹுதா விஜாயதே” (பிறப்பற்ற பகவான் பல பிறவிகளை எடுக்கிறான்) என்று வேதமும், “பஹூனிமே வ்யதீதானி ஜந்மானி” (எனக்கும் பல பிறவிகள் ஏற்பட்டுள்ளன) என்று வேதத்தால் அறியப்படும் எம்பெருமான் தானும், “சன்மம் பல பல செய்து” என்று வேத தாத்பர்யத்தை அறிந்த வைதிகோத்தமரான நம்மாழ்வாரும் எம்பெருமான் பல அவதாரங்களை எடுக்கிறான் என்பதைக் காட்டியுள்ளார்கள். நாம் பிறந்து பிறந்து துன்பப்படுவது நம்முடைய கர்மங்களாலே. ஆனால் எம்பெருமான் தன்னுடைய கருணையினாலே, நம்மை உயர்த்துவதற்காகப் பிறப்பதனால், அவனுக்கு ஒவ்வொரு பிறவியிலும் ஒளி கூடுகிறது என்பது சாஸ்த்ரமும் ஆழ்வார்களும் காட்டியுள்ள உயர்ந்த விஷயம்.
இப்படிப்பட்ட அவதாரங்களில் பத்து அவதாரங்கள் ப்ரதானமாகக் கொண்டாடப்படுகின்றன. திருமங்கை ஆழ்வார் இதை “மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய்த் தானாய்ப் பின்னும் இராமனாய்த் தாமோதரனுமாய்க் கற்கியும் ஆனான்” என்று அற்புதமாக ஒரே வாக்யத்தில் காட்டியுள்ளார். இவற்றிலும், ஸ்ரீ ராமாவதாரத்துக்கும் க்ருஷ்ணாவதாரத்துக்கும் மிகுந்த முக்கியத்துவம் பெரியோர்களாலே சொல்லப்படுகிறது. அதிலும் க்ருஷ்ணாவதாரம் வெகு ஸமீபத்திலே, அதாவது த்வாபர யுகத்தின் இறுதியிலே நடந்ததால், ரிஷிகளும், ஆழ்வார்களும், ஆசார்யர்களும் மிகவும் ஈடுபட்டு இருந்தாரகள். அதிலும் கண்ணன் எம்பெருமானின் சிறு வயது லீலைகளில் ஈடுபடாதவர்கள் எவருமில்லை. கல் நெஞ்சுக்காரர்களையும் உருக்கக் கூடிய அற்புதமான பல செயல்களை எம்பெருமான் செய்தான்.
“என்னுடைய பிறப்பையும் லீலைகளையும் உண்மையாக அறிந்தவர்கள் என்னையே அடைவார்கள்” என்று கண்ணன் எம்பெருமான் தானே ஸ்ரீ பகவத் கீதையில் அருளியுள்ளான். ஆகையாலே க்ருஷ்ணாவதாரத்தை, ஸ்ரீபாகவதத்தில் தசம ஸ்கந்தத்தில் (பத்தாம் காண்டத்தில்) காட்டிய க்ரமத்தில், நம் பூர்வர்கள் காட்டியுள்ள பல முக்கியமான தாத்பர்ய அர்த்தங்களோடு சேர்த்து, எளிய நடையில், வரும் நாள்களில் அனுபவிக்கலாம்.
- 1 – பிறப்பு
- 2 – தொகுப்பு
- 3 – பூதனை வதம்
- 4 – சகடாஸுர வதம்
- 5 – த்ருணாவர்த்தாஸுர வதம்
- 6 – வாயுள் வையகம் கண்டாள் யசோதை
- 7 – வெண்ணெய் திருடி அகப்படுவது
- 8 – யமளார்ஜுன சாபவிமோசனம்
- 9 – வ்ருந்தாவனத்துக்குச் செல்லுதல், மேலும் சில அஸுர வதம்
- 10 – ததிபாண்டன் பெற்ற பேறு
- 11 – அகாஸுர வதம்
- 12 – ப்ரஹ்மாவின் கர்வத்தைப் போக்கிய லீலை
- 13 – தேனுகாஸுர வதம்
- 14 – காளிங்க நர்த்தனம்
- 15 – ப்ரலம்பாஸுர வதம்
- 16 – மாடு கன்றுகளை மேய்த்தல்
- 17 – குழல் ஊதுதல்
- 18 – வஸ்த்ராபஹரணம்
- 19 – ரிஷிபத்னிகள் பெற்ற பேறு
- 20 – கோவர்த்தன லீலை
- 21 – ராஸ க்ரீடை
- 22 – குடக் கூத்து ஆடுதல்
- 23 – அரிஷ்டாஸுர, கேசி, வ்யோமாஸுர வதங்கள்
- 24 – நப்பின்னைப் பிராட்டி
- 25 – கம்ஸனின் பயமும் சூழ்ச்சியும்
- 26 – அக்ரூரரின் யாத்ரை
- 27 – வடமதுரையில் கண்ணனின் அனுக்ரஹமும் நிக்ரஹமும்
- 28 – குவலயாபீட வதம்
- 29 – மல்லர்களை ஜயித்தல்
- 30 – கம்ஸ வதம்
- 31 – தேவகி மற்றும் வஸுதேவரை சிறையிலிருந்து விடுவித்தல்
- 32 – ஸாந்தீபனி முனியிடம் குருகுல வாஸம்
- 33 – த்வாரகா நிர்மாணம், முசுகுந்தனுக்கு அனுக்ரஹம்
- 34 – ருக்மிணி கல்யாணம்
- 35 – ஸ்யமந்தக மணி லீலை, ஜாம்பவதி மற்றும் ஸத்யபாமா கல்யாணம்
- 36 – ப்ரத்யும்னனின் பிறப்பும் சரித்ரமும்
- 37 – காண்டவ வன எரிப்பு, இந்தரப்ரஸ்த நிர்மாணம்
- 38 – மேலும் ஐந்து மஹிஷிகள்
- 39 – நரகாஸுர வதம்
- 40 – பாணாஸுர வதம்
- 41 – பௌண்ட்ரக வாஸுதேவன் மற்றும் சீமாலிகன் வதம்
- 42 – த்வாரகையில் இருப்பு மற்றும் நாரதரின் மகிழ்ச்சி
- 43 – ஜராஸந்த வதம்
- 44 – சிசுபால வதம்
- 45 – சால்வ மற்றும் தந்தவக்ர வதம்
- 46 – ஸுதாமாவுக்கு அனுக்ரஹம்
- 47 – த்ரௌபதிக்கு அனுக்ரஹம்
- 48 – பாண்டவ தூதன் – பகுதி 1
- 49 – விதுரருக்கு அனுக்ரஹம்
- 50 – பாண்டவ தூதன் – பகுதி 2
- 51 – அர்ஜுனனுக்கும் துர்யோதனுக்கும் யுத்தத்தில் உதவி
- 52 – கீதோபதேசம்
- 53 – மஹாபாரத யுத்தம் – பகுதி 1
- 54 – ஸஹஸ்ரநாமம்
- 55 – மஹாபாரத யுத்தம் – பகுதி 2
- 56 – மஹாபாரத யுத்தம் – பகுதி 3
- 57 – பரீக்ஷித்துக்கு அனுக்ரஹம்
- 58 – வைதிக புத்ரர்களை மீட்கை
- 59 – பரமபதத்துக்குத் திரும்புதல்
- 60 – முடிவுரை
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://granthams.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – https://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org